என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Action"

    • ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
    • முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 659 அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் உள்ளனர். மொத்தம் 83 ஆயிரம் இணைப்புகளுக்கான செட்டாப்பாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. அரசு கேபிள் டி.வி. படிப்படியாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அவ்வகையில், மாவட்டத்தில் 73 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே இயக்கத்தில் உள்ளன.

    தமிழ்நாடு அரசு கேள்பிள் டிவி நிறுவனம், பயன்படுத்தாத செட்பாப் பாக்ஸ்களை ஒப்படைக்க ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. ஒப்படைக்காத ஆபரேட்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், செயல்படாத நிலையில் உள்ள 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்களை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, முதல்கட்டமாக 17 ஆபரேட்டர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 183 ஆபரேட்டர்களிடம், சராசரியாக 10 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. முதல்கட்டமாக 17 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களிடமிருந்து 900 பாக்ஸ் திரும்ப பெறப்பட்டுள்ளன.

    அடுத்தடுத்து மற்ற ஆபரேட்டர்கள் மீது புகார் அளிக்கப்படும். பாக்ஸ்களை ஒப்படைக்காத பட்சத்தில், ஒரு பாக்ஸ் 1,726 ரூபாய் கணக்கிட்டு வசூலிக்கப்படுகிறது. உரிய அவகாசத்துக்குள் பாக்ஸ்களை ஒப்படைக்காதபட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும். மாவட்டத்தில் 532 ஆபரேட்டர்கள் சந்தா தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.
    • உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக்கிணறை சேதப்படுத்தி ஆழ்துளைகுழாய்களை உடைத்தெறிந்துள்ள சமூகவிரோத கும்பல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்வளமிக்க ஆழ்துளைக்கிணற்றை பயன்படுத்தி மக்களுக்கு தண்ணீர்விநியோகம் செய்திடவேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது. இதில் சிபிஐ. எம்., செல்லப்பம்பாளையம் கிளைச்செயலாளர் பிரபுராம், உடுமலைஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,டிஓய்எப்ஐ. செயலாளர் தமிழ்த்தென்றல், மாதர்சங்க செயலாளர் சித்ரா, விவசாயிகள் சங்கதலைவர்கள் ராஜகோபால், பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.

    • பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும்.
    • எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

       பல்லடம் : 

    பல்லடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பல்லடத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம், நகராட்சி எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டம் துவங்கிய போது இது எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்த ஆதரவுக் கூட்டம். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க, பா.ம.க., இந்து முன்னணி, கிளை நிர்வாகிகள் எழுந்து வெளி நடப்பு செய்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அழைத்துவிட்டு, எரிவாயு தகன மேடை ஆதரவுக் கூட்டம் என்று அறிவிப்பது முறையில்லாத செயல், அப்படி இருந்தால் முன்னரே எரிவாயு தகன மேடை ஆதரவு கூட்டம் என்று எங்களிடம் சொல்லி இருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம், என அவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசுகையில், பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும், மக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எதிர்க்கிறார்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டு,எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    • பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ராஜசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    எனக்கு சொந்தமான நிலத்தை மற்றொரு தரப்பி னர் மோசடி ஆவணங்கள் மூலம் பந்தல்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து ள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த சார் பதிவாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இதுசம்பந்தமாக உரிய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் எந்த உரிமையும் கோருவது கூடாது என்று 2020-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

    இதுவரை அந்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டுவிட்டது. இறுதி உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றார்.

    மனுதாரர் வக்கீல் மோகன் ஆஜராகி, மனுதா ரருக்கு சொந்தமான நிலத்தை 3-ம் தரப்பினர் உரிமை கோருகின்றனர். இதுசம்பந்தமாக உரிய உத்தரவிட வேண்டும் என்றார்.

    அப்போது நீதிபதி, மனுதாரர் விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அது சம்பந்தமாக விசாரித்துதான் முடிவு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் சம்பந்த ப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டது தொடர்பான உத்தரவை வருகிற 2-ந்தேதிக்குள் பதிவுத்துறை தலைவர் பிறப்பிக்க வேண்டும்.

