என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anniversary"

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
    • இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

    இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.

    பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.

    மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார். 

    • 08 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.
    • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் : 

    திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் சாலையில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் 10ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று காலை 9மணிக்கு வேள்வி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிேஷகம், பாலாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 12 மணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜையும், தொடர்ந்து சிறப்பு பஜனையும் நடந்தது.அவிநாசி வாசீகர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி தலைமையிலான குழுவினர் ஆண்டு விழா பூஜைகளை நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீசீரடி சாய் பீடம் அறக்கட்டளை செய்திருந்தது.  

    • அரசு பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள க.பெருமாள் பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 1972 ஆண்டு தொடங்கப்பட்டது.இப்பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா கள்ளர் சீரமைப்பு துறை கல்வி அலுவலர் ஜவகர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர் செல்வ பாண்டி, மாவட்ட கவுன்சிலர் ரெட் காசிமாயன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சரவண குமார் வரவேற்றார்.ஆண்டுவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.முன்னாள் மாணவர்கள் பிருத்வி, மலைச்சாமி, பிரகாஷ் ஆகியோர் நூலகத்திற்கு தேவையான பொருட்க பொருட்களை வழங்கினர்.

    உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் கணேசன் விழாவை தொகுத்து வழங்கினர். முதுநிலை ஆசிரியர் முத்து குமார் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி ஆண்டு விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதி சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினனர். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசும்போது, கணபதி சுந்தர நாச்சியார்புரம், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகர் மற்றும் கோதை நாச்சியார்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுள்ளது என்றார். விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா, தலைமை ஆசிரியர் சாந்தி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன், கிளை செயலாளர்கள் கருணாகரன், பாலமுருகன், கனகராஜ், மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை

    பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் எம்.கே.ஆர்.அய்ய நாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கில பள்ளியின்

    23-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளிதலைவர்ஜெமினிஎஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். விழாவிற்கு வந்த வாழ்த்து செய்திகளை துணைத்தலைவர் எம். எஸ்.சோமசுந்தரம் வாசித்தார்.

    பொருளாளர் டி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் ஆர்.கவுதமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் பள்ளி புரவலர் ஜெயலட்சுமி அம்மாள், தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கியின் சிந்தாமணி கிளை மேலாளர் ஆர்.கண்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், இணைசெயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் கே.ஆனந்த் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் எச்.ஆயிஷா நன்றி கூறினார்.

    • திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது.
    • விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.

    திசையன்விளை:

    திசையன்விளை ஜெயராஜேஷ் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் ஜெயராஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 32-வது ஆண்டு விழா நடந்தது. டாக்டர் ஜெகன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ராஜேஷ்வரன், பள்ளி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜய் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி முதல்வர் ராஜேஷ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் அரசு பொதுத்தேர்வில் முதல் இடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளில் பல்வேறு வகையான கலைநிகழ்சிகள் நடந்தது. மாணவி கேத்ரின் ரெஜினா நன்றி கூறினார்.

    • சாயல்குடி அருகே மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
    • விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் உள்ள வி.வி.எஸ்.எம்.நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா முன்னிலை வகித்தனர். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அங்காள ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பேருக்கு சிறப்பு பரிசுகளை சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பாலமுருகன், சத்தியதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    • தெற்குவள்ளியூர் நிர்மலா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது.
    • டி.டி.என்.கல்விகுழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.

    வள்ளியூர்:

    தெற்குவள்ளியூர் நிர்மலா ஆர்.சி.நடுநிலைப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. டி.டி.என்.கல்விகுழுமத்தின் தலைவரும், பள்ளியின் புரவலருமான டி.லாரன்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும் வள்ளியூர் புனித பாத்திமா அன்னை திருத்தல பங்குதந்தையுமான ஆர்.ஜேசுதுரை ஜாண்சன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக கலந்தபனை அமைதி இல்லம் இயக்குனர் தந்தை ரெக்ஸ், வள்ளியூர் பாத்திமா அன்னை ஆலய உதவி பங்குதந்தை, புனித பாத்திமா மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டிசலேத் ஜெயந்தி, திருச்சிலுவை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அக்ஸிலியா, ஊராட்சி மன்ற தலைவி முத்தரசி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி பிரேமா ஆகியோர் பங்கேற்று பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.லாரன்ஸ் பரிசு வழங்கி பாராட்டினார். ஆசிரியை அமலா வரவேற்றார். ஆசிரியை பிரபா நன்றி கூறினார்.

    • முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 43-வது ஆண்டு விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் சேக்தாவூது ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சாதனை படைத்த முதல், 2-ம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு சென்னை கே.வி.எஸ். தொழிற்சாலை நிர்வாக இயக்குநரும், தொழில் அதிபரும், முன்னாள் மாணவருமான வெற்றிசெழியன் பரிசு வழங்கினார். கல்லுாரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் வரவேற்று பேசினார். எந்திரவியல் துறைத்தலைவர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.

    கல்லூரி துணை முதல்வர் சேக் தாவூது, அமைப்பியல் துறை தலைவர் (பொறுப்பு) செந்தில்ராஜன், எந்திரவியல் துறைத்தலைவர் டாக்டர் கணேஷ்குமார், மெரைன் துறை தலைவர் (பொறுப்பு) சுதேவ், மின்னியல் துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன், கணினி துறை தலைவர் (பொறுப்பு) நாகராஜன் மற்றும் முதலாம் ஆண்டு துறை தலைவர் (பொறுப்பு) உமையாள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில் அனைத்து துறை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியின் 25-ம் ஆண்டு விழா நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், பெரியமோட்டூர் ஊராட்சி, பூனைக்குட்டிபள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப்பள்ளி தரமாக உயர்த்தப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் பெங்களூர் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவர் பள்ளியின் அருகே உள்ள ஒரு ஏக்கர் சொந்த நிலத்தை உயர்நிலைப்பள்ளி கட்டிடம் அமைக்க இலவசமாக கொடுப்பதற்கு முன் வந்தார்.

    இதனை அடுத்து பள்ளியின் 25-ம் ஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு நிலம் வழங்கியவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். அமுதா தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சுப்பிரமணி வரவேற்றார். பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் என். கமலநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எம் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

    உயர்நிலைப்பள்ளிக்கு கட்டிடம் அமைக்க ஒரு ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு இலவசமாக கொடுத்த வடிவேலை அனைவரும் பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்தனர்.

    இறுதியில் பள்ளியின் ஆசிரியை ஜி. ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

    • ராமநாதபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருப்பாலைக்குடி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் 87-வது ஆண்டு விழா கிராமத்தலைவர் தமிழ்கண்ணன் தலைமையில் நடந்தது.

    மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டார வள மைய அலுவலர் சுரேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜூ வரவேற்றார். யூனியன் தலைவர் ராதிகாபிரபு, பேரூராட்சி தலைவர் மவுசூர்யா கேசர்ஹான், ரோட்டரி கிளப் மாவட்டத்தலைவர் பார்த்திபன், செயலாளர் கூரிதாஸ், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.

    விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.ஒன்றிய கவுன்சிலர் காளியம்மாள், கிராமச்செயலாளர் அதிரை மன்னன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தலைவர் சசி கனி,பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ராணி, ஆலோசனைக்குழு தலைவர் சின்னராஜா, முன்னாள் மாணவர் சங்கம் பால்கனி, உதயவேல் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் அன்பின் அமலன் நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 60-வது ஆண்டு விழா நடந்தது.
    • இதில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60-வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டன்ராஜா தலைமை தாங்கினார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் வரவேற்றார். ஆண்டு அறிக்கையை முதல்வர் சீனிவாசன் சமர்பித்தார். மாணவர் தலைவர் நிர்தேவ் குமார் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், மதுரை கோட்ட ரெயில்வே மூத்த முதுநிலை பொறியாளருமான வில்லியம் ஜாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    ×