என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 ARRESTED"

    • பேரையூர் அருகே மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    பேரையூர் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பேரையூர் அருகே உள்ள எஸ்.மேலப்பட்டியை சேர்ந்த ஞானபிரகாசம் (வயது41), லட்சுமிபுரம் பெருமாள் (55) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஞான பிரகாசத்தின் கடைக்கு புகையிலை பொருட்களை இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கடத்தி கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம்இருந்து 57 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
    • லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டைகூட்டுரோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மையனூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 26) மற்றும் அரசராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (25) ஆகிய 2 பேரும் அரசராம்பட்டிலிருந்து மையனூர் காப்புக்காட்டு அருகே உள்ள சுரேஷ் என்பவரின் கரும்புத் தோட்டத்திற்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இவர்களைப் பிடித்து சோதனை செய்தபோது ஒரு லாரி டியூப்பில் 60 லிட்டர் சாராயம் மற்றும் பிளாஸ்டிக் குடத்தில் சுமார் 10 லிட்டர் பாக்கெட் சாராயத்தை கடத்தியது தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது
    • 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு துடியலூர் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள மைதானத்தில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் கோவை நல்லாம்பாளையத்தில் தங்கி வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திர சுவைன் (வயது29), மிதுன் நாயக் (34) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நகை, பணம்- கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி அடுத்த மருதம் நகரை சேர்ந்தவர் பெரிய–சாமி(வயது45). இவரது மனைவி மகேஸ்வரி. பெரியசாமி பூமார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை பெரியசாமி வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 2 மர்மநபர்கள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி, வீட்டில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் கொடுக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இன்று காலை போலீசார் வீரகேரளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை மறித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துசுருளி(35), வடவள்ளியை சேர்ந்த அரவிந்த்(23) என்பதும், இவர்கள் தான் மகேஸ்வரியை மிரட்டி நகை,பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், பெரியசாமி வீட்டில் கார் வைத்துள்ளார். எங்காவது குடும்பத்துடன் வெளியில் சென்றால் கார் ஓட்டுவதற்கு இவர்கள் 2 பேரையும் டிரைவராக அழைத்துள்ளார்.

    இந்த நிலையில் அரவிந்துக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது முத்துசுருளி, பெரியசாமி வீட்டில் பணம், நகை உள்ளது அதனை நாம் கொள்ளையடித்து விடலாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி 2 பேரும் நகை, பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 14¼ கால் பவுன் நகை, ரூ.1லட்சத்து 84 ஆயிரம் பணம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • செட்டிக் காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.

    அன்னதானப்பட்டி:

     சேலம் கருங்கல்பட்டி மு.சு.தொட்டண்ண செட்டிக் காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர் .

    இதில் அங்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது. அங்கு வாகனத்தில் ஏற்றிய 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், 250 கிலோ அரிசி மாவு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    வழக்குப்பதிவு

    இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்னதானப்பட்டி நரசிம்மன் செட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ( வயது 36), வெங்கடேஷ் (34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • சேலம் ஜங்ஷன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 29-ந் தேதி மாணவர்களிடை மோதல் ஏற்பட்டது.
    • கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 29-ந் தேதி மாணவர்களிடை மோதல் ஏற்பட்டது. இதில் மெய்யனூர் வி.எம்.ஆர். நகரை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திகேயன்(20) காயம் அடைந்தார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாசநாயக்கன்பட்டி மதியழகன் மகன் விஷ்ணு (21), தாரமங்கலம் பவளத்தானூர் பகுதியை சேர்ந்த சத்தியகுமார் மகன் திலிபன்(20) ஆகியோர் மீது தகாத வார்த்தைகள் பேசுதல், கையால் அடித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் நீதிபதி சொந்த ஜாமீனில் விடுவித்தார். 

