search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car"

    • டிஃபென்டர் வி8 கார் 90, 110 மற்றும் 130 என மூன்று Body style-களில் கிடைக்கிறது.
    • X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களில் டிஃபென்டர் வி8 கார் சந்தையில் அறிமுகமானது.

    2024 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்ட V8 இன்ஜினை மீண்டும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் டிஃபென்டர் வரிசையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த புதிய டிஃபென்டர் வி8 கார் 90, 110 மற்றும் 130 என மூன்று Body style-களிலும் X-Dynamic HSE & X என இரண்டு வேரியண்ட்களில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

    இந்த காரின் என்ஜின் 426 ஹெச்.பி. பவர், 610 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    டிஃபென்டர் வி8 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை:

    1. டிஃபென்டர் 110 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் எச்.எஸ்.இ.: ரூ 1.39 கோடி

    2. டிஃபென்டர் 90 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.42 கோடி

    3. டிஃபென்டர் 110 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.49 கோடி

    4. டிஃபென்டர் 130 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்-டைனமிக் எச்.எஸ்.இ.: ரூ 1.54 கோடி

    5. டிஃபென்டர் 130 5.0 வி8 பெட்ரோல் எக்ஸ்: ரூ 1.64 கோடி

    • அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார்.
    • அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார்.

    தாஜ் ஓட்டலில் ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாஜ் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சாகிர் அலிக்கு அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் செல்லாத இடத்தில கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வரவே அவர் போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார். அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார். பின்னர் போலீசார் 2 கார்களையும் நிறுத்தியுள்ளனர்.

    சாகிர் அலியின் காரின் பதிவு எண் MH01EE2388 என்றும் மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை அடைக்க இஎம்ஐ கட்ட முடியாததால் தனது கார் எண்ணின் கடைசி இலக்கத்தை '8' ஆக மாற்றியதாக மற்றொரு காரின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் மிகப்பெரிய தாக்குதல்களை அடுத்தடுத்து நிகழ்த்தியதை யாரும் மறக்க மாட்டார்கள்.

    அரபிக்கடலில் படகு மூலம் வந்த 10 பேர் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல், தெற்கு மும்பையில் புகுந்து பல இடங்களில் தாக்குதல் தொடுத்தது. அந்த சமயத்தில் தாஜ் ஓட்டலில் 6 குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் எண்ணற்றோர் உயிரிழந்தனர்.

    • மாணவன் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகிள்ளது.
    • மாணவர்கள் பயன்படுத்திய கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் ஓட்டல் ஒன்றில் ஆண்டு விழா கொண்டாடியுள்ளனர்.

    அப்போது அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கி சுடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் சில மாணவர்கள் கார்களில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் மாணவர்கள் பயன்படுத்திய கார்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள்.
    • படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரியானா மாநிலத்தின் கைதல் நகரின் மார்க்கெட் அருகில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பேர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இளைஞர் ஒருவர் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காரை நிறுத்துவதற்கு பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அவர் தவறுதலாக அழுத்தியுள்ளார். இதனால் வேகமாக ஓடிய கார் சாலையோரம் சேர் போட்டு உட்கார்ந்திருந்த 5 பேர் மீது மோதியுள்ளது.

    இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள். படுகாயமடைந்த மீதி 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார்கள் பட்டியல் வெளியானது.
    • ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனை.

    ஒரே ஆண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை டாடா பன்ச் பெற்றுள்ளது.

    இதுதவிர கடந்த 40 ஆண்டுகளாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் வருடாந்திர விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாடா பன்ச் நிறுவனம் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது.

     


    கடந்த 2024 ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் 2.02 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் 1.90 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

    இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடலும், நான்காவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா மாடலும் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஐந்தாவது இடம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் பெற்றுள்ளது.

    2024 இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் டாப் 5 பட்டியல்:

    டாடா பன்ச்: எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்படும் டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 02 ஆயிரத்து 030 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மாருதி சுசுகி வேகன் ஆர்: மாருதியின் ஹேச்பேக் மாடலான வேகன் ஆர் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 855 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    மாருதி சுசுகி எர்டிகா: இந்திய சந்தையில் பிரபல எம்.யு.வி. மாடல்களில் ஒன்றான எர்டிகா கடந்த ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரத்து 091 யூனிட்கள் விற்பனையானது.

    மாருதி சுசுகி பிரெஸ்ஸா: மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    ஹூண்டாய் கிரெட்டா: இந்திய சந்தையில் பிரபல எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்று கிரெட்டா. இந்த மாடல் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.

