என் மலர்
நீங்கள் தேடியது "மூடல்"
- நொய்யல் ரெயில்வே கேட் பழுதடைந்தது
- 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் வழியாக திருச்சி - பாலக்காடு மார்க்கத்திற்கான ரெயில்வே இரும்பு பாதை உள்ளது. இதன் காரணமாக நொய்யலில் 2 ரெயில்வே கேட்கள் உள்ளன. ரயில் வரும் முன் மூடப்பட்டு, ரயில்கள் சென்றவுடன் திறக்கப்படும். இந்நிலையில் நேற்று ரயில் வருவதை முன்னிட்டு ரெயில்வே கேட் மூடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை அந்த வழியாக ரயில் வந்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டது. ரயில் சென்ற சில நிமிடங்களில் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க, கேட்கீப்பர் முற்பட்டபோது திறக்கவில்லை.
ரயில்வே கேட் திறக்கமுடியாததால் இரு பக்கத்திலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
நொய்யல் குறுக்கு சாலை பகுதிக்கு வந்த வாகனங்களும், வேலாயுதம்பாளையம் வந்த வாகனங்களும் கேட் பழுதடைந்தது குறித்து தகவல் அறிந்து, நொய்யல் அருகே குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், வேலாயுதம் பாளையம் வழியாக பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் பகுதிக்கும், அதேபோல் பரமத்தி வேலூர் ,நாமக்கல், சேலம் பகுதியில் இருந்து கொடுமுடி, ஈரோடு ,கோவை, வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையம், புன்னம்சத்திரம், நொய்யல் குறுக்கு சாலை வழியாக சென்றன.
ரெயில்வே ஊழியர்கள் வந்து மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டுகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரமாக போராடி கேட்டில் உள்ள பழுதை ஊழியர்கள் நீக்கினர். இதனால் ரயில்வே கேட் திறக்கப்பட்டது. ரெயில்வே கேட் பழுதடைந்து, திறக்க முடியாததால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது.
- மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
திருப்பூா்:
திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி, காந்தி ஜெயந்தி தினத்தன்று மதுபானக் கடைகளை அடைக்க கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா் மாவட்டத்தில் மிலாது நபி வருகிற 28 -ந் தேதியும், காந்தி ஜெயந்தி அக்டோபா் 2 -ந்தேதியும் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினங்களில் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மதுபானக்கூடங்களுடன் செயல்படும் மனமகிழ் மன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட நாட்களில் மது விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது
- திருச்சி ஓயாமரி சுடுகாடு நாளை முதல் செப். 7ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி அறிவிப்பு
திருச்சி,
திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் உடல்களை எரியுட்டுவதற்காக நவீன தகன மேடைகள் உள்ளன. இந்த தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக 30ம் தேதி (நாளை) முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை உடல்களை எரியுட்ட இயலாது என்பதால் திருச்சி ஓயாமரி சுடுகாடு செயல்படாது என்று திருச்சி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை தொடர்ந்து செயல்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
- புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சில நாட்களிலேயே மூடப்பட்டு உள்ளது
- பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்ததால் மூடப்பட்டது
அறந்தாங்கி,
அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட நற்பவளக்குடி ஊராட்சியில் குன்னக்குரும்பி கிராமத்தில் புதிதாக டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்கடை இருக்கக் கூடாது என்று கூறிகடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி காவல் துறையினர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களை அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- தமிழக அரசு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தனர்.
- அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டது.
கடலூர்:
தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்ததால், தமிழக அரசு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 மது கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே டாஸ்மாக் கடை களால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் கடைகளை கண்டறிந்து மூடுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ள ப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தி ருந்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் - 2, பரங்கி ப்பேட்டை- 1, சேத்தியா த்தோப்பு -1, காட்டுமன்னா ர்கோவில் -2, பணிக்கன் குப்பம் -1, விருத்தாச்சலம் -1, வீராணம் ஏரிக்கரை வாக்கூர் -1, வடலூர் பார்வதிபுரம் -1, ஸ்ரீமுஷ்ணம் கானூர் -1 ஆகிய இடங்களில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளி மற்றும் கல்லூரி அருகாமையில் இருந்து வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 11 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில் அங்கு பணிபுரிந்து வந்த பணியாளர்கள் கவுன்சிலிங் மூலம் சீனியாரிட்டி படி பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இன்று முதல் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் அங்குள்ள அனைத்து மதுபானங்களும் முறைப்படி கணக்கு செய்து கடலூர் சிப்காட் வளா கத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது.
- மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார்உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
- எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.
சேலம்:
சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.
அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும், மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.
- விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, அன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டள்ளது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபா
னக்கடைகள் மற்றும் பார்களை 5-ந் தேதி முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி, மதுக்கடைகள் மற்றும்
பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை
செய்தாலோ சம்மந்தப்பட்ட வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு
- டாஸ்மாக் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- பேச்சிபாறையில் 65 மி.மீ மழை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவில், மயிலாடி, தக்கலை, குளச்சல், இரணியல், ஆரல்வாய்மொழி, ஆணைக் கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சுப் பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதியிலும் மழை பெய்தது. பேச்சிபாறையில் அதிகபட்சமாக 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. மழையோர பகுதி யான பாலமோர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் பேச்சிபாறை அணைக்கு வரக்கூடிய நீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து பொதுபணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி யுள்ளதை யடுத்து குழித்துறை யாறு, கோதையாறு, வள்ளியாறு, பரளிஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெருஞ் சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் மூடப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 45.44 அடியாக இருந்தது. அணைக்கு 1468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 6.86 கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 72. 10 அடியாக உள்ளது. அணைக்கு 643 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றார் 1-அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், சிற்றார் 2 நீர்மட்டம் 13.22 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 18 அடியாகவும், மாம்பழத் துறையார் அணையின் நீர்மட்டம் 49.13 அடியாகவும் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20 அடியை நெருங்குகிறது.
மாவட்ட முழுவதும் பெய்து மழை அளவு மில்லி மீட்டரில் வரு மாறு:- பேச்சுப்பாறை 65, பெருஞ்சாணி 44.8, சிற்றார்1-40.6, சிற்றார் 2 -50.2, பூதப்பாண்டி 25.6, களியல் 48, கன்னிமார் 13.6, கொட்டாரம் 28.2, குழித்துறை 43, மைலாடி 20.2, நாகர்கோவில் 24.4, சுருளோடு 49, தக்கலை 20, குளச்சல் 3, இரணியல் 3, பாலமோர் 25.4, மாம்பழத்துறையாறு 26.4, திற்பரப்பு 54, ஆரல்வாய்மொழி 17.2, கோழிப் போர்வை 20.4, அடையாமடை 18.2, குருந்தன்கோடு 22, முள்ளங்கினாவிளை 42.6, ஆணை கிடங்கு 24.
- மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
- இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
சேலம்:
மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள்(9-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- 9 விசைப்படகுகள் மீன்கள் இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தம்
- தடயை மீறி சிறிய வள்ளங்களில் சிலர் செல்வதால் குழப்பம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் நேற்று முன்தினம் மீன் பிடித்து வந்த 3 விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்து வாரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 6 விசைப்படகுகள் வந்துள் ளது. இந்த 9 விசைப் படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி விற்பனை செய்வதற்கு தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.
இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகுகள் துறை முக ஓரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளது. இந்த விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வந்த மீனை விற்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கும் வரை துறைமுகத்தை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.
அதே நேரம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் சின்ன முட்டம், குளச்சல் போன்ற துறைமுகங்களில் சென்று மீன்பிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது என கூறி இந்த துறைமுகத்தை உடனே திறக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் இரு மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்திலும் எதிரொலித்தது.
தற்பொழுது துறைமுக நுழைவாயிலில் உள்ள செக்போஸ்டை மூடி உள்ளதால் இருசக்கர வாகனங்களும் கார் டெம்போ போன்ற எந்த வாகனங்களையும் உள்ளே விடாமல் அடைத்து வைத்துள்ளதால் மீனவர்கள் துறைமுகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்பொழுது வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வலியுறுத்தியும் அதைக் கேட்காமல் சிலர் சிறிய வள்ளங்களில் சென்றுமீன் பிடிப்பதும் மீனவர்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.