என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 ARRESTED"

    • மதுபானக்கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில், பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் இயங்கி வரும் தனியார் மதுபானக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடை மூடப்பட்டது. இந்த கடையில் நெடுங்காடு பொன்பற்றி கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கர் (வயது60). காவலாளியாக இருந்தார். நள்ளிரவு திடீரென கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், கடையை திறக்குமாறு வற்புதியுள்ளனர். காவலாளி மறுக்கவே, மர்ம நபர்கள் காவலாளியை தாக்கி, கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபானங்களை திருடிகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து, பாஸ்கர், கடை உரிமையாளர் மற்றும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடை வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகேவுள்ள விழிதியூரைச் சேர்ந்த ஜெகன் (23), நளன் குளம் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர், அவர்களிமிமிருந்து, ரூ.1 லட்சத்து 43 பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். (சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. திருட்டு நடந்த ஒரு சில மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த திருநள்ளாறு போலீசாரை, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பாராட்டினார்.

    • போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
    • சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற டாடா இண்டிகா வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த காரில் ஹான்ஸ் 20 கிராம் அளவு கொண்ட 2250 பாக்கெட்டில் 45 கிலோவும், கூல்லிப் 9 கிராம் அளவு உள்ள 720 பாக்கெட்டில் 6.480 கிலோவும் விமல் பாக்கு 2.8 கிராம் அளவுள்ள 4500 பாக்கெட்டில் 12.600 கிலோவும் வி.ஐ. பாக்கு 8.4 கிராம் அளவுள்ள 1800 பாக்கெட்டில் 18.00 கிலோவும் உள்ள போதை பொருட்களை இருந்தது.

    விசாரணையில் சிதம்பரம் கூளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 29) அதே கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி (வயது 47) ஆகியோர் 65 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளனர்.அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடத்தில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்துள்ளனர் .என்பது தெரிய வந்துள்ளது. போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.

    இதில் சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

    • கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையம்-கணூவாய் ரோட்டில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து வடவள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்றனர்.

    அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த லட்சுமி நகரை சேர்ந்த பிரகாஷ் (வயது 53), நரசிம் நாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (38) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள 2 மளிகை கடையில் சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கடைகளின் உரிமையாளர்களான அரசூர் ராஜா வீதியை சேர்ந்த ராஜ் மனைவி சுமதி (45), ராஜு வீதியை சேர்ந்த சங்கர் (54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர்.

    தாளவாடி:

    தாளவாடி அடுத்த தமிழக- கர்நாடகா எல்லை யில் அமைந்துள்ளது புளி ஞ்சூர் சோதனைசாவடி. இங்கு போலீசார் மற்றும் வனத்துறை சோதனை சாவடி அமைந்துள்ளது.

    கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் வாகன ங்களும், தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் இங்கு சோத னைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கர்நாடக வில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு மது வுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் தமிழக- கர்நாடக எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அநத வழியாக கேரளா பதிவு எண் கொண்ட ஒரு ஈச்சர் வேன் வந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வெங்காய மூட்டை இருந்தது.

    மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் வெங்காய மூட்டைகளை இறக்கி பார்த்த போது வெங்காய மூட்டை அடியில் கேன்களில் ஸ்பிரிட் இருந்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கேரளாவை சேர்ந்த ஹரி மற்றும் வினோத் என்பதும், அவர்கள் மைசூரில் இருந்து கேரளாவுக்கு மதுவுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட் வெங்காய மூட்டைக்கு அடியில் பதுக்கி கடத்தி சென்றதும் தெரியவந்து.

    இதையடுத்து வேனில் கடத்திய சுமார் 7 ஆயிரம் லிட்டர் மதிப்புள்ள ஸ்பிரிட்டை போலீசார் பறி முதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
    • பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ெபாள்ளாச்சி,

    தமிழக- கேரள எல்லை பகுதிகளில் கூடுதலாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.

    கடந்த ஒரு ஆண்டாக குடிமை பொருள் வழங்கல் போலீசார் பல்வேறு கட்டமாக வாகன சோதனை நடத்தி மோட்டார் சைக்கிளில், கார், மினி வேன், லாரிகளில் கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக, போலீசார் கேரள எல்லைப்பகுதியான பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சிபுரம், வேலந்தாவளம், வாளையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்று அதிகாலை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி அபாஷ் குமார் உத்தரவுப்படி கோவை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் கோவை அருகே பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் மொத்தம் 5000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட குனியமுத்தூரை சேர்ந்த வல்லரசு (வயது 23) குறிச்சியை சேர்ந்த செந்தில்நாதன் (36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனம் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது,

    பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரேஷன் அரிசி பதுக்குவோர், அவற்றை கடத்துவோர் குறித்து ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவோரை கையும் களவுமாக பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த விருதாம்பாள் (35) என்பவர் தனது வீட்டின் அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் ஜவுளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த தனபாக்கியம் (58) என்பவர் சாராயம் விற்றதாக அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • வடலூரில் ஹான்ஸ் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது.

    கடலூர்:

    வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வடலூர் பால்காரன் காலனியில் வசிக்கும் முருகையன் (55), என்பவர் பேப்பர் ஸ்டோர் கடை நடத்தி வருகிறார். தனது கடையில் அதேபகுதியில் வசிக்கும் தனது நண்பர் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து ஹான்ஸ் விற்பதாக தெரியவந்தது. அதன்அடிபடையில் கடையை சோதனை செய்தபோது, ஹான்ஸ் புகையிலை பாக்கெட் பண்டல் வைத்திருந்த 2 பேரையும் கைது செய்தனர். 

    • வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கடலூர் சுத்துக்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்‌அப்போது மினி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் சுமார் 2 டன் பழைய இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    சந்தேகமடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக வாகனத்தில் இருந்த 2 நபர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் மினி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் சுப்பிரமணியபுரம் சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 38) ஜெய்பிரகாஷ் (வயது 27) நாகராஜ் (வயது 38), அருள் தாஸ் (வயது 40) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கர் மற்றும் ஜெய்பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலேரியில் சக்கரபாணி (வயது 35) என்பவர் தனது வீட்டின் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் அரசராம்பட்டு கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த நாகமணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்து மொத்தம் 30 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.

    • போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கல்வராயன்மலை பெருமாநத்தம் பகுதியை சேர்ந்த அருண் (20), வரதராஜ் (26) என்பதும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பர்வதம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • தகவலின் பேரில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிபட்டி அடுத்த பெரிய நாகலூர் தின்னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 48). இவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து வியாபாரம் செய்வதாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட முருகனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதேபோல் மாமரத்தூர் தின்னப்பட்டி பகுதி சேர்ந்தவர் ராணி (50). இவர் வீட்டில் மறைத்து லாட்டரி விற்றதாக கூறப்படுகிறது. இவரையும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார், கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். 

    ×