    • பேக்கரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை ஒரு நபர் திருடிக்கொண்டு சென்றார்.
    • காரில் இருந்து சிறுமி இறக்கி விடப்பட்டதை அங்கு நின்ற சிலர் பார்த்து சிறுமியிடம் விசாரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 10 வயது மகளுடன் காரில் சென்றனர். வளைகுடா நாட்டில் வசித்து வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேரளா வந்திருந்தனர்.

    இவர்களது மற்றொரு குழந்தை குட்டியாடியில் உள்ள பெண்ணின் தாய் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக தம்பதியினர் தங்களது 10 வயது மகளுடன் காரில் சென்றனர். அப்போது பேக்கரியில் ஷாப்பிங் செய்வதற்காக குட்டியாடியில் ஒரு இடத்தில் காரை சாலையோரமாக நிறுத்தினர்.

    அப்போது அந்த தம்பதியரின் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இதனால் காரில் ஏ.சி.யை போட்டு வைத்துவிட்டு, மகளை காருக்குள்ளேயே விட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்றனர். அவர்கள் பேக்கரியில் மும்முரமாக பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பேக்கரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை ஒரு நபர் திருடிக்கொண்டு சென்றார். குழந்தை தூங்குவதை அந்த நபர் கவனிக்காமல் காரை வேகமாக எடுத்துச் சென்று விட்டார். இந்நிலையில் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்த தம்பதி, தங்களது கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    காருக்குள் தங்களின் மகள் இருக்கிறாள் என்று கூறி கதறி துடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் நின்றவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், அவர்களது கார் சென்ற சாலையில் பொதுமக்கள் சிலர் உதவியுடன் மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். செல்லும் வழியில் தங்களது காரின் அடையாளத்தை கூறி கேட்டபடி தொடர்ந்து சென்றனர்.

    இந்தநிலையில் தம்பதியரின் காரை திருடிச் சென்ற நபர், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு காருக்குள் குழந்தை தூங்குவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த குழந்தையை நடுவழியில் இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

    நடுவழியில் இறக்கி விடப்பட்ட சிறுமி என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்தபடி அழுது கொண்டே நின்றாள். காரில் இருந்து சிறுமி இறக்கி விடப்பட்டதை அங்கு நின்ற சிலர் பார்த்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தனது பெற்றோர் மற்றும் ஊர் பற்றிய விவரங்களை சிறுமி தெரிவித்தாள்.

    இந்தநிலையில் கார் மற்றும் குழந்தையை தேடி வந்த தம்பதியர் சிறுமி தவித்து நின்ற இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்கள் தங்களது மகள் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் காரை திருடிச் சென்ற நபரை பிடிப்பதற்காக, தம்பதிக்கு உதவியவர்கள் தங்களது வாகனத்தில் அதே சாலையில் வேகமாக சென்றனர்.

    அப்போது தம்பதியரின் காரை திருடிச் சென்ற நபரை சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இத்துக்கு வந்து காரை திருடிச் சென்ற நபரை பிடித்து கைது செய்தனர்.

    அவர் சாகுத் அருகே உள்ள ஆசாரிபரம் என்ற பகுதியை சேர்ந்த விஜீஷ் (வயது41) என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் குழந்தை படுத்து தூங்கியதை கவனிக்காமலேயே காரை திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்.

    மேலும் குடிபோதையில் இருந்ததால் காரை மெதுவாகவே ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் தான் பின் தொடர்ந்து வந்த பொது மக்களிடமே சிக்கிக் கொண்டார். கைது செய்யப்பட்டுள்ள விஜீசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரியில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
    • சுற்றுலா வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பாலசுப்பிரமணியம் (50) என்பவர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    இன்று காலை பாலசுப்பிரமணியம் நடைப்பயிற்சி செல்லும் போது சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.

    அவரும் சாலையின் நடுவே நின்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார். 

    • ரெவ்தண்டா கடற்கரை மணலில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆன ஃபெராரி சிக்கியுள்ளது.
    • இதனையடுத்து ராய்காட் காவல்துறை கடற்கரையில் கார்களை ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது.

    கடற்கரையில் மணலில் சிக்கிய ஃபெராரி காரை கயிறு கட்டி மாட்டுவண்டி மூலம் இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள ரெவ்தண்டா கடற்கரை மணலில் இத்தாலியின் சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ஆன ஃபெராரி சிக்கியுள்ளது. காரை வெளியே எடுக்க எவ்வளவோ முயன்றும் பலன் அளிக்கவில்லை.

