என் மலர்
நீங்கள் தேடியது "பெருமிதம்"
- இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
- தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம்
இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி இன்று [ஜூன் 24] தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி விமானம், துறைமுகம், சோலார் என பல்வேறு துறைகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களிடம் அதானி உரையாடியுள்ளார்.
அப்போது பேசிய அவர், இந்தியா வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறது என்றும் அதன் வளர்ச்சியை உலகமே தற்போது கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் புவிசார் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும், நிச்சயத்தன்மையற்ற சூழலிலும்கூட இந்தியாவின் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
ஸ்திரத்தன்மை , கூட்டுறவு மற்றும் வளர்ச்சியில் இந்தியா தொடந்து முன்னேறி வருகிறது. இது இந்தியாவிற்கான தருணம். நாட்டின் உள்கட்டமைப்பில் மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. ரூ.11 லட்சம் கோடி வரை மத்திய அரசு இந்த நிதியாண்டில் நாட்டின் உள்கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. இது இதற்கு முந்தையதை விட 16 சதவீதம் அதிகம் ஆகும்.
அரசாங்கத்திற்காக நாம் கடந்த 2023 ஆம் ஆண்டு பல வெற்றிகரமான பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறோம். அதானி பசுமை சக்தி நிறுவனத்தின்மூலம் குஜராத்தில் உலகிலேயே பெரிய சுத்தீகரிப்பு சக்தி கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். பலநூறு கிலோமீட்டர்களுக்கு நீண்டிருக்கும் இந்த கட்டமைப்பு மூலம் 30,000 மெகாவாட் மின்சார தயாரியப்பு செய்யும் திட்டம் வருங்காலங்களில் இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பையில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியை புனரமைத்து அங்குள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயரத்தப்போகிறோம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இதற்கிடையில் தாராவியை ஆக்கிரமிக்கவே அதானி குழுமத்திடம் இந்த திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்களும் எதிர்க்கதிகளும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் கொண்டார்.
- தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டி, வலையங்கு ளம், வீரபெருமாள்குளம் சின்ன உலகாணி, பெரிய உலகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதய குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் .முருகன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல் வன், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 3லட்சத்திற்கு மேற்பட்ட கழக உறுப்பினர் களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம். இன்றைக்கு அ.தி.மு.க.வில் 2 கோடியே 88 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ளார்.
ஒவ்வொரு பூத்துகளில் பாசறையில் 50 நபர்களும், மகளிர் அணியில் 50 நபர்க ளையும் சேர்க்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பூத்துகளுக்கும் 19 நபர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கழகத்தில் 5 நபர்க ளும், மகளிர் அணி பாசறை அணியில் தலா 5 நபர்களும், தகவல் தொழில்நுட்ப பிரி வில் 2 நபர்களும் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்.
கொரோனா காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடை படுத்தாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலகட்டத்தில் தி.மு.க. கூறிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்பதை செய்யவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.
- நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
ஊட்டி,
ஊட்டி ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு கிராம சமுதாய கூடத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்க விழா, மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 1598 பெண்களுக்கு பணம் எடுக்கும் அட்டை மற்றும் தகவல் கையேடுகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண் டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, மகளிருக்கான இலவச பஸ் பயணம், உயர்கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளன.
மேலும் பெண்களுக்காக நடப்பு பட்ஜெட்டில் வெளி யான மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு, நாடெங்கும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்பெல்லாம் பெண்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். அவர்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஆணுக்கு பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப் பட்டு உள்ளது.
ஒரு ஆணின் வெற்றிக் கும், குழந்தைகளின் கல்விக்காகவும், குடும் பத்திற்காகவும் தன்னலம் கருதாமல், உடல் நலம் பாராமல் பெண்கள் உழை த்து வருகின்றனர். இப்படி கணக்கில் அடங்காத அளவில் வேலை பார்க்கும் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் விதமாக "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது சாதாரணமான திட்டம் அல்ல என்பதால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று தொடங்கி வைத்துஉள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை தொடங்கி வைக்க உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் நஞ்சநாடு மற்றும் இளித்தொரை ஆகிய 2 இடங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமாம கேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சி கள்) சாம்சாந்தகுமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன்,வட்டாட்சியர் சரவணன்குமார், நகர மன்ற தலைவர் வாணிஸ் வரி, நஞ்சநாடு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, ஊட்டி நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் கொள்கிறார்.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் தலைமை யிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமி ழகத்தில் சிறப்பாக செயல்ப டுத்தி வருகி றார்கள்.
மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.
இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலு வலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 27 அடி நீளமும் 11 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசிய கொடியை கோலம் வரைந்துள்ளார்.
- தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.
சீர்காழி:
குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ரயில்வே ரோடு தெருவை சார்ந்த கயல்விழிவினோதினி என்ற பெண் தனது வீட்டில் 27அடி நீளமும் 11 அடி அகலத்திலும் மிகப்பிரமாண்டமான தேசிய கொடியை கலர் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்து உள்ளார்.
இவர் ஒவ்வொரு அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும் அதற்குரிய கோலத்தை இட்டு அசத்தி வருகிறார்.
கடந்த தைப்பொங்கல் திருநாளில் அசல் பட்டுப்புடவை போன்று வண்ண கோலம் இட்டு பார்ப்பவர்கள் அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்த தேசியக்கொடி கோலத்தை வரைவதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்பட்டது.
இந்த தேசிய கொடியை மிகுந்த தேசப்பற்றுடன் கோல மாவுகளை பயன்படுத்தி வரைந்ததாக கயல்விழி வினோதினி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்த கோலத்தை நேற்று அனைவரும் சென்று பார்த்து ரசித்து விட்டு சென்றனர்.
- தமிழ் பாரம்பரியமிக்க மொழி என ராமநாதபுரம் கலெக்டர் பெருமிதம் கொண்டார்.
- தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சிமொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் மொழி என்பது எல்லோருக்கும் பிடித்த மொழிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்தகைய தமிழ் மொழியாவது அனைத்து துறைகளிலும் அனைத்து பதிவேடு பராமரிப்பிலும் இருந்திட வேண்டும். என்ற நோக்குடன் அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் 2 நாட்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் ஆட்சி மொழி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடத்துகிறது.
தமிழ் மொழியில் கையொப்பமிடுதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல், கடிதங்கள் பரிமாற்றம் ஆகியவற்றிற்கு முழுமையாக தமிழ் மொழியில் செயல்பெற்றிட அனைத்து துறைக்கும் அறிவுறுத்துவதுடன் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு சிறப் பாக தமிழ் மொழி யை கை யாளும் அலுவலகங்களுக்கு ஆண்டுதோறும் பாராட்டு சான்று, நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது.
பொதுவாக தமிழ்மொழி என்றால் எல்லோருக்கும் பிடித்த மொழியாகும். காரணம் என்னை போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வர்களாக இருந்தாலும் ஆட்சியாளர் என்ற முறை யில் மக்களிடம் கோரிக் கையை கேட்டு தமிழில் பேசும் பொழுது என்னை அறியாமலே என்னுள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ்மொழி நேசிக்கக்கூடிய மொழியாக என்னை போன்ற எண்ணற் றோர் புகழ்ந்து வருகின்ற னர். அந்த அளவிற்கு பாரம் பரியமிக்க மொழிகளில் தமிழ்மொழி உள்ளது என்பது எல்லோருக்கும் பெருமை வாய்ந்த ஒன்றாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர் பானு, தமிழ் வளர்ச்சித்துறை உதவி பேராசிரியர்கள் கீதா மாணிக்க நாச்சியார், பழனியப்பன், காளிஸ் பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்