search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jagadeep Dhankar"

    • ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
    • கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவியது

    நேற்று நடந்த பாராளுமன்ற மக்களை கூட்டத்தொடரில் ராகுல் காந்தியின் அதிரடி உரை அவையை களேபரம் ஆகியது தெரிந்ததே. அதேசயம் பாராளுன்றத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் மக்களவையில் நடந்ததற்கு நேர் மாறாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்களால் சிரிப்பலை ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச எழுந்த போது தனக்கு கால்வலி இருப்பதால் உட்கார்ந்து பேச கார்கே அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த கார்கே, 'ஆமாம் நீங்கள் எங்களுக்கு [எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு] சில சமயம் உதவுகிறீர்கள். நான் அதை நினைவு கூர்கிறேன்' என்று நகைச்சுவை தொனிக்க தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி உரை குறித்து தொடர்ந்து பேசத் தொடங்கிய கார்கே பாஜக எம்.பி சுதான்சு சதுர்வேதியை குறிப்பிட்டு பேசும்போது, இடையில் நிறுத்தி, 'மன்னிக்கவும், திவேதி, திரிவேதி, சதுர்வேதி ஆகிய பெயர்கள் என்க்கு எப்போதும் குழப்பமாக உள்ளது.

    நான் தெற்கில் [தென்னிந்தியாவில்] இருந்து வருவதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; என்று நகைச்சுவையாக தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.இதற்கு சிரித்தபடி பதிலளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்துஅரை மணி நேரத்துக்கு வேண்டுமானாலும் நாம் விவாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவிய நிலையில் நேற்றைய கூட்டம் அந்த இறுக்கத்தை தளத்தியது என்றே கூறலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டொடர் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தத்க்கது. 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
    • பாராளுமன்றத்தில் அம்பேதகர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன்.

    பழைய பாராளுமன்றத்தில் விரவி இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.

     

     

    பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று {ஜூன் 16) துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    முக்கியமாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிவந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.

     

    அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இது அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று விமர்சித்துள்ளார்.

    • இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என துணை ஜனாதிபதி கூறினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசும்போது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றம்சாட்டினார்.

    இதன்பின், லண்டனில் பேசும்போது, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தியாவில் பத்திரிகை துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவை அனைத்தும் ஒரு வழியிலோ அல்லது வேறு வகையிலோ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் அரசு அமைப்புகள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்களே, கேட்டு பாருங்கள். என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம்) உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, இதெல்லாம் நடக்கவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இதேபோல், மற்றொரு நிகழ்வில் பேசுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் மைக்ரோபோன்கள் அணைத்து வைக்கப்பட்டு விடும். அதனால் அவர்கள் பேச முடியாதபடி செய்யப்படும் என்று கூறினார்.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் நேற்று பேசினார்.

    சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆயுர்வேத மஹாகும்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது, அதுபோன்ற விசயங்கள் நெருக்கடி நிலை காலத்திலேயே செய்யப்பட்டன. ஆனால், தற்போது அது சாத்தியமில்லை. அது ஒரு கருப்பு அத்தியாயம். காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சில மனிதர்கள் தங்களது குறுகிய பார்வையால் நாட்டின் சாதனைகளை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார். ஜனநாயக மதிப்புகள் மிக முக்கியம் வாய்ந்தது. ஜனநாயகத்தின் அன்னையாக நாம் இருக்கும்போது, ஜனநாயகத்தின் கோவில்கள் சேதமடைய அனுமதிக்க முடியாது என பேசியுள்ளார்.

    ×