    இதனையடுத்து ஃபெராரி காரின் முன்பக்கத்தில் கயிறு கட்டி ஒரு மாட்டு வண்டி மூலம் இழுத்து வெளியேற்றியுள்ளனர்.

    இதனையடுத்து ராய்காட் காவல்துறை கடற்கரையில் கார்களை ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட்.
    • இந்த கார் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இந்த ஆண்டு ஏராளமான கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2024 ஆண்டு துவக்கமே, கார் மாடல்கள் விலை ஏற்றத்துடன் துவங்கியது. எனினும், அதன்பிறகு முன்னணி கார் பிராண்டுகள் புதிய கார் மாடல்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்தன.

    பதிய கார் மாடல்களில் சில கார்கள் ஏற்கனவே செய்யப்பட்ட மாடல்களின் வருடாந்திர அப்டேட் செய்யப்பட்டவைகளாக இருந்தன. சில மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. எதுவாயினும், இந்த ஆண்டு அறிமுகமானதில், பிரபல கார் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    கியா கார்னிவல்:

    கியா இந்தியா நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. மாடலை அதிகளவு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த காரில் ஏராளமான மாற்றங்களுடன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     


    நிசான் மேகனைட்:

    இந்திய சந்தையில் நிசான் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மேக்னைட். இந்த மாடலின் புது வெர்ஷனும் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் ஒட்டுமொத்த டிசைன் மாற்றப்பட்டு, புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஸ்கோடா கைலக்:

    இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யும் குறைந்த விலை எஸ்.யு.வி. மாடலாக கைலக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான டிசைன் மற்றும் ஏராளமான அம்சங்களுடன் ஸ்கோடா கைலக் மாடல் வெளியிடப்பட்டது.

    கியா EV9:

    கியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக EV9 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்ஸி டிசைன் கொண்டிருக்கும் கியா EV9 ஏராளமான கனெக்டெட் அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 560 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

     


    டாடா கர்வ்:

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வ் மாடலின் ஐ.சி. எஞ்சின் வெர்ஷன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் அறிமுக விலை ரூ. 10 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்:

    இந்த ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா 2024 ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மஹிந்திரா XUV 3XO:

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV 3XO அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய கேபின் டிசைன் கொண்டிருக்கும் XUV 3XO இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இத்துடன் அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்களை புதிய மஹிந்திரா XUV 3XO கொண்டுள்ளது.

    மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசையர்:

    2024 மாருதி சுசுகி டிசையர் மாடல் முற்றிலும் புதிய தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த காரின் விலை ரூ. 6.79 லட்சத்தில் துவங்கி ரூ. 10.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது.
    • சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வருகின்றன.

    பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான நிசான் மற்றும் ஹோண்டா ஆகியவை ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மற்றும் ஹோண்டா ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து உலகின் 3 ஆவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாறவுள்ளது.

    நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கவுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகஸ்ட் 2026 இல் டோக்கியோ பங்குச் சந்தையின் பிரைம் சந்தையில் பட்டியலிடப்படும் என்று சொல்லப்படுகிறது.

    சீனாவில் ஹோண்டா மற்றும் நிசான் நிறுவனங்கள் நட்டத்தை சந்தித்து வரும் நிலையில் இந்த 2 நிறுவனங்களின் இணைப்பும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • புதிய கியா சைரோஸ் மாடல் எட்டுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சைரோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி-எஸ்யுவி மாடல் சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய கியா சைரோஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது.

    புதிய கியா சைரோஸ் மாடல்: HTK, HTK (O), HTK+, HTX, HTX+ மற்றும் HTX+ (O) என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, பீவ்டெர் ஆலிவ், அரோரா பிளாக் பியல் மற்றும் ஃபிராஸ்ட் புளூ என எட்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கியா சைரோஸ் மாடலில் இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, முன்புற இருக்கைக்கு ரிக்ளைன் வசதி மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மெக்கானிக்கல் அடிப்படையில் கியா சைரோஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு DCT மற்றும் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 

    • காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர்.

    சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாகச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மற்ற வாகனங்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

    ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார், இரு சக்கர வாகனம், ஆட்டோ, ட்ரை சைக்கிள் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காயமடைந்த 4 பெரும் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    காரை ஓட்டி வந்த பிரகதீஷ் (வயது 29) என்பவர் கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×