search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admissions"

    • இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
    • பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

    நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்பு பிரிவில் 9,639 இடங்கள் இருந்த நிலையில் அதில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

    இதையடுத்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் முதல் சுற்று ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்26,654 மாணவர்கள் பங்கேற்றார்கள். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை வருகிற 31-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.

    இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 1-ந்தேதி காலை 10 மணிக்குள் வெளியிடப்படும்.

    மறுநாள் 2-ந்தேதி மாலை 5-மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் இடங்களை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

    பொது கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3-ந்தேதி வரை நடை பெறுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர மாணவ-மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதனால் கடந்த ஆண்டை விட அதிகமான இடங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    • கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
    • செப்டம்பர் 3-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

    சென்னை:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவா் சோ்க்கையில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், சிறந்த விளையாட்டு வீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22 முதல் 27-ந் தேதி வரை நடைபெற்றது. 22, 23 ஆகிய நாட்களில் சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    இதற்கு மொத்தம் 710 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த கலந்தாய்வு மூலம் 92 இடங்கள் நிரம்பின. கல்லூரியை தோ்வுசெய்து உறுதிப்படுத்திய மாணவா்களுக்கு 23-ந் தேதி இரவு இணைய வழியில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து, சிறப்பு பிரிவினருக்கான பொது கலந்தாய்வு 25-ந் தேதி தொடங்கி சனிக்கிழமை முடிவடைந்தது. மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணை இன்று (ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. இதைத்தொடா்ந்து வருகிற செப்டம்பர் 3-ந் தேதி வரை நடைபெறும் இக்கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

    இதேபோன்று தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடா்ந்து வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வு ஒரே சுற்றாக நடத்தப்படுகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் டி.புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

    • நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
    • ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம் வின்சென்டில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த கல்லூரியில் 20 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இளநிலை படிப்புக்கு 1400 இடங்கள் உள்ளன. இதற்காக நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இங்கு சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி நடைபெற்றது.

    இந்தநிலையில் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று கல்லூரியில் தொடங்கியது. கல்லூரி முதல்வர் செண்பக லெட்சுமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.

    இதில் இளங்கலை கணிதம், புள்ளியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    அப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஏ. தமிழ், பி.காம், பி.காம். சி.ஏ, பி.காம். கூட்டுறவு, நிலவியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவ-மாணவிகள் விரும்பி தேர்வு செய்தனர். இதனால் அந்த பாடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து நாளை ( 11-ந் தேதி) பி.காம், பிகாம் சி.ஏ., கூட்டுறவு, பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியில் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

    இந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்ட செல்போன்குறுஞ்செய்தி, இ.மெயில் விவரம் ஆகியவற்றுடன் 10,11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , சாதி சான்று, மாற்று சான்று, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருகிற 15-ந் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

    • ஏழை குழந்தைகளை கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி.
    • மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பல தனியார் பள்ளிகளில், கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் மாணவர்களும் முழுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது சட்டவிரோதம் ஆகும். நிர்வாகங்களின் மிரட்டலுக்கு பணிந்து கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு அதற்கான ரசீது வழங்கப்படுவதில்லை.

    இதை கண்காணிக்க வேண்டிய மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால், பள்ளி களின் கட்டணக் கொள்ளை யைத் தடுக்க முடியவில்லை. இதனால், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்தாலும் கூட, கட்டணம் செலுத்த வழி இல்லாததால் அந்த இடத்தில் சேர முடியாத நிலைக்கு ஏழைக் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி அரசு வழங்கும் கட்டணம் குறைக்கப்பட்டால், அதை எதிர்த்து அரசிடம் முறையிடலாம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தலாம்? அதை விடுத்து அரசிடமும் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஏழைக் குழந்தைகளையும் கட்டணம் செலுத்தும்படி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி ஆகும். இதை அரசும் வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க முடியாது.

    கல்வி உரிமைச் சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் சேர்ந்து பயில்வதையும், அவர்களிடம் எந்த கட்ட ணமும் வசூலிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை ஆகும். கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டணம் குறைக்கப்பட்டதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    இது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகங்களை அரசு அழைத்து பேசி, இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும். கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
    • தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப்படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

    அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.

    2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் இன்று நடந்தது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    சென்னையில் 36 மையங்களில் 24 ஆயிரத்து 58 மாணவ-மாணவிகள் நீட் தேர்வை மிகவும் ஆர்வமுடன் எழுதினார்கள்.

    தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. ஜூன் மாதம் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

    நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    மாணவ-மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இடம்பெற்றுள்ள நடைமுறைகளை பின்பற்றி மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினார்கள்.

    மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கு முன்பாக வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    அவ்வாறு 1.30 மணிக்குள் வந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    அதன்பிறகு வருகை தந்த மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஹால் டிக்கெட் மற்றும் அடையாள சான்று இல்லாத மாணவர்களும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

     தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் காகிதம், துண்டு சீட்டுகள், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், எலெக்ட்ரானிக் பேனா, லாக் அட்டவணை, கையில் அணியும் ஹெல்த் பேண்ட், கைப்பை, பிரேஸ்லெட், செல்போன், மைக்ரோபோன், புளூடூத், இயர்போன், பெல்ட், பர்சுகள், கைக்கடிகாரம், நகைகள், உணவு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ஷூ அணிந்து வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. எளிதில் தெரியும் படியான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்பட்டது.

    மேலும் முறைகேடுகளை தடுக்க தேர்வு அறையில், தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் அனைவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்பட்டனர். முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகளுக்கு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

    • அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
    • கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.

    கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.

    கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தோப்புத்துறை ஊராட்சிபள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைவர் நிஷாந்தி தலைமையில் நடந்தது.

    முன்னதாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

    பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, கூட்ட பொருள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, துணை தலைவர் உமா மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர் அம்சவல்லி கோவிந்தராஜுலு, கல்வியாளர் ஆர்த்தி, உறுப்பினர்கள் ரபியத்துல் பஜ்ரியா, மீனா, முருகானந்தம், சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    கூட்டத்தில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்துவது, 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்லூரி கல்வி பெற வழிகாட்டுவது மற்றும் உதவி செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்தவருக்கு முழுமையாக 4 வழிகளில் கலந்தாய்வு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

    தற்போது மேற்கண்ட பாடப்பிரிவுகளில் நிறைய காலியிடங்கள் இருப்பதால் அந்த பாடப்பிரிவினருக்கு இன ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    அந்த 6 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் இன்று கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று கல்லூரி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பூர்த்தி செய்து வழங்கலாம்.

    இணையதளம் வழியாக விண்ணப்பித்து தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளுக்கும் இடங்களை மேற்கண்ட காலியான பாடப்பிரிவுகளுக்கு விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தால் அந்த பாடப்பிரிவினருக்கு தகுதியானவர்கள் இன ஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் கூறியுள்ளார்.

    • என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
    • கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக் மற்றும் எம்.ஆர்க் படிப்புகளுக்கு 2 வகையில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கேட் தேர்வு மற்றும் டான்செட் ேதர்வு எழுதியோருக்கு தனித்தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    இதன்படி கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை வருகிற 14-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவ- மாணவிகள் இந்த கல்லூரியை தேர்வு செய்து வருகின்றனர்.

    • தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தொழிற்பிரி வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழிற்சாலைகளின் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் அரசு தொழிற்ப யிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்க ளில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 7-ந் தேதி வரை பல்வேறு தொழிற்பிரி வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கா னிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சா லைகளின் நவீன தொழிற்நுட்பத்திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள பிரிவுகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், செல்போன் எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்க ளுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியா ளர்கள் சேர்க்கை இணை யவழிக் கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. இதற்காக இணைதளம் வாயிலாக கடந்த 24-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மாணவர்களின் விண்ண ப்பங்கள் அடிப்படையில் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இணையதளத்தில் வெளியிட ப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ ர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவ சமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சா லைகளின் நவீன தொழில்நு ட்பத்திற்கு ஏற்றவாறு முன்னனி தனியார் நிறுவன ங்ளுடன் இணைந்து தொழிற்நுட்ப மையங்களாக உயர்த்த ப்பட்டு பயிற்சியளிக்க ப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவன ங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 07.06.2023 ஆகும். இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

    • சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும்.
    • மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சத்தான உணவு

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண வுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளி கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி நாமக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதக மண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவி களுக்கான விளை யாட்டு விடுதி நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    தேர்வு

    மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளை யாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்க ளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்கு வதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடை பெறும். இதற்கான மாவட்ட அளவி லான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபாடி மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்கு வாஷ், மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து , கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜீடோ ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    முன்னூரிமை

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16-ந்தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறா மல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×