search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா"

    • சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார்.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

    ஆந்திர மாநிலம் அனகாபல்லியைச் சேர்ந்தவர் கொனத்தலா விஜய், 2012-ம் ஆண்டு முதல் சீனாவில் வசித்து வருகிறார். இவர் யோகா ஆசிரியராகவும் நடன அமைப்பாளராகவும் உள்ளார்.

    சீனாவில் யோகா மற்றும் நடனப் பள்ளி நடத்தி வருகிறார். 2021-ம் ஆண்டில், யோகா பிரிவின் கீழ் கின்னஸ் உலக சாதனைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.

    அஷ்டவக்ராசனம், மயூராசனம் மற்றும் பகாசனம் போன்ற மேம்பட்ட ஆசனங்களை உள்ளடக்கிய மிக நீண்ட யோகா அமர்வுக்கான சாதனையை அவர் பெற்றுள்ளார்.

    தி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நோபல் உலக சாதனைகளிலும் சாதனை படைத்துள்ளார்.

    அவரது மனைவி, கொனத்தலா ஜோதி, கர்ப்பத்தின்போது 9-வது மாதத்தில் (குழந்தை பிறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு) மேம்பட்ட யோகாசனங்களைச் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

    விஜய் மற்றும் ஜோதி தம்பதியரின் 14 வயது மகள் கொனத்தலா ஜஸ்மிதா, ஒரு நிமிடத்தில் ஒரே காலில் கயிற்றை வேகமாக இழுத்து சாதனை படைத்துள்ளார்.

    இவர்களது 5 வயது மகனான கொனதலா ஷங்கரும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் டிராம்போலைனில் அதிக எண்ணிக்கையிலான கயிறு ஸ்கிப் செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தார். இந்த குடும்பத்துக்கு நடிகர் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் கின்னஸ் உலக சாதனைகளை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.

    "இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

    எங்கள் பயணம் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பிரதமரை சந்திக்க விரும்புகிறோம். இது எங்கள் குடும்பத்திற்கு ஒரு கனவு என்றனர்.

    • 5 ஆண்டுக்கு பின் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.
    • சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்துப் பேசினார்.

    பீஜிங்:

    இந்தியா, சீனா இடையே உள்ள 3,488 கி.மீ. எல்லைப்பகுதியில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் பராமரிப்பது குறித்து விரிவாக விவாதிக்க, சிறப்பு பிரதிநிதிகள் பேச்சு நடத்தும் நடைமுறை கடந்த 2003-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

    கடந்த காலங்களில் இந்த சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை 22 முறை நடத்தப்பட்டுள்ளது. கடைசி கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் நடந்தது.

    அதைத்தொடர்ந்து 5 ஆண்டுக்கு பின், சிறப்பு பிரதிநிதிகளின் 23-வது சுற்று பேச்சு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்றது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீயைச் சந்தித்துப் பேசியது.

    அப்போது, எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது, கிழக்கு லடாக்கில் 2020-ல் நடந்த மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்தபோது எட்டப்பட்ட பொதுவான புரிதல்களைச் செயல்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.

    • சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
    • சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

    சீன பெண் ஒருவர் ரெயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலானது.

    சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரெயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரெயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.

    ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார்.

    சமீப காலங்களில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக பலரும் உயிரிழந்து வருகின்றனர். 

    • இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது.
    • அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று தனது 3-வது லீக்கில் 1-2 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியை தழுவியது.

    சீன அணியில் ஜின்சுவாங் டான் 32-வது நிமிடத்திலும், லிஹாங் வாங் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இந்திய அணியில் தீபிகா 56-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். நடப்பு தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் மலேசியாவை வென்று இருந்தது.

    இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது. அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    • 2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
    • கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 427 ஆக இருந்த நிலையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச நிறுவனம் 2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் தரவரிசை நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    2024-ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதில் 835 பேரை அதிக கோடீஸ்வரர்களாக அமெரிக்கா கொண்டுள்ளது.

    கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 427 ஆக இருந்த நிலையில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

    185 கோடீஸ்வரர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 32 கோடீஸ்வரர்களின் சேர்க்கையைக் கண்டது, இது 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் கூட்டுச்சொத்து இந்த ஆண்டில் 42.1 சதவீதம் அதிகரித்து 905.6 பில்லியன் டாலராக (76.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.

    • செமிகண்டெக்டர் தொழிற்சாலை வர்த்தகம் அதிகம் பாதிக்கட்டும் அபாயம் உள்ளதால் சீனா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
    • காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் மிகப்பெரிய ஆதாரமாக சீனா உள்ளது

    கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்பின் ஆட்சிக்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததைப்போல் அவரது இரண்டாவது பதவிக்காலமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தான் பதவியேற்றதும் கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் அறிவிப்பு எதிரொலியாகவும் ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா செய்யப்படுத்தியுள்ள செமிகண்டக்டர் கட்டுப்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்  சீனா அமெரிக்கவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.   சீனாவில் செமிகண்டெக்டர் தொழிற்சாலை வர்த்தகம் அதிகம் பாதிப்படடும் சூழலில் டிரம்ப் அறிவிப்பும் சேர்ந்து சீனாவை கோபப்படுத்தி உள்ளது. 

     

    அமெரிக்காவுக்கு சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும், காலியம்[gallium], ஜெர்மானியம்[germanium], ஆண்டிமனி[antimony] மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா நேற்று அறிவித்துள்ளது.

