என் மலர்
நீங்கள் தேடியது "இடமாற்றம்"
- 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
- பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பாரதி அண்ணாநகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருப்பவர் வனிதா. உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் சேதுமுருகன். இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
வாரத்தில் 1 நாள் கூட தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாணவர்களின் கோரிக்கை குறித்து ஆசிரியர்களோ, பெற்றோர்களோ புகார் அளிக்கச் சென்றால் அங்கு யாரும் இருப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
தலைமை ஆசிரியைக்கு உடந்தையாக உதவி தலைமை ஆசிரியரும் செயல்பட்டதால் அவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மாதம் 20-ந் தேதி மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது பொதுமக்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகாருக்கு உள்ளான வில்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனையடுத்து தலைமை ஆசிரியை வனிதாவையும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகனையும் பணி இடமாற்றம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியை வனிதா அடுக்கம் ஊராட்சி சாமக்காட்டு பள்ளம் பகுதியில் உள்ள பள்ளிக்கும், உதவி தலைமை ஆசிரியர் சேதுமுருகன் பூண்டி பகுதியில் உள்ள பள்ளிக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
- தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நிலை குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.
- இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் திக்காவன் கிராமத்தை சேர்ந்தவர் அசோகா பீமாராய புடபக் (54). இவர் சேடம் நகராட்சியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக இவர் மரணமடைந்தார்.
மறுநாள் 13-ந் தேதி அவரது கிராமத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் அவருடன் பணியாற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் அவர் இறந்து 6 மாதம் ஆன நிலையில் கடந்த 9-ந் தேதி அவரை குடகு மாவட்டம் மடிக்கேரி நகராட்சிக்கு இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரி இறந்து 6 மாதம் கழித்து அவருக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட சம்பவம் நகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- ஆசிரியர் சீனிவாஸ் தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார்.
- கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.
ஆசிரியப்பணி அறப்பணி... அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள், நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள்.
ஒரு மாணவனோ, மாணவியோ தங்களது பெற்றோர்களைவிட அதிக நேரம் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே அதிகம் உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
பல ஆசிரியர்கள் தங்கள் பணியை மாணவர்களுக்காக அர்ப்பணித்து, மாணவர்களிடம் மட்டுமல்ல அந்த பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்று விடுகிறார்கள்.
குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள், வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுப்பதையும் தாண்டி, ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.
இதனால் அவர்கள் அந்த பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும்போதோ, பணி ஓய்வு பெற்று செல்லும்போதோ மாணவர்கள் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல முறை நடந்து உள்ளது.
அதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் பொனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜே.சீனிவாஸ் (வயது53).
இவர் அந்த பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலனில் அதிக கவனம் எடுத்து பணியாற்றினார். அவர் பணியில் சேர்ந்தபோது அந்த பள்ளியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்தனர்.
தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.
தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார். மாணவர்களும் அவரை தங்களின் பாசத்துக்குரியவராகவே பார்த்தனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியர் சீனிவாஸ் அக்கபெல்லிகுடாவில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் பொனகல் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த அந்த பிஞ்சு மாணவர்கள் மிகவும் தவித்துபோய்விட்டனர்.
அவரை பிரிய மனமில்லாமல் அழுதனர். மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அதற்கெல்லாம் வழியில்லை. இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.
ஆசிரியர் சீனிவாசின் பிரிவால் ஏங்கிய மாணவர்களை தேற்ற முடியாமல் இருந்த பெற்றோர்கள் ஒரு முடிவு செய்தனர்.
ஆம்... அந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த 250 மாணவர்களில் 133 பேர், அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றுக்கொண்டு, 3 கி.மீ. தொலைவில் அக்கபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில மக்களில் பலர், இப்படியும் ஒரு ஆசிரியரா... நமக்கு கிடைக்கவில்லையே என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
- உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
- மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும்
சென்னை:
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை குறைத்து பணி நிரவல் கலந்தாய்வை பள்ளிக் கல்வி துறை நடத்துகிறது.
பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்பு அவசியமாக உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பயிற்சி களமாக பள்ளி மைதானங்கள் விளங்கி வருகின்றன.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் உடற்கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
250 முதல் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 700 மாணவர்களாக அரசு உயர்த்தி உள்ளது.
1997-ம் ஆண்டு அரசாணையின்படி உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 250-ஐ தாண்டும்போது ஒரு உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார்.
ஒவ்வொரு கூடுதல் 300 மாணவர்களுக்கும் ஒரு உடற்கல்வி ஆசிரியர். அதிகபட்சமாக 3 பேர் வரை நியமிக்கப்படுவார்கள். மேல் நிலைப்பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குனர் நியமிக்கப்படுகிறார்.
