என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alimony"

    • சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
    • தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளார்.

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.

    தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

    ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

    இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றனர். அதிகாரபூர்வ விவாகரத்து ஆணையை குடும்ப நல நீதிமன்றம் இன்று வழங்கியது.

    இந்நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளதாக, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.2.37 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்து ஆணை வழங்கப்பட்ட பிறகு மீதமுள்ள தொகையை சாஹல் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று குடும்ப நலநீதிமன்றத்திற்கு வருகை தந்த சாஹல் "Be Your Own Sugar Daddy" என்ற வாசகம் பொருந்திய டி- ஷர்ட் அணிந்து வந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பாலியல் உறவு, நட்பு போன்றவற்றுக்கு ஈடாக பெண் ஒருவருக்கு பணம், பரிசுகள் போன்றவற்றை வழங்கும் வயதான பணக்கார ஆணை சுகர் டாடி என்று குறிப்பிடுகிறார்கள்.

    • 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
    • யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.

    தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.

    ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

    இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளதாக, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.2.37 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும்.
    • தச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் [1986] விஞ்ச முடியாது.

    விவாகரத்தான இஸ்லாமிய பெண்களும் கணவனிடம் ஜீவனாம்சம் பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒன்றில், விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம்வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கணவர் மனுத்தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை தற்போது தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 125 இன் கீழ் விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்கியாக வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் திருமணமான அனைத்து பெண்களுக்கும் அது பொருந்தும். மதச்சார்பற்ற சட்டத்தை, முஸ்லீம் பெண்கள்(விவாகரத்து மீதான உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 1986 விஞ்ச முடியாது.

    ஜீவநாமசம் என்பது பெண்களின் உரிமை. மனைவி உணர்வு ரீதியாகவும் பிற வகையிலும் தங்களை சார்ந்து இருதப்பதை சில கணவர்கள் புரிந்துகொள்வதில்லை. இந்திய குடும்பங்களில் இல்லத்தரசிகளின் பங்கையும், தியாகத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • சொத்து தகராறு ஏற்பட்டதால் 80 வயது கணவனை பிரிந்து மனைவி தனியே வாழ்ந்து வந்தார்.
    • கணவரிடம் இருந்து ஜீவனாம்சமாக ரூ.15,000 தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.

    குஜராத்தில் 2018 ஆம் ஆண்டு முனேஷ் குமார் குப்தா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியருக்கும் அவரது மனைவிக்கும் (76) இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் இருவரும் பிரிந்து தனியே வாழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், கணவரின் மாத ஓய்வூதியம் 35,000 ரூபாயில் இருந்து ஜீவனாம்சமாக ரூ.15,000 தரக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார்.

    இன்று அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சவுரப் ஷியாம் ஷாம்ஷேரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்குகள் கவலை அளிப்பதாகவும் கலியுகம் வந்து விட்டது போல் உள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக அந்த குப்தாவின் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி, அடுத்த விசாரணையில் தம்பதியினர் சமரசம் செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். 

    • ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
    • நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.

    கோவை:

    கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.

    அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.

    பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.

    • சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்தார்.
    • நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

    முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் இரண்டாம் கணவரிடம் இருந்து பெண்கள் ஜீவனாம்சம் பெற முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தெலுங்கானாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் பரஸ்பர ஒப்பந்தத்தில் மட்டும் கையொப்பமிட்டு முதல் கணவரைப் பிரிந்தார். பின்னர் வேறொருவரை இரண்டாம் திருமணம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 ஆவது கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வரதட்சிணை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பெண் புகாா் அளித்தார்.

    மேலும் தனக்காகவும் தனது மகளுக்காகவும் 2 ஆவது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் 2ஆவது கணவன் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து 2 ஆவது கணவன் உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்தார். முதல் கணவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாதததால் 2 ஆவது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற முடியாது என கூறி குடும்ப நல நீதிமன்றத்தில் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

    இந்த உத்தரவுக்கு எதிராக அந்த பெண் உச்சநீதிமன்றம் சென்றார். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, முதல் கணவரிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 125 இன் கீழ் 2 ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது.