    செமிகண்டெக்டர் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சீன நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்ள அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடுமையான எதிர்ப்பை பதவி செய்வதாக நேற்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பேசியுள்ளார்.

     

    தடைவிதிப்பதாகக் கூறியுள்ள காலியம் மற்றும் ஜெர்மானியத்தின் மிகப்பெரிய ஆதாரமாக சீனா உள்ளது. மொபைல் போன்கள், கார்கள், கணினி பாகங்கள் , சோலார் பேனல்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க இவை தேவைப்படுகிறது. பேட்டரிகள் முதல் ஆயுதங்கள் வரை தயாரிப்பதற்கு ஆண்டிமனி பயன்படுகிறது.  

    • சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.
    • பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.

    பிஜீங்:

    சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

    சீனாவின் தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது, ஒரே ஒரு சீனா என்ற கொள்கை, சீனா-அமெரிக்க கூட்டறிக்கைகள், சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை கடுமையாக மீறும் செயலாகும். சர்வதேச சட்டத்தையும் கடுமையாக மீறுவதாகும்.

    ஆயுத விற்பனையானது தைவான் பிரிவினைவாத சக்திகளுக்கு மிகவும் தவறான சிக்னலை அனுப்புகிறது. இதனால் தைவான் ஜலசந்தி முழுவதும் சீனா-அமெரிக்க உறவுகள், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.

    தைவானுக்கு ஆயுதம் வழங்குவதையும், தைவானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா பதிலடி நடவடிக்கைகளை எடுக்கும்.

    இவ்வாறு சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    தைவானைச் சுற்றி சீனா தனது ராணுவ நடவடிக்கையை அதிகரித்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடனான தனது ராணுவ உறவுகளை விரிவுபடுத்த தைவான் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • தென் கொரியாவின் வான் எல்லைக்குள் 11 சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் வட்டமடித்தன.
    • இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக அந்நாட்டு இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.

    முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.

    சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோமாக ஊடுருவல் அதிகரிப்பு என குற்றச்சாட்டு.
    • ஊடுருவல் காரணமாக போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகி உள்ளதாகவும் குற்றச்சாட்டு.

    கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிராம்ப் தெரிவித்துள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். அவர்களால் குற்றம் மற்றும் டிரக்ஸ் (போதைப்பொருள்) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளனர். அதை அனைவரும் அறிவர். இதற்கு முன்னதாக இதுபோன்று நடந்தது கிடையாது.

    ஜனவரி 20-ந்தேதி என்னுடைய முதல் நிர்வாக உத்தரவில் மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 20 சதவீதம் வரிவிதிப்பு. அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    பொதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர்
    • வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும்

    ஆபீசில் வேலையின்போது அசதியில் தூங்கிய நபர் வேலையிலிருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்து வழக்கில் அவருக்கு ரூ. 41.6 லட்சம் நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

    சீனா நாட்டின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் [Taixing] நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் [Zhang] என்ற நபர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்துள்ளார்.

    நள்ளிரவுவரை வேலை இருந்ததால் அவர் ஆபீசில் தனது மேஜையிலேயே ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போட்டுள்ளார். இதனை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். வேலையின்போது தூங்கி கம்பெனியில் நெறிமுறைகளை அவர் மீறியதாக HR டிபார்ட்மென்ட் கூறியுள்ளது.

     

    இதுதொடர்பாக அந்நிறுவனம் அவருக்கு அனுப்பிய நோட்டீஸில், ஜாங், நீங்கள் 2004 இல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்துப்போட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள்.

    வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். இதன் விளைவாக, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், நிறுவனம் உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளது கூறப்பட்டிருந்ததது.

    ஆனால் தன்னை பணியிலிருந்து நீக்கியது நியாயமற்ற செயல் என கூறி அந்த நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ குய், ஜாங் வேலையிடத்தில் தூங்கியது நிறுவனத்திற்கு எந்த தீங்கு விளைவிக்கவில்லை, ஜாங்கின் அந்த நிறுவனத்துக்கு 20 வருடங்களாக உழைத்துள்ளார்.

    அவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே இது நியமற்றது என கூறிய நீதிபதி, ஜாங்கிற்கு 350,000 யுவான் [ரூ. 41.6 லட்சம்] இழப்பீடு வழங்குமாறு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார். 

    • தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
    • தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிங்ஜியாங் கவுண்டியில் வாங்கு தங்கச் சுரங்கம் உள்ளது.

    தரையில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் குவிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ள நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் 1,000 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) ஆகும். இந்த தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

    இது குறித்து ஹுனான் மாகாண புவியியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் கூறும் போது, இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கனிம ஆய்வு உத்திக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.

    வாங்கு சுரங்கம் சீனாவின் மிக முக்கியமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். இங்கு கனிம ஆய்வுக்காக 2020-ம் ஆண்டு முதல், மாகாண அரசாங்கம் 100 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 115 கோடி) முதலீடு செய்து உள்ளது.

    தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

    சீன அரசு 2021-2025-ம் ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வளங்களின் உள்நாட்டு இருப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கனிம ஆய்வுக்கான முதலீட்டை ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் உயர்த்தி 110.5 பில்லியன் யுவானாக (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
    • இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

    பீஜிங்:

    ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.

    நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், நமது மற்றொரு அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

    அதன்படி ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோசியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்

    இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

    சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.

    ×