என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Antiquities"

    • 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.
    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்து எடுத்து கூறி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் 3 தலைமுறைகளாக பழமையான பொருட்களை சேகரித்தும் 2000 வகையிலான பறவைகளின் இறகுகள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட அரிதான பொருட்களை சேகரித்து கொடைக்கானலை சேர்ந்த ஜோஸ்வா, அவரது மகன் கேலப் ஆகியோர் அருங்காட்சியகம் போல் வீட்டை மாற்றி உள்ளனர்.

    பலருக்கும் பல வகையான பொழுதுபோக்குகள் உள்ளன. விளையாட்டில் ஆர்வம், புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளிட்ட பலவகையான பொழுதுபோக்குகள் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும் அரிதான பொருட்களை சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    உலகில் பல்வேறு இடங்களில் பல வகையான மனிதர்கள் அரிதான பொருட்களையும், பழமையான பொருட்களையும் சேகரித்து வருவதை பார்க்க முடிகிறது.இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 3 தலைமுறைகளாக அரிதான மற்றும் பழமையான பொருட்களை சேகரித்து வருகின்றனர். தனது தாத்தா காலத்தில் ஆரம்பித்து அவரது மகன் 20 ஆண்டுகளாக பொருட்களை சேகரித்து தற்போது 3-ம் தலைமுறையாக இருக்கக்கூடிய 3 வயது சிறுவன் உட்பட இதனை பொழுதுபோக்காக வைத்துள்ளனர்.

    குறிப்பாக இவர்கள் வீட்டையே அருங்காட்சியகம் போல் பழமையான பொருட்களை வைத்து நிரப்பி உள்ளனர். எளிதாக கிடைக்கக்கூடிய தீப்பெட்டியில் தொடங்கி அரிதாக கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடி வரை இவர்களது சேமிப்பு நீண்டு வருகிறது. பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட இவர்கள் உலகில் பல்வேறு மூலை முடுக்குகளில் கிடைத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.

    இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து கிடைக்கக்கூடிய 2000 வகைகளுக்கும் மேலாக உள்ள பறவைகளின் இறகுகளும் உலகில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகளும் பழங்காலத்தில் கணக்கு எழுதிய ஓலைச்சுவடிகள் உலகில் அழிந்து போன பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பத்திர தாள்கள், பல நூறு வருடங்களுக்கு முந்தைய கேமராக்கள், கடலில் கிடைக்கக்கூடிய அரிதான ஓடுகள் வரை இவர்கள் சேகரித்து வைத்துள்ளனர்.

    தாங்கள் வாழ்ந்து வரும் வீட்டையே அருங்காட்சியகம் போல் புத்தகங்கள், பழைய பொருட்களோடு நிரப்பி வைத்துள்ளனர். அரிதான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வரக்கூடிய இவர்களது இந்த சேகரிப்பு தொடர்ந்து வருகிறது. இந்த சேகரிப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பழமையான பொருட்களின் மகத்துவம் குறித்தும் எடுத்து கூறி வருகின்றனர். ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவியாக உள்ளது. எனவே பழமையான பொருட்களை பாதுகாக்கும் இவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் தொல்பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • இந்த கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் வட்டாரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றம் துவக்க விழா மற்றும் தொல்பொருட்கள் கண்காட்சி பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நயினார்கோயில் வட்டாரக் கல்வி அலுவலர் மு.வாசுகி தலைமையில் நடந்தது.

    மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பாண்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தொன்மை பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்கள் தங்கள் பகுதியில் அழியும் நிலையில் உள்ள தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்து பாதுகாக்க உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப்0 பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பா ளரும் தொல்லியல் ஆய்வாளரு மான ராஜகுரு கலந்து கொண்டு பேசினார். தேர்த்தங்கால் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நாகலெட்சுமி நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியை பார்வை யிட்டு ஆய்வு செய்த ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் அனைத்துப் பள்ளி களிலும் இம்மன்றத்தை தொடர்ந்து செயல் படுத்திடவேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

    பின்னர் நடந்த தொல்பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத் தாதுக்கள், இரும்புக்கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடி மங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. நயினார்கோயில் வட்டார தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசி ரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டனர்.

    • பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.
    • கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.

    9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கீழடியில் 183 தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையின ரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட் கள் இதுவரை கண்டறி யப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படு கிறது.9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    • சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான நிறைய நமக்கு தரவுகள் கிடைத்திருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாட பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

    பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி மற்றும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கழுத்தில் அணியும் நீல நிற கண்ணாடி மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பகண்டை தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் நடந்துவரும் மேற்புற கள ஆய்வில் பழங்கால சுடுமண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    ×