search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.
    • அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்.

    நீண்ட நாட்களாக இந்திய அணிக்காக ஆடி வரும் முகமது சமி இன்று உலக அளவில் முக்கியமான வேகப் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

    இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சக வீரர்களான முகமது சமி கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அவர்கள் இருவரும் இந்தியாவின் ஜாம்பவான்கள். இந்திய நாட்டுக்காக கடந்த 15 - 16 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் ராஜாக்கள் என்ற பெயரை பெற்று இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    ஆனால், இதுதான் இயற்கை. ஒரு வீரர் வெளியே செல்வார். மற்றொரு வீரர் உள்ளே வருவார். எனினும், இது போன்ற நட்சத்திர வீரர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை ஈடு கட்டுவது என்பது மிகவும் சவாலான ஒன்று. நீங்கள் நினைத்ததை அடைந்த பிறகு அந்த பயணத்திலிருந்து விடை பெறுவது என்பது உணர்ச்சி பூர்வமான ஒரு விஷயமாக இருக்கும்.

    இந்திய அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததற்காக ரோகித் மற்றும் கோலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தியாவுக்காக அற்புதமான இன்னிங்ஸ்களை ஆடினார்கள். போகிற போக்கில் பல்வேறு சாதனைகளை உடைத்தார்கள்.

    உலகக் கோப்பை வென்றதற்கு ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள், அதன் உதவியாளர்கள் மற்றும் தன்னம்பிக்கை அளித்த ரசிகர்கள் ஆகியோர்தான் காரணம். நான் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அந்த வாய்ப்பை 10 சதவீத வீரர்கள் மட்டுமே அவர்கள் வாழ்நாளில் பெறுவார்கள்.

    என்று முகமது சமி கூறினார்.

    • பார்படாஸில் ஏற்பட்ட ‘பெரில்’ புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை இந்திய வீரர்கள் டெல்லி வந்தடைகிறார்கள்.

    இந்திய வீரர் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் சமூக வலைத்தளத்தில் மில்லியன் கணக்கான பாலோவர்ஸ்களை கொண்டுள்ளனர். அவர்கள் பதிவிடும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

    இந்த நிலையில், விராட் கோலி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி தன் மனைவி அனுஷ்காவுடன் வீடியோ காலில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பார்படாஸில் ஏற்பட்ட 'பெரில்' புயலால் நாடு திரும்ப முடியாமல் வீரர்கள் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்போது புயலால் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் பயங்கர சூறாவளி காற்றை வீடியோ கால் மூலம் தனது மனைவி அனுஷ்காவுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் விராட் கோலியின் வீடியோ வைரலானது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

    இதனிடையே, சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை இந்திய வீரர்கள் டெல்லி வந்தடைகிறார்கள். வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளதால் நாளை டெல்லி விமான நிலையத்தில் கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது.

    • ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.

    டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.

    மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.

    இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

    • 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.
    • நடிகை கியராவின் திருமண பதிவு 16.26M லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை வெற்றி தொடர்பான கோலியின் பதிவு, இன்ஸ்டாவில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்தியரின் பதிவு என்ற சாதனையை படைத்துள்ளது. 16.48 மில்லியன் லைக்குகளுடன் கோலியின் பதிவு இச்சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு, இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பதிவில் அதிகம் லைக் செய்யப்பட்ட போஸ்ட் என்ற பெருமையை கியாரா, சித்தார்த்தின் திருமணப் பதிவு பெற்றிருந்தது.

    தற்போது நடிகை கியராவின் திருமண பதிவு 16.26 மில்லியன் லைக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

    ஆலியா பட்டின் திருமணப் பதிவு 13.19 மில்லியன் லைக்குகளுடனும் கேத்ரினா கைஃபின் திருமணப் பதிவு 12.6 மில்லியன் லைக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    • டி20 உலகக் கோப்பையை 100% வெற்றி பெற்ற முதல் கேப்டன்.
    • அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி.

    டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதே போன்று இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலியும் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துயுள்ளது. இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி படைத்த சாதனைகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    • ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை விளையாடி உள்ளார். 159 டி20 போட்டிகள். இவருக்கு அடுத்த இடத்தில் பால் ஸ்டிர்லிங் 145 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
    • நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இவர் டி20 போட்டிகளில் 4231 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி 4188 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக இருக்கிறார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கிளென் மேக்ஸ்வெல்-உடன் ரோகித் சர்மா பகிர்ந்து கொண்டுள்ளார்.
    • டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 205 சிக்சர்களை விளாசிய ரோகித், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


    • டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். நவம்பர் 2022 மாதம் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை விராட் கோலி பாபர் அசாமுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 39 அரைசதங்களை அடித்துள்ளனர்.
    • டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 15 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
    • ஆட்ட நாயகன் போன்றே தொடர் நாயகன் விருதுகளை அதிகம் வென்றவர்கள் பட்டியலிலும் விராட் கோலி தான் முதலிடம் பிடித்துள்ளார். இவரை இதுவரை 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
    • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 3500 ரன்களை கடந்த வீரர் விராட் கோலி. 
    • இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
    • என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியுடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. டி20 கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே இதனை ரசித்து விளையாடி வருகிறேன். இந்த பயணத்தின் எல்லா தருணங்களையும் நான் ரசித்தேன். நான் இந்த (கோப்பையை) மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது. என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்கள் எதுவும் பெரிதில்லை. இந்தியாவிற்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே என் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவர் டி20-யில் 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது டி20 பயணம் 2007-ல் அறிமுகமான டி20 உலகக் கோப்பையுடன் தொடங்கியது. அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, கேப்டனாக இந்தியாவை இரண்டாவது உலக கோப்பை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2007-ல் இந்தியா டோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.
    • 17 வருடத்திற்குப் பிறகு தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    பும்ரா தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் அடித்தார்.
    • ஆறு போட்டிகளில் அரைசதம் கூட அடிக்காமல் இருந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி 176 ரன்கள் அடிக்க விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரு பக்கம் நிலையாக நின்று விளையாடினார். இதற்கு முன்னதாக இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இந்திய அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருந்தது. விராட் கோலி ஒட்டுமொத்த திறமையையும் இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவார என நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் நிரூபித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இது என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. நாங்கள் விரும்பியதை எட்டினோம் என்றார்.

    • 4வது விக்கெட்டுக்கு விராட் கோலி, அக்சர் பட்டேல் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.
    • சிறப்பாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.

    பார்படாஸ்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாசில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி அரை சதம் கடந்தார். இது அவரது 39-வது அரை சதமாகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.

    • டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
    • ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் விரைவில் அவுட்டாகினர்.

    பார்படாஸ்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

    தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.

    .

    • டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
    • அதனால் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

    பார்படாஸ்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார்.

    இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:

    இது விராட் கோலியின் ஆட்டம் அல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்கப்போய் தனது விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

    ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    ரோகித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சிசெய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார்.

    அவர் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.

    தற்போது விராட் கோலிக்கு பேட்டிங் ரிதம் சரியாக அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார்.

    நீங்கள் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில், சிறிது பொறுமையாகக் காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

    • நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
    • 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

    7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார்கள் அல்லது விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு நடக்கும்.

    முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்.

    இது யாருக்கும் ஏற்படலாம். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்.

    சில சமயங்களில் பெரிய வீரர்களை அழைக்கலாம், மேலும் முன்னேறி அணிக்கான உண்மையான ஆட்டத்தையும் வெல்லலாம்.

    விராட் கோலி போன்ற ஒரு வீரரை சந்தேகமின்றி நீக்க முடியாது. அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிவோம்.

    எனவே அவர் இறுதிப்போட்டியில் என்ன வழங்குவார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    ×