என் மலர்
நீங்கள் தேடியது "தாக்குதல்"
- மும்பை செல்லும் அந்தியோதயா விரைவு ரெயிலின் [15101] கதவுகள் வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்தது
- கற்களால் கதவின் கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியுடன் இருந்த இரும்புக் கம்பியை வளைக்கவும் முயன்றுள்ளனர்.
ஸ்டேஷனில் வந்து நின்று ரெயிலின் கதவை திறக்காததால் பயணிகள் ஆத்திரத்தில் ரெயிலை சூறையாடிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி ரயில் நிலையத்தில், கோபமடைந்த பயணிகள் அந்தியோத்தியா எக்ஸ்பிரஸ் ரயிலை சேதப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
மும்பை செல்லும் அந்தியோதயா விரைவு ரெயிலின் [15101] கதவுகள் வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்ததால் உள்ளே ஏறி சீட் பிடிக்க காத்திருந்த பயணிகள் பொறுமை இழந்தனர்.
இதனால் கற்களால் கதவின் கண்ணாடியை உடைத்தும், ஜன்னல் கண்ணாடியுடன் இருந்த இரும்புக் கம்பியை வளைக்கவும் முயன்றுள்ளனர்.
ஒரு பயணி கையிலிருந்து ஒரு பெரிய கல்லை எடுத்து, ரயிலின் மூடிய கதவின் கண்ணாடியை உடைக்க அதைப் பயன்படுத்துவதும் மற்றவர்கள் ஜன்னல் கண்ணாடியின் இரும்பு கம்பியை அகற்றுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
In a disturbing incident caught on camera, angry passengers were seen vandalizing a train and shattering its windows in #UttarPradesh.#TrainVandalism #UPIncident #Overcrowding #BastiRailway #PassengerOutrage #TrainSafety #ViralVideo #IndianRailways pic.twitter.com/EdDI3vMuSh
— The Cheshire Cat (@C90284166) December 20, 2024
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
- சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கியில் நுழைந்த நபர் அங்கு ஊழியராக பணியாற்றி வந்த தினேஷ் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்து, வெகுநேரமாக ஆள்நடமாட்டத்தை அறிந்து தினேஷ் காதை வெட்டி உள்ளார். இதனால் படுகாயமடைந்த தினேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் காதை வெட்டிய நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
- 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபந்த் என்கிற பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவருடன் பேசியதாக கூறி, இஸ்லாமிய சிறுமிகள் இருவரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக, 38 வயதான முகமது மெஹ்தாப் என்ற நபரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
சுமார் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள், பைக்கில் பயணித்த ஒருவரிடம் வழி கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் இந்து ஆண்டு நண்பரிடம் பேசியதாக கூறி தாக்கி உள்ளனர். மேலும், அவர்கள் அணிந்திருந்த ஹிஜாபையும் கழட்ட வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். இந்து நபரிடம் சிறுமிகள் பேசினார்கள் என்ற விஷயம் பெரிதாகியுள்ளது.
அப்போது, சிறுமிகள் தங்களது சகோதரரை அண்ணனை அழைக்க, சிறுமிகள் போனை எடுத்தபோது, அந்த கும்பல் அதை பிடுங்கி எறிந்துள்ளது. மேலும், அந்த சிறுமிகள் இளைஞரிடம் பரிசு கொடுத்ததாகவும் மர்ம கும்பல் குற்றம் சாட்டியது.
இந்நிலையில், பைக் ஓட்டிய அந்த இளைஞர் இந்து இல்லை என்று தெரிந்த பிறகுதான் மர்ம கும்பல் சிறுமிகளை விடுவித்தது. அங்கிருந்து தப்பிய சிறுமிகள் உள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களில் ஒருவர்," தன்னை மர்ம கும்பல் அடித்து ஹிஜாபை கழற்ற முயன்றதாக" வாக்குமூலம் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரூரல் எஸ்பி சாகர் ஜெயின் தெரிவித்தார். பரப்பப்படும் வீடியோவைப் பயன்படுத்தி மற்றவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
- வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது.