    • பிரகாஷ் (வயது 26). இவர் இரும்பாலை பகுதியில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • போலி வெள்ளி பொருட்களை விற்க முற்பட்டவர் கைது

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள தளவாய்பட்டி அடுத்த சித்தன் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 26). இவர் இரும்பாலை பகுதியில் வெள்ளி மற்றும் தங்க நகைகளை விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று காலை இவரது கடைக்கு வந்த 2 வாலிபர்கள் போலி வெள்ளி பொருட்களை விற்க முற்பட்டனர். இதை கண்டுபிடித்த பிரகாஷ் இது குறித்து உடனடியாக இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக 2 வாலிபர்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் காரிப்பட்டி அருகே உள்ள எஸ்.என். மங்கலம் பச்சியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த நவீன்ராஜ் ( 30), அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் ( 31) என்பது தெரிய வந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து ரூபாய் 1000 பறித்துக் கொண்டனர்.
    • இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி காஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52). இவர் நள்ளிரவு 12.30 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து ரூபாய் 1000 பறித்துக் கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் கூச்சலிட்டார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து அந்த 2 வாலிபர்களையும் பிடித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த சேகர் மகன் ஜடேஜா என்கிற தியாகராஜன் ( 32) மற்றும் சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் தாஸ் ( 19) ஆகியோர் என்பதும் ஜடேஜா மீது போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. அவர் ரவுடி செயல்களில் ஈடுபட்டு வந்ததும், தெரியவந்தது.

    போலீசார், பிடிபட்டவர்களிடம் காஞ்சி நகர் பகுதியில் ஏதேனும் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடிக்க வந்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர்.
    • இருசக்கர வாகனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதை யடுத்து திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தா உத்தரவின் படி, திண்டிவனம் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்பொழுது இருசக்கர வாகனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த அப்பு ராஜ் (வயது 32), ரோசனை பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டு, ஆன்லைன் லாட்டரிக்காக பயன்படுத்திய மொபைல் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    20 சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே வடகோட்டிப்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன் (வயது 45). இவர் வீட்டின் பின்புறம் உள்ள கருமாரி கொட்டகையில் சாராயம் விற்பதாக மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணனை பிடித்து, அவர் வைத்திருந்த 20 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்து, வழக்குப்பதிந்து கைது செய்தனர். அது போல் நடுக்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் பெரிய காலனி பகுதியை சேர்ந்த சேகர் (57) என்பவர் வீட்டின் எதிரே சாராயம் விற்பனை செய்து கொண்டிருதார். அவரிடம் இருந்து 20 சாராயப்பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • மதுரையில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி ‘பார்’ நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் 2-வது மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக பார் செயல்படுவதாக தகவல் வந்தது. இது தொடர்பாக விசாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாசபெருமாள் மேற்பார்வையில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமை யிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஜெய்ஹிந்த்புரம் டாஸ்மாக் கடைக்கு அருகில் சட்ட விரோதமாக பார் இயங்கி வருவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாரில் இருந்த சேர், குளிர்பானங்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அனுமதியின்றி பார் நடத்தியதாக பழைய குயவர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61), சோலையழகுபுரம், ராமமூர்த்தி நகர் பன்னீர்செல்வம் ( 49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய தினகரன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • புதுச்சத்திரம் அருகே 1,000 கிலோ இரும்பு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    கடலூர்:

    சிதம்பரம் பகுதி புதுச்சத்திரம் அருகே தனியாருக்கு சொந்தமான எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இது பல ஆண்டுகளாக செயல்படாமல் மூடிேய உள்ளது. புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பழைய இரும்புகளை ஏற்றிவந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசார ணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 24), அதே ஊரைச் சேர்ந்த நகர்பாதைத் தெருவைச் சேர்ந்த தங்கமணி (25) என்பது தெரியவந்தது. இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் கொண்டுவந்தது சுத்திகரிப்பு ஆலையில் திருடியது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சுமார் 1,000 கிலோ இரும்பு கைப்பற்ற ப்பட்டது. 2 பேரையும் கைது செய்த போலீசார் திருட்டு வேலைகளுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×