    மனுதாரர் சொத்து ஆவணத்தில் தவறு நடந்திருந்தால் அதை பதிவுத்துறை தலைவர் தானாக முன்வந்து திருத்த வேண்டும். அதுவரை மனுதாரர் நிலத்தில் 3-ம் தரப்பினர் உரிமை கோரக்கூடாது. இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
    • ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேசியதாவது:-

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டும் இதை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

    அவ்வாறான ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு விவசாயிகள் கூறும்போது, பி.ஏ.பி. வாய்க்கால் வெட்டுவதற்கு முன், 50 மீட்டர் தூரத்துக்குள் ஏற்கனவே கிணறு, ஆழ்குழாய் கிணறு இருந்தால் அதற்கு இந்த விதி பொருந்துமா? என்பதை தெரிவிக்க வேண்டும். வாய்க்கால் வெட்டுவதற்கு முன் விவசாயம் செய்தவர்களுக்கு இந்த விதியை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்காது என்றனர். அவ்வாறான இணைப்புகளுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து பதில் தெரிவிக்கலாம் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.

    • பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பாமக நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்க ளில் தொடர்ந்து கடலூர் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்பவர் அவதூறு பரப்பி வந்த நிலையில் பா.ம.க. வினர் பலமுறை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை யில் நிர்வாகிகள் திரண்ட னர். பின்னர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலை யத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பி ரண்டு கரிக்கால் பாரிசங்கர் மற்றும் போலீசார் போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், பிள்ளையார் மேடு செல்வ சிவா என்பவர் பாமக நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதோடு பா.ம.க. விற்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார்.

    இது சம்பந்தமாக நிர்வாகிகள் தட்டி கேட்ட தற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். இது குறித்து உரிய நடவடி க்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தர வாதம் அளித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட செயலாளர் சண்.முத்து கிருஷ்ணன் கொடுத்த புகா ரின் பேரில் பிள்ளையார் மேடு சேர்ந்த சிவா என்ப வரின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்ப டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சியில் நீண்ட நாட்க ளாக சாலைகள் சேறும் சகதியமாக குண்டும் குழியு மாக இருந்து வருகிறது மேலும் கிராம அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கள் நாற்று நடும் போரா ட்டம் நடத்த திரண்டனர். தகவல் அறிந்த நாற்று நடும் போராட்டம் நடத்த வந்த மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பேச்சுவார்த்தையில் முடிவில் விரைவில் சாலை வசதி, சைடு வாய்க்கால் வசதி, கிராமங்களில் உள்ள சிறு பாலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொ ள்ளப்ப டும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். அதிகா ரிகளின் பேச்சு வார்த்தை யை தொடர்ந்து தற்காலிக மாக போராட்ட த்தை கை விட்டு மார்க்சி ஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.

    • இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
    • வல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், சிதம்பரம் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்களின் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம் வடலூரில் வசித்து வரும் நஸ்ருதீன் என்பவர் மீது தொடர் பொய் வழக்கு வடலூர் போலீசார் பதிவு செய்து வருகின்றனர். இதனை விசாரணை நடத்தி காவல் நிலைய அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேலும் முஸ்லிம் சமூகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் காவல்துறையின் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
    • மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் அதிக அளவில் வெளியில் சுற்றுவதால் அடிக்கடி வாகன விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அனைத்து தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் பன்றிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாநகராட் சிக்குட்பட்ட 45 வார்டு பகுதிகளில் தெருக்களில் கட்டி இருக்கும் மற்றும் சுற்றுத் திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக பிடித்து செல்ல வேண்டும். அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் தெருக்களில் கட்டியிருக்கும் மற்றும் சுற்றித்திரியும் பன்றிகள், ஆடுகள் மற்றும் மாடுகளை மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் உரிமை யாளர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகின்றது. ஆகையால் கால்நடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • அபிராமம் பகுதியில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