வடவள்ளி:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொருட்கள், விளை நிலங்களை சேதப்படுத்துகிறது.
இதனால் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானைகளை பார்த்தால் அருகில் செல்ல வேண்டாம். அதனை விரட்டவோ, செல்போனில் வீடியோ எடுக்கவோ கூடாது என்று அறுவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் வாலிபர்கள் சிலர் காட்டு யனையுடன் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை காட்டுயானை ஒன்று உலா வந்தது.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் யானையை பார்த்ததும் செல்போனில் வீடியோ எடுத்தார்.இதனை பார்த்த காட்டு யானை ஆக்ரோஷம் அடைந்து வாலிபரை ஓட, ஓட விரட்டியது. தொடர்ந்து அந்த வாலிபர் அருகே இருந்த வீட்டுக்குள் சென்று மயிரிழையில் உயிர்தப்பினர்.
இருப்பினும் வாலிபர் பதுங்கிய வீட்டை சுற்றி சுற்றி வந்த காட்டு யானை ஆக்ரோஷத்துடன் அந்த வீட்டின் முன்பாக நின்றிருந்த ஆட்டாவை முட்டி தள்ளியது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.
இதற்கிடையே செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை காட்டு யானை விரட்டும் காட்சிகள் இணையத்தளத்தில் வரைலாக பரவி வருகிறது.
- 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு.
டாக்கா:
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ந் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25-ந் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நடந்த வன்முறையில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராக வழக்கறிஞர்கள் சங்கம் தடை விதித்தது.
இந்த வழக்கில் சின்மோய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வருகிற ஜனவரி 2-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில் சிட்டகாங் மெட்ரோபாலிடன் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் எம்.டி அபு பக்கரிடம் தொழிலதிபரும், பங்களாதேஷின் ஹெபாசாத்-இ-இஸ்லாம் அமைப்பின் ஆர்வலருமான எனாமுல் ஹக் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், நவம்பர் 26-ந் தேதி நீதிமன்றத்தில்
நிலப் பதிவேடு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது சின்மோய் கிருஷ்ண தாஸின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக புகாரில் கூறியுள்ளார்.
தாக்குதலின் காரணமாக நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்தமையால் வழக்குத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் ஹக் கூறினார்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணதாஸ் மற்றும் அவரது சீடர்கள் 164 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து அதனிடம் இருந்து தனது மனைவியை மீட்க போராடினார்.
- காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனடாவின் போர்ட் செவன் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு தம்பதியினர் தங்கள் வளர்ப்பு நாய்களை தேடி வீட்டின் வெளியே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஒரு பனிக்கரடி பெண் மீது பாய்ந்து தாக்கி உள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், கரடி மீது பாய்ந்து அதனிடம் இருந்து தனது மனைவியை மீட்க போராடினார். அப்போது கரடி அவரை கடித்து காயப்படுத்தியது. இதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுடவும், கரடி அங்கிருந்து தப்பி காட்டுக்குள் ஓடியது. காயம் அடைந்த தம்பதியினர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இன்று நடந்த பாதயாத்திரையில் கெஜ்ரிவால் பங்கேற்றார்
- அவர் மீது திரவத்தை வீசிய நபரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடித்தினர்
டெல்லி ஆளும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட பாதயாத்திரையில் அவர் மீது நபர் ஒருவர் மர்ம திரவத்தை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் இன்று நடந்த பாதயாத்திரையில் கெஜ்ரிவால் கலந்துகொண்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கெஜ்ரிவால் மீது திரவத்தை வீசிய நபரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பிடித்து அடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. சம்பவத்தின் பின் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
VIDEO | Security personnel overpowered a man who apparently tried to attack AAP national convener Arvind Kejriwal during padyatra in Delhi's Greater Kailash area. More details are awaited. pic.twitter.com/aYydNCXYHM
— Press Trust of India (@PTI_News) November 30, 2024
தலைநகரில் முதலமைச்சராக இருந்த ஒருவருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் சாமானியர்கள் எப்படி நடமாட முடியும் என ஆம் ஆத்மி மத்திய பாஜக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியின் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் மத்திய அரசின் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- படுகாயம் அடைந்த மணமகள் ஷிவானியை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- எதற்காக அவர் ஷிவானியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமண வீடுகளில் கலாட்டா நடைபெறுவது சாதாரணம். அந்த கலாட்டாக்கள் சுமுகமாகவும், விபரீதமாகவும் முடிந்தது உண்டு. ஆனால் உத்தரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று விபரீதத்தில் தொடங்கி சுமுகமாக முடிந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த இளம்பெண் ஷிவானி. இவருக்கும், உத்தம் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக முசாபர்நகர் டெல்லி-டேக்ராடூன் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருமணத்துக்காக தடபுடல் ஏற்பாடுகள் நடந்தன.