    திருமணம் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை கணவன் அனுபவிக்கும்போது, அதன்மூலம் ஏற்படும் கடமைகளை அவர் தட்டிக்கழிக்க முடியாது. எனவே பெண்ணுக்கு 2ஆவது கணவா் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

    உலகிலேயே அதிக அளவில் ரூ.2½ லட்சம் கோடியை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுக்கிறார் அமேசான் நிறுவன தலைவர். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce
    நியூயார்க் :

    உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பில்கேட்சை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவரது தற்போதைய சொத்து மதிப்பு 136 பில்லியன் டாலர் ஆகும்.

    ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவன தலைவராகவும், பெரிய கோடீஸ்வரராகவும் ஆவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. அதன்பின்னர் 1994-ம் ஆண்டு ஜூலை மாதம் அமேசான் நிறுவனத்தை ஜெப் பெசோஸ் தொடங்கினார்.

    இந்நிறுவனம் உலகம் முழுவதும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றதால் லாபத்தை அள்ளிக்குவித்தது. இதன் மூலம் ஜெப் பெசோஸ் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

    ஜெப் பெசோஸ்-மெக்கின்சி தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அத்துடன் ஒரு பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ஆகிய இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். அதன்படி நேற்று இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.

    அமெரிக்க சட்டப்படி விவாகரத்தின் போது கணவனின் சொத்தில் 50 சதவீதம் வரை மனைவி ஜீவனாம்சமாக பெற முடியும். அதன்படி அமேசான் நிறுவனத்தில் ஜெப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதியளவான 8 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் 4 சதவீத பங்குகளை மெக்கின்சிக்கு இழப்பீடாக அளிக்க ஜெப் பெசோஸ் ஒப்புக்கொண்டார். இந்த பங்குகளின் மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி) ஆகும்.

    மெக்கின்சி இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அத்துடன் ‘வா‌ஷிங்டன் போஸ்ட்’ மற்றும் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘பூளு ஆர்ஜின்’ ஆகிய நிறுவனங்களில் தனக்கு இருக்கும் பங்குகளை கணவருக்கு விட்டுக்கொடுப்பதாக மெக்கின்சி தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து இருவரும் விவகாரத்து சொத்து உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்த தகவலை இருவரும் தனித்தனியாக தங்களின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தனர்.

    ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுப்பதன் மூலம் உலகிலேயே அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகிறார் ஜெப் பேசோஸ்.

    தனது மொத்த சொத்து மதிப்பில் 25 சதவீதத்தை மனைவிக்கு கொடுத்தாலும் உலகின் முதல் பணக்காரராக ஜெப் பேசோஸ் தொடர்கிறார்.

    அதே போல் கணவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி பெற்றதன் மூலம் மெக்கின்சி, உலகின் 3-வது மிகப்பெரிய பெண் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். #Amazon #JeffBezos #MacKenzie #Divorce 
    இரண்டு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காத நிலையில் முன்னாள் மனைவி கோர்ட்டை நாடிய நிலையில், 24600 ரூபாயை முன்னாள் கனவர் சில்லரைகளாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
    சண்டிகர்:

    அரியானா ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

    இரு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காததால் அந்த பெண் கோர்ட்டை நாட,  2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. 

    இதையடுத்து அந்த வக்கீல் ரூ.24,600 ரூபாயை சில்லரையாகவும், மீதமுள்ள 400 ரூபாயை நூறு ரூபாய் நோட்டாகவும் மூட்டையில் கட்டி நீதிமன்றத்துக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என முறையிட்டார்.

    ‘ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தான் உத்தரவு. நோட்டாகதான் கொடுக்க வேண்டும் என்பது உத்தரவல்ல’ என வக்கீல் சட்டம் பேச வாக்குவாதம் வெடித்துள்ளது. பின்னர் ,அந்த வழக்கறிஞர் சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன் என்றும் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    ×