என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "a college student"
- தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் தயானந்தன் (20). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 10 வருடங்களாக அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தயானந்தன் தங்கி இருக்கும் வீட்டின் உறவினரான யுவராஜ் என்பவரின் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் தயானந்தன் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக காண்பித்து உள்ளது. உடனே யுவராஜ் தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து தயானந்தன் இருந்த வீட்டின் அறை கதவை தட்டி உள்ளனர்.
கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் ஜன்னல் வழியே பார்த்த போது தயானந்தன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே உறவினர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து தயானந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்து வந்த தயானந்தன் வாழ பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
- திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.
கோவை,
தென்காசியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.
இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் நீட் தேர்வுக்கு தயாரானார்.
இந்நிலையில், வருகிற மே 7-ந் தேதி நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ? என அவர் மன குழப்பத்தில் இருந்து வந்தார்.
இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவி, திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.
இதை பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுபஸ்ரீ பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார்.
- 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை.
காரைக்கால்:
காரைக்கால் சின்னக் கண்ணு செட்டிவீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கு, கவிதா என்ற மனைவியும், பவித்ரா (வயது26), சுபஸ்ரீ (22) என்ற 2 மகள்களும் உள்ளனர். சுபஸ்ரீ காரைக்கால் செருமா விளங்கை பகுதியில் இயங்கி வரும் பெருந்தலைவர் காம ராஜர் அரசு பொறியல் கல்லூரியில் பி.டெக் இறுதி யாண்டு படித்து வருகிறார். வழக்கமாக, காலை கல்லூ ரிக்கு செல்லும் மாணவி, மாலை வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 25-ந் தேதி காலை வழக்கம் போல், கல்லூரிக்கு சென்ற சுபஸ்ரீ, இரவு வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, தந்தை பல்வேறு இடங்களில் தேடியும், தோழிகள், உறவி னர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, மாணவியை கண்டு பிடித்துதருமாறு, தந்தை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான கல்லூரி மாணவியை தேடிவருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
அல்லம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் யோகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் கல்லூரிக்கு சென்ற அவர் மாயமாகிவிட்டார். இதுபற்றி கிருஷ்ணசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
சிவகாசியை அடுத்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவரது மனைவி ரஷியா (வயது19). சம்பவத்தன்று எம்.புதுப்பட்டிக்கு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாரீஸ்வரன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் நடுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிசென்ற அவர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக கிருஷ்ணசாமி கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண்கள் 3 பேர் மாயமானாகள்.
- இதுகுறித்து விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி ராணி. இவர்களுக்கு கவிதா (19) என்ற மகள் உள்ளார். கவிதா எலெக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடையில் உடன் வேலைபார்க்கும் செல்வக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் காலை யில் வழக்கம்போல வேலைக்குச் சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தாய் ராணி அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மரியபுஷ்பவள்ளி (49). இவரது மூத்த மகள் எம்.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் மகள் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மரிய புஷ்பவள்ளி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் சுவற்றில் பலமாக பலமுறை முட்டி யுள்ளார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு மரிய புஷ்பவள்ளி மகளை அழைத்துச் சென்றார்.
அப்போது மருந்துச்சீட்டு வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மரியபுஷ்பவள்ளி அளித்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள அச்சங்குளம் பகுதியை சேர்ந்தவர் சூசை முத்து (38).இவர்து மகள் சாத்தூரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சூசை முத்து அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே ஓடையில் மூழ்கி கல்லூரி மாணவி இறந்தார்.
- உலகாணி கிராம நிர்வாக அலுவலர் \வடிவேலு கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது19).இவர் மதுரையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை முத்துலட்சுமி அதே பகுதியில் உள்ள ஓடையில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதனை கண்ட பொதுமக்கள் கூடக் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவி யின் உறவினர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த முத்துலட்சுமியின் உடலை மீட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் அவரது உடலை எரித்து விட்டனர். இதுபற்றி மாணவி முத்துலட்சுமியின் சித்தப்பா தகவல் தெரிந்து விசாரிக்க நேரில் வந்துள்ளார். அப்போது அவர் முத்துலட்சுமியின் உடல் எரிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவர் திருமங்கலம் - காரியாபட்டி ரோட்டில் தனிநபராக சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி உலகாணி கிராம நிர்வாக அலுவலர் வடிவேலு கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் மாணவியின் உடலை எறித்த அவரது தந்தை ஆண்டி, தாத்தா முருகன் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், சுந்தரம் ஆகிய 4 பேர் மீது கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவி-பிளஸ் 1 மாணவர் மாயமானார்கள்.
- திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே நடுக்கோட்டையை சேர்ந்தவர் பாக்கியபாண்டி. இவரது மகள் சரஸ்வதி (வயது19). இவர் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 29-ந் தேதி மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றி பாக்கியபாண்டி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
மாணவர் மாயம்
திருமங்கலத்தையடுத்த ராயபாளைத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவுதமன் (17). பிளஸ்-1 மாணவர். இவர் கடந்த 29-ந் தேதி பள்ளிக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் பள்ளிக்கு செல்லவில்லை. இதுபற்றி அவரது பெற்றோருக்கு தெரிந்து விட்டது என்று கருதிய கவுதமன் திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்