மணமகள் ஷிவானி, புத்தம் புது பட்டுச்சேலை, தங்க நகைகளுடன் எதிர்கால கனவுகளையும் அணிந்து மணக்கோலத்தில் திருமணம் நடைபெற இருந்த ஓட்டலுக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது எங்கிருந்தோ வந்த வாலிபர் ஒருவர், தன் கையில் வைத்திருந்த கத்தியால் ஷிவானியை சரமாரியாக குத்தினார். இதில் மணமகள் கழுத்து மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்தார்.
சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவம் அந்த இடத்தையே பரபரப்பாக்கியது. திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். இந்த சந்தடியில் அந்த வாலிபரும் அங்கிருந்து வெளியேறினார்.
படுகாயம் அடைந்த மணமகள் ஷிவானியை உடனடியாக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்து இல்லை என்ற டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியிலேயே கத்திக்குத்து காயங்களுடன் மணமகள் ஷிவானி, உத்தமின் கரம்பற்றினார்.
இதனிடையே இந்த சம்பவம் பற்றிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மன்சூர்பூர் போலீசார், தீவிர விசாரணை நடத்தி, சம்பவம் தொடர்பாக தீபக் சிங்கால் என்ற வாலிபரை கைது செய்தனர். எதற்காக அவர் ஷிவானியை கத்தியால் குத்தினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபரீத்தில் முடிய வேண்டிய திருமணம், சுபமாக நடந்ததால் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
- பொதுநல மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
- ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது.
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது, தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, உள்துறை செயலாளர், டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மீதான தக்குதல் சம்பவங்களை தடுக்க, மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி பொருத்துவது தொடர்பாக பரிந்துரை கேட்கப்பட்டது.
மேலும், ஓசூர் சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது. ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதாக புகார்.
- காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல் என புகார் எழுந்துள்ளது.
மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதாக மருத்துவனை முதல்வர் காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் பாலாஜி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளி இன்று சிகிச்சைக்கு வந்தபோது மருத்துவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஓட்டம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஒரே நாளில் 2 அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்.
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பிறகு,
மருத்துவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் சுயநினைவு திரும்பியுள்ளார்.
இதற்கிடையே, தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கத்தி குத்தால் தாக்கப்பட்டு கிண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கிண்டி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
- நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர்.
- கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், துடியாலா அடுத்த லகசர்லா பகுதியில் 1,350 ஏக்கர் பரப்பளவில் அரசு சிப்காட், மருந்து நிறுவனம் அமைக்க முடிவு செய்தது. சிப்காட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்காக நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது கிராம மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை தாக்கி ஓட ஓட விரட்டினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விகாரபாத் கோடங்கல் பி.ஆர்.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர ரெட்டி இன்று காலை கே.பி. ஆர் பூங்காவில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த போலீசார் கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.