search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "activity"

    • இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
    • பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியை பயிற்சிக்காக அனுப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஒரு ஆசிரியர் மட்டுமே 120 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பள்ளியின் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து நீர் கசிந்து சுவர் வழியாக வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. இதனால் லேசான கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமரவைத்துள்ளனர்.

    பள்ளி நேரத்தில் மழை பெய்யும் போது அந்த வகுப்பறையிலும் நீர் தேங்கி நிற்கிறது. இதனை அங்குள்ள துப்புரவு பெண் ஊழியர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அகற்றி வருகிறார். இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நேரங்களில் மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை. எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், தொடக்க கல்வி அலுவலரும் இப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பள்ளி இயங்கும் வகையில் பழைய கட்டிடத்தினை சீரமைத்து தரவேண்டுமென மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன.
    • விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூரில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா மேம்பாலம் இருந்து வரு கின்றது. இதில் 24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றது. மேலும் மிக முக்கிய பாலமாக இருந்து வருவதால் பொது மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியலாக இருந்து வருகின்றது. இதன் காரணமாக சாலை ஓரத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கி ளில் செல்லக்கூடிய பொது மக்கள் மண் குவியலில் சிக்கிக் கொண்டு பிரேக் அடிக்கும் சமயத்தில் தவறி கீழே விழுகின்றனர்.

    இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படும் அபாய மும் நிலவி வருகின்றது. கடலூர் பாரதி சாலை யில் இரு புறமும் சாலை ஓரத்தில் மண் குவியல்கள் அதிகமாக இருந்து வருவதால் விபத்து ஏற்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக அதி காரிகள் சாதாரண செயல் தானே என்று எண்ணா மல் ஒவ்வொரு முறையும் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லக்கூடிய வர்கள் எப்போது விழுந்து அடிபடுமோ? என்ற அச்சத்தில் சென்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மண் குவியலை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சட்டத்துக்கு புறம்பான ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம்), ஆஷா அஜித் (சிவகங்கை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    கைத்தறி தொழிலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையர் மூலம் அமல்படுத்தப்பட்ட கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், தமிழக அரசின் கைத்தறி ஆணையர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டம் பிரத்யேகமாக கைத்தறியில் மட்டுமே உற்பத்தி மேற் கொள்ளவதற்காக 11 ரகங்கள் சட்டத்தில் விவ ரித்துள்ளபடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்க வஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி ஜமுக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் போன்ற ரகங்கள் விசைத் தறியில் உற்பத்தி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது.

    இதைத் தவிர்க்கும் நோக்கில் கைத்தறி துறையால் தற்போது அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவ டிக்கைகளை கண்டறி யும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்படும்.

    மேலும், தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவா ளர்களின் இடர்பாடுகளை களைந்திடும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலை வாய்ப்பும், அதற்கான ஊதியமும் பெற்று பயன டைய வேண்டும்.

    கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரை மாவட்டத்தில் 21/9, கக்கன் தெரு, செனாய் நகரில் உள்ள உதவி அமலாக்க பிரவு அலுவ லகத்தை அணுகலாம். அல்லது சென்னை கைத்தறி ஆணையரக அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 98846-97637, 89369-97637, 91760-97637, 91766-17637, 91766-27637, 98845-97633, 98849-97633, 89391-97633, 89394-97633, 91763-97633 என்ற எண்களில் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம்), ஆஷா அஜித் (சிவகங்கை) ஆகியோர் தெரிவித்துள் ளனர்.

    • ராஜபாளையத்தில் குடிநீர் சீராக வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நீர்நிலைகளில் நகர்மன்ற தலைவி ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அய்யனார் கோவில் குடிநீர் தேக்க தொட்டிகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருவதால் நீர்நிலை அளவும் குறைந்து கொண்டு வருகிறது.

    இதனையடுத்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் சீராக வழங்க முன்எச்சரிக்கை நடவ டிக்கைகளை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மேற்கொண்டார்.

    நீர் நிலைகளை மேம் படுத்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்து விநியோ கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்திருந்த மின் இணைப்புகள் மற்றும் மோட்டார்களை துரிதமாக சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    நீர்த்தேக்க தொட்டி மற்றும் கிணறுகளின் நீர்நிலைகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை துரிதப்படுத்தினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணராஜா, குமார், ஞானவேல், சங்கர் கணேஷ், சுரேஷ், சிங்கராஜ், சுப்புலட்சுமி, வார்டு செயலாளர் கண்ணன், நகராட்சி பிட்டர் ராஜ்குமார், விஜி, மற்றும் பால் பாண்டி இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

    • செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சிகளில் 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. உறுதியளித்துள்ளார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி மற்றும் சேத்தூர் பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கு வது தொடர்பாகவும், பேரூராட்சியின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் செட்டியார்பட்டி பேரூராட்சியில் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. இதனை 3 நாட்ளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாஸ்தா கோவில் நீர் ஏற்றும் பகுதியில் இரவு பகல் என இருவேளை களிலும் பணியாட்களை முறையாக நியமித்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை செயல்படுத்த வேண்டும் என செயல் அலு வலரிடம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த செயல் அலுவலர் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டதற்கிணங்க 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். அதனை சேர்மன் கண் காணிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது,

    பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் வசதி, சுகாதரப்பணி மற்றும் தெரு விளக்கு வசதி பொதுமக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை சேர்மன், துணை சேர்மன், உறுப்பினர்கள் களப்பணி செய்து பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும் என தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கினார்.

