search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க.
    X

    பூத் கமிட்டி உறுப்பினர் விண்ணப்பப்படிவங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.அருகில் பேரவை துணைச்சேயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்

    தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க.

    • தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க. என்று ஆர்.பி.உதயகுமார் பெருமிதம் கொண்டார்.
    • தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அரசம்பட்டி, வலையங்கு ளம், வீரபெருமாள்குளம் சின்ன உலகாணி, பெரிய உலகாணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதய குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட அவைத் தலைவர் .முருகன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல் வன், மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி.கருப்பையா, கே.மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 3லட்சத்திற்கு மேற்பட்ட கழக உறுப்பினர் களை சேர்த்து சாதனை படைத்துள்ளோம். இன்றைக்கு அ.தி.மு.க.வில் 2 கோடியே 88 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட இயக்கமாக இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ளார்.

    ஒவ்வொரு பூத்துகளில் பாசறையில் 50 நபர்களும், மகளிர் அணியில் 50 நபர்க ளையும் சேர்க்க வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பூத்துகளுக்கும் 19 நபர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் கழகத்தில் 5 நபர்க ளும், மகளிர் அணி பாசறை அணியில் தலா 5 நபர்களும், தகவல் தொழில்நுட்ப பிரி வில் 2 நபர்களும் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்.

    கொரோனா காலத்தில் கூட 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தடை படுத்தாமல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார் என மக்கள் கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் காலகட்டத்தில் தி.மு.க. கூறிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்பதை செய்யவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 646 ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் போதிய நிதி உதவிகள் இல்லாத கார ணத்தால் மக்கள் மிகப் பெரிய துன்பத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×