search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Met Office"

    • சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை.
    • மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

    இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தினமும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தநிலையில் கேரள மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டு மின்றி பல இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    கோழிக்கோடு மாவட் டத்தில் பல இடங்களல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலப்புழா மற்றும் கண்ணூரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கேட்டயம், எர்ணா குளம்ஆகிய மாவட்டங்களிலும், கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி தாலுகாவிலும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலைபபகுதிகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் கேரளாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது. 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 69.6 மில்லிமீட்டரும், அதிகபட்சமாக கோட்ட யத்தில் 103 மில்லிமீட்டரும் மழை பெய்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை.
    • சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னையில் கடந்த 2 நாட்களாக மழைபெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல், கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, குமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலங்கை கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளில் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 20-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    மேலும் கடல் சீற்றமாக காணப்படும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீன்வளத் துறை எச்சரிக்கை எடுத்து 2000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கடலில் இருந்து கரைக்கு பாதுகாப்பாக இழுத்து வைக்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மீன்பிடி தடைகாலம் உள்ள நிலையில் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத இந்த வேளையில் மீன் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் 4 நாட்களுக்கு மீன் வியாபாரம் முற்றிலுமாக இருக்காது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இலங்கையைெயாட்டி தென் மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 13-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 13 -ந் தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனா பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×