என் மலர்
நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"
திருவள்ளூரை சேர்ந்தவர்கள் வேலாயுதம், சண்முகம். இவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் திருவள்ளூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 40 பேருடன் பூண்டியை அடுத்த கூடியம் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கும் சுமார் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகின்ற குகைக்கு சுற்றுலா சென்றனர்.
அப்போது குகை அருகே இருந்த தேன் கூட்டின் மீது யாரோ கல் எறிந்ததால் தேனீக்கள் கலைந்தன. அவை படை எடுத்து சரமாரியாக சுற்றுலா வந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.
இதில் வேலாயுதம், சண்முகம், திருவள்ளூரை சேர்ந்த வக்கீல் எழில் அரசன், தீபக், செழியன், கல்யாணி, இவரது மகள் பவதாரணி, சிறுவானூரை சேர்ந்த ஹரிணி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டம் பிடித்ததால் தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்து ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் கட்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் கூடியம் குகைக்கு விரைந்து சென்றனர். தேனீக்கள் கொட்டி வலியால் துடித்து கொண்டிருந்த வேலாயுதம் உட்பட 10 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பென்னாலூர்பேட்டை போலீசார் சுற்றுலா அழைத்து சென்ற வேலாயுதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பெக்கிலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து அப்போதைய ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயராணி வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தார். அவர் மீது 342, 366 போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி போக்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும், பிரிவு 366-ன் கீழ் கடத்திய குற்றத்திற்காக 6 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், பிரிவு 342-ன் கீழ் தவறான கருத்தை தெரிவித்ததற்காக 10 மாத சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சந்திரசேகரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
மயிலாடுதுறை:
தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் 12,937 மாணவர்களும், 12,673 மாணவிகளும் என மொத்தம் 25,610 பேர் தேர்வு எழுதினர். இதில் 11,598 மாணவர்களும், 12,066 மாணவிகளும் என மொத்தம் 23,664 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
89.65 சதவீத மாணவர்களும், 95.221 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.40 ஆகும்.
மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 32-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 94.4 சதவீதமும், 2018-ம் ஆண்டு 91.60 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள போதிலும் 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 150 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9,470 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதில் 8,188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.46 சதவீதம் ஆகும். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SSLC #SSLCResult
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேனி மாவட்டத்தில் 8,104 மாணவர்களும், 7,754 மாணவிகளும் என மொத்தம் 15,858 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,404 மாணவர்கள், 7,424 மாணவிகள் என மொத்தம் 14,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.36 சதவீதமும், மாணவிகள் 95.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சவீதம் 93.50 ஆகும்.
கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில், தேனி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 97.10 சதவீதமும், 2018-ம் ஆண்டு 97.72 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.
மாநில அளவில் தேனி மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் தேனி மாவட்டத்தில் 83 பள்ளிகளைச் சேர்ந்த 5,311 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.91 சதவீதம் ஆகும். #SSLC #SSLCResult
தஞ்சாவூர்:
தஞ்சை மகர்நோம்பு சாவடி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 28). இவர் பால்பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி அதனை வீடு வீடாக சென்று சில்லரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினமும் பால் வினியோகம் செய்து அந்த பணத்தை வங்கியில் செலுத்துவது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் பால் வியாபாரம் செய்த பணம் ரூ.1 லட்சத்தை கட்டுவதற்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றுள்ளார். இதில் ரூ.99 ஆயிரத்திற்கு நோட்டுகளாகவும் மீதி ரூ.1000-க்கு 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்துள்ளார்.
அப்போது அதனை வாங்கிய வங்கி காசாளர் ரூபாய் நோட்டுகளை மற்றும் பெற்றுக்கொண்டு ரூ.10 நாணயங்களை முத்துகிருஷ்ணனிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்துகிருஷ்ணன் ஏன் ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்குறீர்கள்? என கேட்டார். அதற்கு ரூ.10 நாணயம் செல்லாது என வங்கி காசாளர் பதில் அளித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி முத்துகிருஷ்ணன் வங்கிக்கு வெளியே வந்து வங்கி முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பால் வியாபாரிக்கு ஆதரவாக அங்கு அருகே உள்ள சில வியாபாரிகளும் குரல் கொடுத்தனர்.
இதனால் வங்கி முன்பு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பால் வியாபாரியிடம் வங்கி காசாளர் ரூ.10 நாணயங்களை வாரத்திற்கு ஒரு முறைதான் வாங்குவோம் என கூறியுள்ளார். எங்களிடம் ரூ.10 நாணயங்களை எண்ணுவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவித்தார்.
அதனை கேட்டு ஆத்திரம் அடைந்த முத்து கிருஷ்ணன், மற்ற வியாபாரிகளும் உங்களுடைய வேலையே பணத்தை எண்ணி வாங்குவதற்குதான். எந்திரத்தில் பணம் கட்ட தெரியாத எங்களை போன்ற வியாபாரிகள் சிலர் மட்டுமே வங்கிக்கு வந்து பணம் கட்டுகிறோம். இதனை கூட வாங்க உங்களால் முடியவில்லையா? என கடிந்து கொண்டனர்.
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் புகார் அனுப்புவோம் என்று வியாபாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்றனர்.
பால் வியாபாரி வங்கி முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 16).
இவர் நாமக்கல் கோட்டை அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடந்த பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மணிகண்டன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனைஉறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் மணிகண்டனை தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை.
தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் மணிகண்டன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதனால் சோகத்தில் மூழ்கிய ராஜ்குமார்- செந்தாமரை மற்றும் உறவினர்கள், மணிகண்டனின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.
அதில், அவரது பெயர் மற்றும் முகவரி, செல்போன் எண், புகைப்படத்தை அனைவருக்கும் பகிரவும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மாயமான மணிகண்டன் இன்று காலை பிணமாக மிதந்தார்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், மணிகண்டன் பிணமாக கிடந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த கிணற்றை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குளிக்க சென்றாரா? அப்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.