search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A waiting struggle"

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் பணிநீக்கம் எதிரோலியாக நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் செல்வகுமார், விஜயசேகரன், வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாசில்தார் மனோஜ் முனியன் என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதில் வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நடந்தது

    நெமிலி:

    பனப்பாக்கத்தை அடுத்து கல்பலாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வஜ்ஜிரவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வா கிகள் இயற்கை விவசாயி பிர பாகரன், பாலாஜி, கோபிக் ஆகியோர் முன்னிலை வகித்த.னர். சிறப்பு அழைப்பாளராக சங்க மாநில தலைவர் ஈசன் முருகசாமி கலந்துகொண்டார்.

    உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். .

    தென்னை, பனையிலிருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் மாற்றங்களை ஏற்ப டுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

    இதில் நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக் கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிக்கை
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார் பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென் னாத்தூரில் உள்ள மார்க் கெட்கமிட்டி எதிரில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழு மலை, மாவட்ட மகளிரணிசெயலாளர் சாந்தா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன், கொள்கைபரப்பு செயலாளர் முனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் நடராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணிதுணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டுபோராட்டம் குறித் தும், 10 அம்ச கோரிக்கை களை விளக்கியும் பேசினார்.

    இதில் தமிழக அரசு நெல் குவிண் டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மர வள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும்.

    தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 4-வது நாளாக விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வரவில்லை
    • போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசனை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி காஞ்சி சாலையில் 9-வது நாளாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற மக்களின் எச்சரிக்கையும் மீறி அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்தந்த ஊராட்சிகளிலேயே கிடங்கு அமைத்துக் கொட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முன் வராததால் போராட்டத்தை தீவிரபடுத்த ஆலோசித்து வருகின்றனர்.

    • கோடை விடுமுறை வழங்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டம்

    போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜூலி தலைமை தாங்கினார். தலைவர் மல்லிகா, மாநில செயற்குழு உறுப்பினர் தேவி, பொருளாளர் சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    மாவட்டத் துணைச் செயலாளர் ரம்யா, துணைத் தலைவர் வேதவள்ளி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், மாநில குழு உறுரப்பினர் எம்.பி. ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

    கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் மே மாதம் விடுமுறை வழங்கிட வேண்டும். அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கிட வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துக்கடை பஸ் நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார்.மாநில இணை செயலாளர் அமிர்தவள்ளி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி, அரக்கோணம் வட்டார நிர்வாகிகள், உள்பட அங்கன்வாடிகள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடந்தது.
    • தென்னை விவசாயம் பிரதானமாக நடந்து வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

    பல்லடம் : 

    சூலூர் தாலுகா சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடந்தது. இந்திய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகையர் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஈசன் தலைமை வகித்து பேசியதாவது:- தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு செவி சாய்த்து கேட்பதில்லை.தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். கொள்முதல் 250 கிலோவில் இருந்து 500 கிலோவாக மாற்றி அமைக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதன் மூலம் எண்ணற்ற தென்னை விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

    ஆனால் விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். தென்னையில் ஏற்படும் வாடல் நோய், விலை கிடைக்காதது உள்ளிட்டவற்றால் தென்னை விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் தென்னை விவசாயம் பிரதானமாக நடந்து வரும் சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இல்லையெனில் டெல்லியில் நடந்தது போல் மாபெரும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் தமிழகத்திலும் நடக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    • முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,
    • உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மடத்துக்குளம்:

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையாக நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். மானியத் திட்டங்களை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் உரிமம் சான்று வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் இன்று காலை மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மண்டல செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.தருமன், செந்தில், கிருபாகரன், சுந்தரம், தனசேகரன், சுந்தரராஜன், சாம்ராஜ், நாராயணன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பி.பி.2 முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். துணை மின் நிலையங்கள் மற்றும் சில பணிகளை வெளி நபர்களுக்கு விடுவதை திரும்ப பெற வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    மின் ஊழியர்கள் போராட்டத்தால் மின்வாரிய அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மாநாட்டில் அறிவிப்பு
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருப்பத்தூர்:

    குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் மாநில மாநாடு திருப்பத்தூர் சைவ வேளாளர் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் எல்.சிவலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ் காளியப்பன் கொடியேற்றி வரவேற்றார், ஜி. கரிபீரன், வி. தட்சிணாமூர்த்தி, டி..கோடியப்பன் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் பொதுச் செயலாளர் ரா. சரவணன், தொடக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. பி. டில்லி பாபு கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வீரபத்திரன் பொருளாளர் கோ. அரங்கநாதன் உட்பட பல பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் எஸ் விஜயன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும், வனஉரிமை பாதுகாப்பு சட்டம் 2006 உறுதியுடன் அமல்படுத்த வேண்டும், ஜவ்வாதுமலையில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி கொடுக்க வேண்டும், காலம் காலமாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

    சென்னை ஐகோர்ட்டு வழக்கு தீர்ப்புப்படி பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அறிச்சையின்படி குருமன்ஸ் இன மக்களின் கலாச்சாரம் அடிப்படையை கொண்டு குருமன்ஸ் இனபழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் இல்லையென்றால் தாலுகா அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் வழங்கும் வரை அங்கேயே சமைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.

    ×