என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "10th class student"
- ஆர்த்தி வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- சித்தோடு போலீசார் தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பாரதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது மூத்த மகள் ஆர்த்தி (14). இவர் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆர்த்தி டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு வந்து சென்னை யில் இருந்து ஊர் திரும்பிய தனது தாயுடன் இரவு சுமார் 9.45 மணியளவில் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
பின்னர் ஆர்த்தி வீட்டில் பாட்டி மற்றும் தம்பி ஆகியோர் இருந்த நிலையில் சமையல் அறையில் ஓட்டு மர சட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மாணவி ஆர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
மதுரை
மதுரை அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அனுப்பானடியில் உள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரிகரன்(வயது14). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில வாரங்களாக பள்ளி முடிந்ததும் ஹரிகரன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஹரிகரன் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று அவரது சகோதரி பிரியதர்ஷினி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்க மாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து சகோதரி ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹரிகரன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார் .
இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
தற்கொலை குறித்து தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
பெற்றோர் கண்டித்ததால் ஹரிகரன் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. முன்னதாக மகனின் உடலை பார்த்து அவரது பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது.
- பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளாங்கோவில், அம்மா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு பிரியதர்ஷினி (15) என்ற மகளும், நவீன்குமார் (13) என்ற மகனும் உள்ளனர்.
இதில் பிரியதர்ஷினி வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 29-ந் தேதி பழனியம்மாள் தனது மகள் பிரியதர்ஷினி மற்றும் மகன் நவீன் குமார் ஆகியோருடன் அதேப்பகுதியில் செல்லும் கீழ் பவானி வாய்க்கால் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது. சோப்பை எடுப்பதற்காக பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியை தேடினர். இரவு முழுவதும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் உறவினர்கள் பிரியதர்ஷினியை தேடினர். அப்போது நீச்சாம் பாளையத்திலிருந்து தாசம்புதூர் செல்லும் கீழ பவானி வாய்க்காலில் துரைசாமி கோவில் அருகே பிரியதர்ஷினி பிணமாக மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறுவல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது.
- ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலு (25), கூலி தொழிலாளி. இவருக்கும், 10-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் கடந்த ஜூன் மாதம் திருவதிகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்துள்ளது. இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வாளர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து பாலு, அவரது தந்தை பாக்கியநாதன், தாய் மஞ்சுளா, உறவினர்கள் சங்கர், கோதை ஆகியோர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 16).
இவர் நாமக்கல் கோட்டை அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது நடந்த பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு மணிகண்டன் வெளியே சென்றார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனைஉறவினர்கள் வீடுகள், நண்பர்கள் வீடுகளில் மணிகண்டனை தேடினர். ஆனால் அங்கு அவர் இல்லை.
தொடர்ந்து இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாணவர் மணிகண்டன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதனால் சோகத்தில் மூழ்கிய ராஜ்குமார்- செந்தாமரை மற்றும் உறவினர்கள், மணிகண்டனின் புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டனர்.
அதில், அவரது பெயர் மற்றும் முகவரி, செல்போன் எண், புகைப்படத்தை அனைவருக்கும் பகிரவும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் வாட்ஸ்-அப்பில் வேகமாக பரவியது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் நல்லிப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் மாயமான மணிகண்டன் இன்று காலை பிணமாக மிதந்தார்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று கிணற்றில் இருந்து மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில், மணிகண்டன் பிணமாக கிடந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த கிணற்றை பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிணற்றில் குளிக்க சென்றாரா? அப்போது நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருடைய தாயார், மாணவியின் புத்தகப்பையை எடுத்து பார்த்தார். அப்போது பைக்குள் மஞ்சள் கயிறுடன் தாலி, மெட்டி இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளிடம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது அந்த மாணவி, திருப்பூர் காலேஜ் ரோடு காமராஜர் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 22) என்பவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தன்னை ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று தாலி கட்டி திருமணம் செய்ததாகவும், அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். இதனால் மனம் உடைந்த மாணவியின் தாயார், இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவி 9-ம் வகுப்பு கோடை விடுமுறையில் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு பணியாற்றிய தினேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு தினேஷ், அந்த மாணவியை கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தினேசை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து , தன்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தினேஷ் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், ஏட்டு வனஜா ஆகியோர் தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி:
சுசீந்திரம் கொத்தையடி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 23). இவரும், பொற்றையடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
நண்பர் குடும்பத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் இருக்கிறார். அவரது தாயார், சிறுமி சிறுவயதாக இருக்கும்போதே குடும்பத்தை பிரிந்து சென்று விட்டார். அதனால் சித்தியின் பராமரிப்பில் சிறுமி இருந்து வந்தார்.
