search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EVM machines"

    • தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
    • ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது.

    உலகப் பணக்காரர் எலான் மஸ்க் EVM வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து உலக அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளம்பியுள்ளது.

    குறிப்பாக இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் EVM மீதான நம்பகத்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வியெழுப்பியிருந்த நிலையில் தேர்தலுக்குப் பின் சற்று தனித்திருந்த இந்த விவாதத்தை எலான் மஸ்க்கின் தற்போதைய கருத்து மீண்டும் கிளறிவிட்டுள்ளது.

    மஸ்க்கின் பதிவை மேற்கோள்காட்டி இந்தியாவில் EVM கள் முறைகேடு செய்வதற்கான கருப்பு பேட்டி மாதிரி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் EVM முறைக்கு எதிராக எலான் மஸ்க்கின் கருத்தைப் பகிர்ந்தனர்.

    இந்நிலையில்தான் ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஒய்எஸ்ஆர் கட்சித் தலைவரும் முன்னால் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி EVM விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் அது நிறவேற்றப்படுவதுடன் மட்டுமிடின்றி அந்த தீர்ப்பு உண்மையில் நிறைவேற்றப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுபோலவே ஜனநாய நாடு என்று கூறுவதை விட அங்கு ஜனநாயக முறைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகத்தைப் பின்பற்றும் வளர்ந்த நாடுகளே EVM முறை அன்றி வாக்குச் சீட்டு முறையையே பின்பற்றுகிறது. நாமும் ஜனநாயகத்தைக் காப்பற்ற அந்த திசையை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  

    • எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார்.
    • எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.

    உலகப் பணக்காரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் EVM வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது என்றும் எனவே EVM முறையை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும் என்றும் கூறியது உலக அளவில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தேர்தல் நடைமுறையில் EVM குறித்த எலான் மஸ்கின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடந்த சமயத்தில் EVM முறையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. ஆனால் EVM இயந்திரங்கள் பாதுகாப்பானவை என்றும் யாராலும் ஹேக் செய்ய முடியாது என்றும் ஆரம்பம் முதலே வாதாடி வரும் ஆளும் பாஜக எலான் மஸ்கின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்திருந்தது. தகவல் முன்னாள் தொழில்நுட்பத்துறை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பதிவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் EVM கள் பாதுகாப்பானது என்றும் வேண்டுமானால் உங்களுக்கு EVM இயந்திரங்களை எப்படி தயாரிக்கவேண்டும் என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்றும் எலான் மஸ்க் கருத்துக்கு பதிலளித்திருந்தார்.

    உடனே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'Anything can be hacked' எதையும் ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் ரிப்லை செய்திருந்தார். இந்த விவகாரம் இப்படியாக புகைந்துகொண்டிருக்கும் வேளையில் ராஜீவ் சந்திரசேகர் ஒருபடி மேலே சென்று புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, டெஸ்லா கார்களையும் ஹேக் செய்ய முடியும். ஏன் கால்குலேட்டரையும், பிரட் டோஸ்ட் செய்யும் டோஸ்டரையும் கூட ஹேக் செய்ய முடியும் என்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

     

     

     

    மேலும், ஹேக்கிங் என்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது. எலான் மஸ்கின் கருத்து தவறானது. போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட EVM கள் வேண்டுமானால் ஹேக் செய்யப்படலாம். எலான் மஸ்க் சொன்னது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இந்திய EVM தயாரிப்பு குறித்து அவருக்கு தெரியாது. அவை யாராலும் ஹேக் செய்யமுடியாத அதிநவீன சாதனங்கள் என்று தெரிவித்துள்ளார்.  

    • வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
    • ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் EVM வாக்கு இயந்திரங்கள் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் EVM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அவை எளிதில் ஹேக் செய்ப்பட அதிக வாய்ப்புள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இ.வி.எம் வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புபுள்ளது. எனவே தேர்தல்களில் இ.வி.எம் இயந்திரத்தின் பயன்பாட்டை முற்றிலுமாக துடைத்தெறிய வேண்டும். மனிதர்களாலும், ஏ.ஐ தொழில்நுட்பத்தாலும் இ.வி.எம் எளிதில் ஹேக் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நடக்கும் சமயத்திலும் இ.வி.எம் வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் இ.வி.எம் குறித்த தொழிநுட்ப சாம்ராட்டான எலான் மஸ்கின் கருத்து பூகமபத்தை கிளப்பியுள்ளது.

    எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்த முன்னாள் தகவல் தொழிநுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை, வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை. வேண்டுமானால் எப்படி மின்னணு இயந்திரங்களை தாயரிப்பது என்று நாங்கள் கற்றுத் தருகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

    தற்போது இந்த பதிவுக்கு உடனே ரியாக்ட் செய்துள்ள எலான் மஸ்க், Anything can be hacked எதையும் ஹேக் செய்ய முடியும் என்று ரிப்லை செய்துள்ளார். இவ்வாறாக EVM விஷயம் பூதாகரமாக மாறிக்கொண்டிருக்கும் வேலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் EVM இயந்திரங்கள் என்பது கறுப்புச் பெட்டியாக BLACK BOX ஆகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்ததக்கது. 

     

    • விவிபாட் இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியது.
    • இ.வி.எம் இயந்திர குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

    சென்னை:

    விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக, தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    ×