அரசு பள்ளிகளில் போதிய அளவு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் காலியாக இருந்த நிலையில் அந்த இடங்களுக்கு புதிய உத்தரவின் படி கூடுதலாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை இடமாற்றம செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது 700 மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் கொண்ட உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
700-க்கும் அதிகமாக மாணவர்கள் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 2 உடற்கல்வி ஆசிரியர்கள், 701 முதல் 1500 வரை உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 என இரண்டு பேருக்கு அனுமதி.
1500-க்கும் மேல் உள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 2 உடற் கல்வி ஆசிரியர்கள் ஒரு உடற்கல்வி இயக்குனர் நிலை-2 அல்லது நிலை-1 என மொத்தம் 3 பேர் அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது மாணவர்கள் இடையே போதைப்பொருள், புகையிலை பயன்பாடு இருக்கின்ற நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை குறைப்பதன் மூலம் வகுப்புகள் குறையக் கூடும். இது மாணவர்களின் கவனச் சிதறலுக்கு ஆளாகும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது.
- புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்பட உள்ளது. இதற்கான மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதையொட்டி எழும்பூர் வடக்கு பகுதியில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்டர்கள் தற்போது தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டியுள்ள மணியம்மை சிலை அருகில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தையொட்டி இந்த டிக்கெட் கவுண்டர்கள் இன்று முதல் இயங்கி வருகிறது.
- 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது.
- காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்:
பிரின்ஸ்டவுன் நகரில் புகழ்பெற்ற டார்ட்மூர் மத்தியச்சிறைச்சாலை உள்ளது. 640 ஆண் கைதி அறைகள் கொண்ட இந்த சிறையில் கடந்த சில மாதங்களாக நச்சு கதிர்வீச்சு அலைகள் வீசப்படுவது கண்டறியப்பட்டது. சோதனையின்போது சிறை வளாகத்தில் ரேடான் என்னும் கதிரியக்க தனிமத்தின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதனால் காற்றில் அளவுக்கதிமான நச்சு கதிர்வீச்சு அலைகள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறைச்சாலையில் இருந்து 194 கைதிகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு வேறுசிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைவளாகத்தில் பரவி இருக்கும் ரேடான் அளவை குறைக்கும் பணி நடந்து வருகிறது.
- பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
- வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
- வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
சென்னை:
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குனர் பிரதாப், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் துணை செயலாளராக மாற்றப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனர் ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் (கோவை) இணை கமிஷனர் காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டார். அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
- இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள வெள்ளக்கல்பட்டி ஊராட்சி வெள்ளைக் கரடு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அந்த கடையை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு மாற்றம் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் நெருஞ்சிபட்டி, மாங்குப்பை ஆகிய கிராம பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கூடாது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவர். தற்போது உள்ள இடத்திலேயே டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனை வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.கண்ணன், துணைத் தலைவர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் பெற்றுக்கொண்டு அரசுக்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி இடமாற்றம்
- கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அதிரடி
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
அரியலூர் மாவட்டம் அரியலூர் வருவாய் வட்டாட்சியர் கண்ணன், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும், அரியலூர் மாவட்ட கலெக்டர் நிலம் எடுக்கும்பிரிவு நேர்முக உதவியாளர் ஆனந்தவேல் அரியலூர்வருவாய் வட்டாட்சியராகவும், உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் துரை அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனி வட்டாட்சியராகவும் அரியலூர்தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் முத்துலெட்சுமி அரியலூண மாவட்ட கலெக்டர் நேர்முகஉத வியாளர்(நிலஎடுக்கும் பிரிவு) வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டு உளளனர்.
இதே போல ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் வேலுமணி, செந்துறை வருவாய் வட்டாட்சியராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலை தனிவட்டாட்சியர் கலிலுர்ரகுமான் உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சி யராவும் மாவட்ட கலெக்டர் அலுவலக உசூர் தலைமை உதவியாளர் செல்வம் உடையார்பாளையம் வட்ட வழங்கல் அலுவலராகவும் ஆண்டிமடம் வட்ட வழங்கல் அலுவலர் ராஜகோபால் ஆண்டிமடம் தேர்தல்பிரிவு துணைவட்டா ட்சியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், ஆண்டிமடம் தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் அய்யப்பன் மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சி யராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு துணைவட்டாட்சியர் பழனிவேல் அரியலூர்வட்டவழங்கல் அலுவலராகவும், செந்துறை வட்டவழங்கல் அலுவலர் பாஸ்கர் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், அரியலூர்கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் இளவரசு செந்துறை வட்டவழங்கல் அலுவலராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார்.
- குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார் பகுதியை சேர்ந்த வர் வெங்கடேசன்(வயது42). இவரது மனைவி பராசக்தி(32). சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த பணி பிடிக்காத வெங்கடேசன், தான் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் பணி வழங்குமாறு அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் இதை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வெங்கடேசன் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பராசக்தி கொடுத்தபுகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டுபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு ப்பதிவு செய்து வெங்க டேசனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.