என் மலர்
நீங்கள் தேடியது "ambedkar"
- அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
- ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
- வக்கீல்.கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
- நாஞ்சிக்–கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ெதற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பாரதரத்னா டாக்டர் அம்பேத்காரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். அம்பேத்காரின் சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபு மண்கொண்டார், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் லெட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணித்தலைவர் கலைச்செல்வன், சண்முகநாதன், நாஞ்சிக்கோட்டை இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறியாளர் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை:
சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் காவி உடை அணிவது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவரை அவமதித்த இந்து மக்கள் கட்சியை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் அம்பேத்கரை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
இந்து மக்கள் கட்சியினர் அண்ணல் அம்பேத்கரை வேண்டும் என்றே அவமதிப்பதாகவும், வரலாற்றை மாற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களையும் இதே போல் இழிவுபடுத்தும் வகையில் அந்த அமைப்பு செயல்படுவதாகவும் இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதே போல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
- சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
- அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
சென்னை:
டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனநாயகம் காப்போம் சிறுத்தைகள் அணிவகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சனாதன-கார்ப்பரேட் மோடி அரசின் பாசிசப் போக்கை கண்டித்து இந்த அணிவகுப்பு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நாளை நடைபெறுகிறது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்று கூடி அணிவகுப்பாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்காக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.
சென்னையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தை அணிவகுப்பு நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து எல்.ஜி. சாலை வரை மத்திய அரசுக்கு எதிராக அணிவகுத்து செல்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், ந.செல்லத்துரை, ரவிசங்கர், வி.கோ.ஆதவன், அன்பு செழியன், அம்பேத் வளவன் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
சென்னையில் உள்ள 6 மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிகிறார்கள்.
முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் மணிமண்ட பத்தில் நாளை திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அசோக் நகரில் உள்ள 'வெளிச்சம்' அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
- அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
- ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.
இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.
இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.
அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.
நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
+2
- ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இரவில் முளைப்பாரி எடுத்து வானவேடிக்கை முழங்க பலர் ஊர்வலமாக வந்தனர். அப்போது யார் முதலில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது என்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்பிறகு இருதரப்பினரும் கலைந்து சென்றபோது போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர். அப்போது போலீஸ் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் கல்வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரையும் அந்த கும்பல் கல்வீசி தாக்கினர். ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் பலத்த காயமடைந்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஸ்டோங்கரே வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இரவு முழுவதும் விடியவிடிய தேடுதல் வேட்டை நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீசாரிடம் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே அதிகளவில் கைது செய்திருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.
கல்வீச்சு சம்பவத்தால் பெரியகுளத்தில் பதட்டமான சூழல் உருவானதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை போட்டு பிரச்சினை ஏற்படாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அம்பேத்கார் பிறந்தநாள்விழாவில் இதேபோன்று மோதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தனர் என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு இரவு நேரத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகளவு மக்களை அனுமதித்தால் கலவரம் வெடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
- அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி:
நந்திவரம் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கேசவலு தலைமையில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் ஆர்.கலைச்செல்வன், தேவி தனசேகரன், எம்.கண்ணன், முன்னாள் கவுன்சிலர் என்.சரவணன் நிர்வாகிகள் பார்கவி வெங்கடேசன், பெருமாள், டெய்லர் கன்னியப்பன், டி.பிரபு, ஆர்.முருகன், அருள் குமரன், பப்பு, அசோகன், குமரன், செல்வராஜ், அரவிந்தராஜா, ஆதித்தன், எம்.கோதண்டம், கே.எஸ்.விஜயகுமார், பினகபாணி, எஸ்.நட்ராஜ், என்.மாணிக்கவாசகம், சுந்தரம், தங்கவேல், வி.கார்த்திக், எம்.கே.முனியாண்டி, மகேஷ், மாரி, தணிகாச்சலம், தனசேகர், அருண், மணிகண்டன், பிரவின், தினேஷ், நித்தியானந்தம், ராஜ்குமார்,சூர்யா,எஸ்.வினோத், வி.விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் தலைமையில் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் கர்ண மகாராஜா முன்னிலை வகித்தார்.கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார்.
மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட பசுமை தாயகம் தலைவர் திருஞானம், கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் பாலா,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ்,மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் செரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
சிவகங்கை
சிவகங்கையில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்திராநகர் அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தி.மு.க. சார்பில் நகரசெயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ பாண்டி, சரவணன், கார்த்தி கேயன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் அ கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் சோணை, மதியழகன் வட்டார தலைவர், சிதம்பரம், வெள்ளைசாமி, உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முக ராஜன், மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் சையதுஇப்ராஹீம்,, மாவட்ட மகளிர்தலைவி இமயமடோனா, விஜயகுமார், வள்ளியப்பன், லட்சுமணன், சீனிவாசன், மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்,
தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநிலச் செயலர் செல்வ குமார், மாவட்டத் தலைவர் சரோஜினி, செயலர் குண சேகரன், துணைத்தலைவர் தமிழ்ச் செல்வம், கிளைத்தலைவர் ராசாமணி, கிளைச் செயலர் பிரபா கரன், குமரேசன், செந்தில் குமார், கருப்புச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச் செயலாளர் கோபால், நகரத் துணைச் செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு, மாதர் சங்க நிர்வாகிகுஞ்சரம் காசிநாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
- அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, மக்கள் தேசம் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பேரவையின் சார்பில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகி சேரன்யாக்கோப்பு, மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் சமூகஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கார் பிறந்த நாள் விழா, பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது.
இதில் அண்ணாதுரை, டாக்டர் ராஜ்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் ,பாலாஜி ஈஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- எங்கள் அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.
- பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.
தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலேயே உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:-
அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி சந்திரசேகர ராவ் பேசினார்.
ஆனால் ஒரு பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.
எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருந்தால், எங்கள் மாண்புமிகு அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.
அவர் நமது அரசியலமைப்பின் தந்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அவர் தனது வார்த்தைகளை முன்வைத்துள்ளார்.
நேற்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்றார்.
- வாடிப்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
- தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை தாங்கினார்.
துணைச் செயலாளர் சிறுத்தை பாலன், பாசறை பேரூர் செயலாளர் யுவராஜா, தொகுதி செயலாளர் வளவன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் தளபதி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.
நில உரிமை மீட்பு துணை அமைப்பாளர் விடுதலை வீரன் இனிப்பு வழங்கினார். தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மச்சராசன், குண்டுமலை, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.