நண்பர்கள் குடும்பம் என்பதால் சிவகுமார், சிறுமி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிறுமியுடன் நெருங்கி பழகினார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த சிறுமியை சிவகுமார் ஏமாற்றி கற்பழித்தார். பின்னர் யாரிடம் சொல்லக்கூடாது என சிறுமியிடம் கூறி விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றி சிறுமி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் தொடர்பாக சிவகுமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சிறுமியுடன் நெருங்கி பழக சிவகுமாரின் தாயார் அனிதா, சிறுமியின் சித்தி ஜெயா ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அனிதா, ஜெயா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழன் பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அதே பகுதியை சேர்ந்த 10-வகுப்பு மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று காலை திருமண நடைபெற இருப்பதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை குழந்தைகள் நலக்குழுவை சேர்ந்த ரம்யா, கிரிஜா மற்றும் மயிலாடுதுறை மகளிர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருமணத்துக்கு தயாராக இருந்த மாணவியை மீட்டனர்.
மேலும் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் (வயது 30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் டிரைவராக பணி புரிந்து வருவது தெரியவந்தது.
மீட்கப்பட்ட சிறுமி போலீசாரின் பாதுகாப்பில் உள்ளார். இந்த குழந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் யார்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தனுஷ் (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த தனுஷ் தனது தாயிடம் செல்போன் ரீசார்ச் செய்வதற்காக பணம் கேட்டார். ஆனால் அவரது தாய் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் தனுஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
தாய் பணம் தராததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தனுசின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோளிங்கர்:
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சந்தை பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி லதா. இவர்களது மகன் கார்த்தி (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கார்த்தி நேற்று காலை டியூசன் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் மாணவன் கிடைக்க வில்லை.
இதுகுறித்து சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மாணவன் கார்த்திக்கை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை சோளிங்கர் ஏரியில் மாணவன் கார்த்தி இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பார்வையிட்டனர். மாணவன் உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன.
மாணவனை யாரோ அடித்துக் கொன்று ஏரியில் உடலை வீசியது தெரிய வந்தது. இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்த நாககுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது ஆன 10-ம் வகுப்பு மாணவி தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் செய்ய அவர்களது உறவினர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இன்று (20-ந்தேதி) சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்தையொட்டி இருவீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை விநியோகித்து வந்தனர்.
இதற்கிடையே மணமகள் தேவிக்கு 15 வயது ஆகிறது என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவி என்றும் சுவாமிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகசியமாக சிலர் போலீசுக்கு தெரியபடுத்தினர்.
மாணவியின் திருமணத்தை தடுத்த நிறுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் படி இன்று அதிகாலை 4 மணியளவில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்றனர். மண்டபத்தில் இருவீட்டார் உறவினர்களும் திரண்டு இருந்தனர்.
அப்போது மணமக்களின் பெற்றோரை அழைத்து இன்ஸ்பெக்டர் ரேகாராணி பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவிக்கு சட்டபடி திருமண வயதை எட்டவில்லை. திருமணம் செய்து வைத்தால் சட்டபடி குற்றம். எனவே திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறினார். இதை ஏற்று இரு வீட்டாரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.
திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் வந்திருந்த உறவினர்கள் சோகம் அடைந்தனர். அவர்கள் மணமக்களை வாழ்த்த முடியவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்