    அபிராமம்

    மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    இதை சாதகமாக பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் உள்ள தனியார் கணினி மையங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பாமர மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

    மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்றும் பொதுமக்களை குழப்பி வருகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் கணினி மையங்கள் வைத்துள்ள வர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கூடுதலாக பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், அபிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, இதை சாதகமாக பயன்படுத்தி அபிராமத்தில் உள்ள கணினி மையம் வைத்துள்ள தனிநபர்கள் ஒரு மின் இணைப்பு எண்ணுக்கு ஆதாரை இணைக்க ரூ.50, ரூ.100, ரூ.150 என்று பாமர மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.

    இதை கண்காணித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நாய்கள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.
    • பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    ஊட்டி

    ஊட்டி நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா செல் போன் எண்ணுக்கு ஒரு சிறுமி போன் செய்து நாங்கள் பி அண்டு டி குடியிருப்பு பகுதியில் வசிக்கிறோம். எங்கள் தெருவில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. நாய்கள் கும்பலா கடிக்கவருகிறது.

    தயவு செய்து புடியுங்கள் என பதட்டத்தோடு பேசினார். அவரும் நிச்சயம் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளார்.

    இதேபோன்று தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளர் பழக்கடைமுஜி போன்செய்து அதேபகுதியில் பள்ளிக்கு குழந்தையை விடச்சென்ற ஒரு பெண்ணை நாய்கள் துரத்தி ஆடையைபிடித்து கடித்துள்ளது. ஏதாவது செய்யவேண்டும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா மற்றும் பழக்கடை முஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். நகராட்சி கமிஷனர் காந்திராஜனிடமும், நகராட்சி எஸ்.ஐ மகாராஜாவிடமும் நிலைமையின் விபரீதத்தை எடுத்துச்சொல்லி உடனடி நடவடிக்கைக்கு எடுக்க கோரினர்.

    அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து ஒருமணிநேரத்தில் தெருநாய்களை பிடிக்கும் வாகனத்துடன் 10 பேரை அனுப்பிவைத்தனர்.நாய்களை பிடிக்கும் வாகனத்தை பார்த்த நாய்கள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.

    இருந்தும் 5-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். மீண்டும் வந்து மீதமுள்ள நாய்களை பிடித்து மாற்று பகுதிகளில் விட்டுவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    உடனே நடவடிக்கை எடுத்த நகரமன்ற உறுப்பினர் முஸ்தபா மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கும், நாய்களை பிடித்த அந்த அமைப்பின் நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

    • அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி, காட்டு கருவேல மரங்கள் நிறைந்த மாவட்டம் என்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அபிராமம் பகுதியில் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்கள் வளர்க்க அபிராமம் பகுதி சமுக ஆர்வலர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான சூழலை உருவாக்க கலெக்டர் ஜானிடாம் வர்கீசை தலைவராக கொண்டு மாவட்ட வன அலுவலர் பகான் ஜக்தீஸ் சுதாகர் தலைமையில் பசுமை அமைப்ப்பு அமைக்ககப்பட்டுள்ளது.

    இதில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை, அனைத்து கோட்டாட்சியர்கள், தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    இந்த அமைப்பு மூலம் 2023-ல் காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை வளர்த்து ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கன், பூவரசு. புளி மற்றும் மாதுளை, சீதா நெல்லி, வேப்பம் மரம் ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக அமைப்புகளும் செயல்பட அழைப்பு விடப்பட்டுள்ளது.

    இதையே அழைப்பாக ஏற்று அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சமூகப்பணி செய்துவரும் அபிராமம் பகுதி சமூக சேவை அமைப்பு மற்றும் இளைஞர்கள் தங்கள் பகுதியில் முனைப்பு டன் செயல்பட்டு காட்டு கருவேல மரங்களை அகற்றிவிட்டு மரங்களை நட்டு அபிராமம் பகுதியை பசுமை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×