search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai Meteorological Centre"

    • அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலை நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில்அதிகப்பட்ச வெப்பநிலையாக 37 டிகிரி வெப்பநிலை பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்க 55 கிலோ வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
    • இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில் கூட லூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில் நீலகிரிக்கு இன்று முதல் 3 நாட்ளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

    கோவையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் எனவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையை பொருத்தவரை வெப்பநிலை பகல் நேரத்தில் சற்றே அதிகமாக காணப்படும்.

    மாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் இன்று (22-ந்தேதி) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழை வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் பிற்பகலுக்கு மேல் மழை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

    சென்னையில் குறிப்பாக, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது.

    • வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது வலுவடைந்து வரும் 3ம் தேதி புயலாக உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிச்சாங் புயல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த புயல் 4-ந்தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே நோக்கி வந்தடையும். வட தமிழகத்தை நோக்கி புயல் வருவதை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

    இதன் எதிரொலியால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூரில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இதேபோல், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு.

    தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 13-ந்தேதி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
    • சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.

    தமிழகத்தில் சென்னை உள்பட  சில இடங்களில் கனமழையும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் வட இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

    ×