என் மலர்
நீங்கள் தேடியது "விரக்தி"
- குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
- கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.
அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.
குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.
கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.
சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன
- சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
- நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.
நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.
- 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.
- தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம்.
உலகளாவிய ரீதியில் 8 லட்சம் பேர் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றார்கள். அந்த வகையில் ஒவ்வொரு 4௦ விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்களே அதிகம்.
ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்தும் போது அவன் தற்கொலை செய்ய முயற்சிக்கிறான்.
தற்போது தற்கொலை செய்துக்கொள்ளும் வயதில் (டீன்ஏஜ்) பதின்மவயதில் இருப்பவர்களே அதிகம். அந்தவகையில் ஒருவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கான காரணம் மற்றும் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வாறு நடந்துக்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
தற்கொலை செய்வதற்கான காரணம்
குடும்பத்தில் பிரச்சினை, காதலில் பிரச்சனை, மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி என்று சின்ன சின்ன காரணங்கள் தான் தற்கொலை எண்ணங்கள் முடிவாகின்றன. தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு ஒரு நிமிடத்தில் வருவதில்லை. வருகின்ற பிரச்சினையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தவிக்கும் போது அவர்களுக்கு ஒரே முடிவாக தெரிவது தான் தற்கொலை.
அந்தவகையில் நம்முடன் இருக்கும் ஒருவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு சில அறிகுறிகள் மூலம் இவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் இருகின்றார் என தெரிந்துக்கொள்ள முடியும்.
அறிகுறிகள்
நடத்தையில் மாற்றம்
தற்கொலை செய்துக்கொள்ள நினைக்கும் ஒருவர் எதிர்மறையான எண்ணத்தில் இருப்பார்கள். வாழ்க்கையே வெறுத்து போகின்றது என அடிக்கடி கூறுவார்கள். பேசும் விதம், நடந்து கொள்ளும் விதத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அவர்களை தனியாகவிடக்கூடாது. அவர்கள் தோற்றத்தை அழகுபடுத்த விரும்பமாட்டார்கள். மற்றவர்களுக்கு தான் அழகாக தெரிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய தோற்றத்தை புறக்கணிக்க ஆரம்பிப்பார்கள். தன்னுடைய நிலையை பார்த்து யாரும் பரிதாபப்பட மாட்டார்களா என்று நினைப்பார்கள்.
நண்பர்களுடன் தற்கொலை பற்றி பேசுவது, தற்கொலை பற்றிய புத்தகங்கள், படங்கள், நாவல்கள், பாட்டுகள் அனைத்தையும் பார்ப்பது. துப்பாக்கி எங்கு வாங்குவது, தூக்கு எப்படி போடுவது, பாய்சன் மருந்துகளை எங்கு வாங்குவது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் அவர்களை தனியாக விட்டுவிட வேண்டாம். இந்த மாதிரியான அறிகுறியானது மறைமுகமாக எடுத்துக்கூறிகின்றது என அர்த்தம்.
போதை மற்றும் மது
மனதில் ஏற்படும் துன்பத்தை, வலியை மறைக்க மது பழக்கத்திற்கு அடிமையாகுவது. போதையில் ஏற்படும் மனக்கிளர்ச்சி தற்கொலை செய்ய தூண்டுகிறது.
மனநிலையில் மாற்றம்
தீவிர கோபத்தை வெளிப்படுத்துவது, எரிந்து எரிந்து விழுவது மற்றவர்கள் பேச வந்தால் கூட தனிமையை நாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த பிரச்சினையை உடனே சரி செய்யவில்லை என்றால் அது தற்கொலையாக கூட மாறும்.
இழந்ததை நினைத்து கவலைப்படுதல்
மூக அவமானம், உறவு முறிவு போன்றவை தற்கொலை எண்ணத்தை தூண்டி விடுகிறது. தீவிர உடல் நோய், பிற உயிர் இழப்புகள், நிதி நிலைமை போன்றவை தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. அந்தவகையில் தான் இழந்தவற்றை நினைத்து வருந்துவதும் கூட தற்கொலை எண்ணங்களை உருவாக்கி விடும்.
தூங்குவதில் சிரமம், எடை அதிகரிப்பு, எடை இழப்பு, குற்ற உணர்வு, தேவையில்லாத கவலைகள், எரிச்சல், சோகம், கோபம், வாழ்க்கையை பற்றிய பயம், நம்பிக்கையின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
தற்கொலை தடுப்பு
தற்கொலை அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் பல தற்கொலைகளை தடுக்க முடியும். தற்கொலை செய்துக்கொள்ளும் அறிகுறியில் யார் இருந்தாலும் அவர்களை தனியாக விடமால் கூடவே இருந்து கவனித்துக்கொள்வதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
- குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
- சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் (வயது 37). இவருக்கு திருமணம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இன்று திடீரென திருமணம் ஆகாத விரக்தியால் பாரத் திடீரென வீட்டிலிருந்த மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள செய்ய முயன்று ள்ளார். பின்னர் படுங்காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முண்டியம்பாக்கம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உளுந்தூர்பேட்டை அருகே பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கலியனின் மனைவி இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஈஸ்வரகண்ட நல்லூரை சேர்ந்தவர் கலி யன் (வயது 65). இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவரது மனைவி இறந்தார். தனியாக வசித்து வந்த இவரை கவனிக்க யாரும் இல்லை, இவரது பிள்ளை களும் இவருக்கு உணவு வழங்குவது, மருந்து, மாத்திரைகள் வாங்கித் தருவது போன்றவைகளை சரிவர செய்யவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட மன உலைச்சலில் விரக்தி யடைந்த கலியன், வீட்டி லிருந்த எலிபேஸ்டை சாப்பிட்டார். இதில் மயங்கி விழுந்த கலியனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும், கலியன் பரிதாப மாக உயிரிழந்தார். பெற்ற பிள்ளைகள் கவனிக்கா ததால் விரக்தியடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி டையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தையுடன் மகள் மாயமானதால் விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
விருதுநகர்
சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த வர்கள் மாரியப்பன், பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களது மகள் மகாலட்சுமிக்கு எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவர் திருப்பூரில் வேலை செய்து வந்ததால் மகாலட்சுமி குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அருகில் வசித்த வீரமுனீஸ்வரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியே சென்ற மகா லட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பஞ்ச வர்ணம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காந்திபுரம் பஸ் நிலையம் அமைப்பதற்கு அடுத்ததாக உக்கடம் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது
- 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து ஏறி மற்றும் இறங்கி செல்கின்றனர்.