    வாக்களித்த பொது மக்கள் தான் நமக்கு எஜ மானர்கள். அவர்களுக்கு பணியாற்றுவதே மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமையாகும். இதனை உணர்ந்து சேர்மன், துணை சேர்மன், கவுன்சிலர்கள் பணியாற்றுமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.

    இக்கூட்டத்தில் செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், துணை சேர்மன் விநாயக மூர்த்தி, பேரூர் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
    • சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    பொது இடங்களில் புகைப்பிடித்தலோ, புகை–யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட–னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப் பட்டாலோ, உறுதி செய்யப் பட்டலோ உடனடி அபரா–தமாக முதன்முறையாக ரூ.100, மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக் கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்ப–டுத்துவதில்லை.

    புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளா–வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், காச–நோய், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட் டினால் உயிரிழக்கின்றனர்.

    பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப் பான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்க–ளிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரையரங்கு–கள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியு–டன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப் பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 53 ஊராட்சி மன்றத்தலை வர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான தண்ணீர் தேவையை நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதியளவு தண்ணீர் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திலிருந்து வழங்க இயலாத சூழ்நிலை தற்பொழுது உள்ளது. அதை மாற்றி அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளும் பொழுது அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 2054-ஆம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வழங்கிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது உள்ள நிலையை சரியாக மதிப்பிட்டு படிவத்தை பூர்த்தி செய்து வருங்கால சந்ததியினருக்கு தடையின்றி குடி தண்ணீர் கிடைத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், உதவி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    சிவகங்கை

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
    • திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடமாடும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. அ.தி.மு.க இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.

    வட்டச் செயலாளர் பொன் முருகன் வரவேற்றார். இதில்

    அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி கோடை காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. திருப்ப ரங்குன்றம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது.

    பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் மது கடைகளும் அமைந்துள்ளன. இவற்றை அகற்றக்கோரி சட்டப்பேரவையில் நான் குரல் கொடுத்த போது அதற்காக ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். மதுக்கடைகளை அகற்றுவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டம் டைட்டல் பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அவர்கள் அறிவிப்போடு நிறுத்தி விடுவார்கள். அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை செய்ததில்லை. மதுரை தொழில் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர்கள் அறிவிக்கவில்லை.

    அதே சமயத்தில் அ.தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை உடனடியாக செயல்படுத்தி காண்பிக்கும். தி.மு.க. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்ட செயலாளர் நாகரத்தினம், என்.எஸ். பாலமுருகன், பாலா, தவிடன், முத்துக்குமார், அக்பர் அலி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு புத்தகப்பை கள் நேற்று வழங்கப்பட்டது. இந்தப் பைகள் மிகவும் நேர்த்தியாகவும், தரமான தாகவும் இருந்தது
    • 10-்க்கும் மேற்பட்டவர்கள் புத்தகப் பைகளை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்றனர்,

    விழுப்புரம்,:

    தமிழகம் முழுவதுமுள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகப்பைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் புத்தகப்பை வழங்கப்பட்டு வருகிறது.்அதன்படி விழுப்புரம் அடுத்த கோலியனூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை கள் நேற்று வழங்கப்பட்டது. இந்தப் பைகள் மிகவும் நேர்த்தியாகவும், தரமான தாகவும் இருந்தது. இந்தப் பைகளை பெற்றுக் கொண்ட 12-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலர் இதனை வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர்.

    புத்தகப்பைகள் வேண்டா மென்றால், பள்ளியிலேயே திருப்பி அளித்திருக்கலாம், அல்லது ஏழை மாண வர்கள் யாருக்காவது கொடுத்தி ருக்கலாம். ஆனால் அடா வடி மாணவர்கள் 10-்க்கும் மேற்பட்டவர்கள் புத்தகப் பைகளை கழிவுநீர் வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஎனவே, புத்தகப்பைகளை வாய்க்காலில் வீசி சென்ற மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வீசி சென்றவர்களுக்கு அனைத்து இலவசங்களையும் நிறுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம், உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இளையான்குடி வட்டாரம், சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சூராணம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 22 ஆயிரம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 8 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகிலுள்ள கிராமங்களில் இருந்தும், தினசரி சுமார் 120 பேர் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காகவும், மாதந்தோறும் சராசரியாக 5 பிரசவங்களும் நடைபெறு கிறது. இதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீட்டு அறிக்கை பொதுப்பணித்துறையின் சார்பில் பெறப்பட்டு, அரசிற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கி னார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த்ரேசிஸ், மருத்துவ அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    • எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • செயல் விளக்கத்தை இந்திரா இண்டேன் பரசுராமன் விளக்கிக் கூறினார்.

    புதுச்சேரி:

    இந்திரா இண்டேன் கியாஸ் நிறுவனம் சார்பில் தொண்டமான் நத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சமையல் எரிவாயு குறித்து எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    செயல் விளக்கத்தை இந்திரா இண்டேன் பரசுராமன் விளக்கிக் கூறினார். இதில் பள்ளியின் முதல்வர் சண்முகம், சொர்ணாம்பிகா, அன்பரசி, செல்வலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த விழிப்புணர்வு முகாமில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பாளர் உத்திரேஸ்வரன் மற்றும் மகளிர் சுயநிதி குழு அமைப்பாளர் சந்திர வசந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

    ×