search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatiya Nagarik Suraksha Sanhita"

    • புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது கிடையாது
    • நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் நேற்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன.

     

    பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு டெல்லியில் உள்ள தள்ளுவண்டிக் கடைக்காரர் மீது பாய்ந்தது. டெல்லி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் தள்ளு வண்டியில் வைத்து தண்ணீர் பாட்டில்கள், பீடி,சிகரெட்டுகள் விற்றுக்கொண்டிருந்தார்.

    அவரது வண்டி சாலையில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி அவர் மீது தனது உடைமையைக் கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு விளைவித்த குற்றத்துக்காக புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 285 இந்த கீழ் தள்ளுவண்டிக்கடைக்காரர் மீது தற்போது எப்.ஐ.ஆர் பதியப்பட்டது என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் அவரை மன்னித்து அவர் மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது என்றும் எனவே புதிய கிரிமினல் சட்டத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு அது  கிடையாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.

     

    மேலும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின்கீழ் முதல் வழக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றத்துக்காக ஒருவர் மீது பதியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

    பாரதிய நியாய சன்ஹிதா [பி.என்.எஸ்] சட்டத்தின்கீழ் முதல் வழக்காக ஹைதராபாத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம்   ஒ ஓட்டியதாக இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று ஒரே நாளில் டெல்லியில் மட்டுமே புதிய குற்றவியல் சட்டங்களின்கீழ் 300 வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான்
    • மற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய சட்டங்களில்  பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

     

    புதிய சட்டங்கள் குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    'இன்று நடைமுறைக்கு வந்துள்ள 3 புதிய சட்டங்களில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களை வெட்டி ஒட்டிய வேலை தான் நடந்துள்ளது. புதிய சட்டங்களில் உள்ள சில அம்சங்களை நங்கள் வரவேற்றோம். இதற்கு பழைய சட்டங்களில் சில திருத்தம் கொண்டு வந்திருந்தாலே போதும். அதை விட்டுவிட்டு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கியது வீண் வேலை.

    அதுமட்டுமின்றி புதிய சட்ட விதிகளில் சில முன்னுக்குப் பின்னான குழப்பங்கள் உள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இந்த அம்சங்கள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவில் உள்ள எம்.பிக்கள் கருத்து வேறுபாடு உள்ளதாக குறிப்பிட்டிருந்தும் அந்த விமர்சனங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய சட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் பாராளுமன்றதில் நடைபெறவில்லை.

    சட்ட வல்லுனர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் புதிய சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அவற்றை அரசு பொருட்படுத்தவில்லை. இதற்கு நேர் மாறாக எந்த விவாதமும் இன்றி புதிய சட்டங்களை அரசு தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளது. இது அரசியலமைப்பின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்.

    இந்த புதிய சட்டங்கள் சிறிது காலத்துக்கு நீதிமன்றங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். மேலும் வருங்காலத்தில் இந்த புதிய சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிராக உள்ள அம்சங்கள் நீக்கப்பட்டு நீதித்துறையின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

     

    ×