குனியமுத்தூர்.
கோவை உக்கடம் பஸ் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். காந்திபுரம் பஸ் நிலையம் அமைப்பதற்கு அடுத்ததாக உக்கடம் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொள்ளாச்சி, பழனி, மதுரை, பாலக்காடு போன்ற பகுதிகளுக்கு இங்கு இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து ஏறி மற்றும் இறங்கி செல்கின்றனர்.
இந்த உக்கடம் பஸ் நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. உக்கடம் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் அதனை உபயோகப்படுத்துகின்றனர். ரூ.5 கொடுத்து கழிப்பினை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அதனை ஒட்டி ஒரு கழிப்பறை கட்டிடம் உள்ளது. கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு வரை மாற்றுத்திறனாளிக்காக கோவை மாநகராட்சி சார்பில் இந்த கழிப்பறை செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது செயல்பாடு இல்லாத நிலையில் பூட்டியே உள்ளது. இதனால் வழக்கமாக இதனை பயன்படுத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் தற்போது அதனை பயன்படுத்தத முடியாமல் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- கோவை மாநகராட்சி பொருத்த அளவில் அருகிலேயே காசு வாங்கிக்கொண்டு கழிப்பறைக்கு செல்லும் வசதி தற்போது இயங்கி வருகிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இதனை இலவசமாக பயன்படுத்த வாய்ப்பு கொடுத்தால் மாநகராட்சிக்கு எந்த லாபமும் கிடையாது. அதனால்தான் பூட்டிய நிலையில் உள்ளது. வருமானத்தை மட்டுமே கவனம் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் உபயோகப்படும் காரனியை மாநகராட்சி கையில் எடுத்தால் அது அனைவருக்கும் சாத்தியமாகும்.
எனவே கோவை மாநகராட்சி மக்கள் நலனில் கருத்தில் கொண்டு இந்த கழிப்பறையை விரைந்து செயல்பட நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் பயன்படும். மேலும் இந்த கழிப்பறை முன்பு ஆட்டோக்கள் வரிசையாக நிற்பதால் பொதுமக்களின் பார்வையில் இந்த கழிப்பிடம் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே கோவை மாநகராட்சி உடனே இதில் தலையிட்டு, பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை செயல்பட வைத்தால் அனைத்து பயணிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் நலமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 43) தொழிலாளி. இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார். இதை குழந்தைவேல் கண்டித்ததால் அவருடன் கோபித்துக்கொண்டு சுமதி தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் விரக்தி அடைந்த குழந்தைவேலு விஷத்தை குடித்தார். பின் மயங்கி விழுந்த குழந்தைவேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
- வருமானம் இல்லாததால் மனவிரக்தி
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்ட காவல் நிலையத்துக்கு உட்பட்ட கீழ்பம்மம் கொற்ற விளையை சேர்ந்தவர் ரெஜின் (வயது 29) திருமணம் ஆகவில்லை. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார்.
அங்கு வேலை சரியாக அமையாததால் சொந்த ஊரான மார்த்தாண்டத்திற்கு வந்து வெல்டிங் தொழில் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் இல்லாததால் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சம்பவத்தன்று இரவு வீட்டில் உணவருந்தி விட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.காலையில் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
இதனையடுத்து அவரது தந்தை மாடியில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீபாவளிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துணிகள் எடுக்க முடியவில்லை என நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
- நேற்று இரவு வீட்டின் தனியறையில் மின்விசிறியில் குமார் ராஜ் தூக்கில் தொங்கினார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள வெள்ளிகோடு காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் குமார் ராஜ் (வயது37),தொழிலாளி.இவர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் அவதிப்பட்டார். இதனால் தீபாவளிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுக்கு துணிகள் எடுக்க முடியவில்லை என நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தனி யறையில் மின்விசிறியில் குமார் ராஜ் தூக்கில் தொங்கினார்.அவரை குடும்பத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி ரேகா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோழசிராமணி அருகே மகன் மது அருந்தி வந்ததால் விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
- மது அருந்தக்கூடாது என்று தந்தை பலமுறை எடுத்து கூறியும் மகன் கேட்கவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54) கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மகனிடம் மது அருந்தக்கூடாது என அவரது தந்தை மாரிமுத்து பலமுறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மாரிமுத்து இரவு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு கொட்டகையில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டுக்கொண்டார். தொங்கிய அவர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரக்காணம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சம்ப வத்தன்று இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே செய்யாங்குப்பம் மாரி யம்மன் கோவில் தெரு, காட்டுக் கொள்ளை பகுதி யை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பாலசுப்பிரமணியன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்க மாக வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு குடித்து விட்டு வந்து வீட்டில் இருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் மன உளைச்சலில் இருந்த பாலசுப்ரமணியன் நேற்று இரவு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதை வீட்டிலிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.