search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Terhal Commission"

    • மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று [ஜூன் 30] ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.
    • இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்த நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மோடி 3-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மீண்டும் இன்று [ஜூன் 30] ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணி அளவில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசத் தொடங்கிய மோடி, நண்பர்களே கடந்த பிப்ரவரி முதல் வந்த ஒவ்வொரு ஞாயிற்றுஇக்கிழமையும் உங்களுடன் பேசும் இந்த வாய்பபு கிடைக்காமல் நான் தவித்தேன்.

     

    தற்போது மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நான் மீண்டும் எனது குடும்ப உறுப்பினர்களான நாட்டுமக்கள் மத்தியில் வந்துள்ளேன் என்று கூறினார். அவரது உரையில், 2024 மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

     

    இந்திய அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின்மீதும் மக்களின் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் வகையில் இன்று கொண்டாடப்படும் ஹூல் நிவாஸ் இன்று கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டி மோடி பேசினார்.

    மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச யோகா தினம் குறித்தும், அடுத்த வருடம் நடக்க உள்ள பாரீஸ் ஒலிம்பிக் குறித்தும் அவர் பேசினார். தொடர்ந்து அவரது இன்றைய உரையில் டி20 கோப்பையில் இந்தியா அணியின் வெற்றி குறித்து பேசுவார் என்றும் தெரிகிறது. 

    ×