search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "applied"

    • கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன.
    • 3 நாள் சிறப்பு முகாமில் 48 ஆயிரம் பேர் பதிவு

    கோவை,

    தமிழகத்தில் பெண்க ளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வசிக்கும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க ப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

    கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவையில் உள்ள 839 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பத்தை பெற்று கொண்டனர்.

    அவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் பதிவு செய்தனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மீத முள்ள 562 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப் பட்டது. அங்கு 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். மீதம் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பத்தை ஒப்படைக்கவில்லை.

    கோவையில் நடத்தப்பட்ட 2 முகாம்களிலும் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்கவில்லை. அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பமே பெறவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் விடுபட்ட அனைத்து பெண்களும் விண்ணப்பம் பெற்று பதிவு செய்வதற்கு ஏதுவாக, தமிழக அரசு 3 நாள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 18, 19,20-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப் பங்களை பெற்று பதிவு செய்து உள்ளனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 3 நாளில் மட்டும் 48,687 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு கடந்த 18, 19, 20-ந்தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மட்டும் தாலுகாவாரியாக பதிவான விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:

    ஆனைமலை-2808, அன்னூர்-1737, கோவை வடக்கு-13483, கோவை தெற்கு-7273, கிணத்துக்கடவு-1067, மதுக்கரை-5207, மேட்டுப்பாளையம்-4100, பேரூர்-5312, பொள்ளாச்சி-3499, சூலூர்-3732, வால்பாறை-469. கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை பெறுவதற்காக 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.

    இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை-வருகின்ற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சார்பில் 2014- ஆம் ஆண்டு முதல் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தேசிய பயிற்சிக் குழும அங்கீகாரம் பெற்ற இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்டு மாதம் தொடங்க உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக 2 ஆண்டு பயிற்சி பிரிவுகளுக்கு குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சியும் ஓராண்டு பயிற்சி பிரிவிற்கு 8- ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

    இதில் சேர விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து வேலை நாட்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் 04324 - 296442 / 9486505953 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் ஜூன் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காகித நிறுவன அறக்கொடை தெரிவித்து கொள்கிறது.

    • அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில் சிறந்தோருக்கு திருவ ள்ளுவர் திருநாளில் 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வருகிற ஜனவரி திருவள்ளுவர்தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் ஆகியோர்களில், 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு தகுதியான நபர்களி டமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட அளவில் அண்ணல் அம்பேத்கர் விருது பெற தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து, ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    எனவே, 2022-23-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது தொட ர்பாக விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ள சான்று களுடன் வருகிற

    23-ந் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்பவர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    • மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ம் கல்வி–யாண்டில் கடந்த ஜூன் 1-ந் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

    இதற்காக அனைத்து மாவட்டத்திலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்-20, ஆங்கிலம்-1, கணிதம்-4, அறிவியல்-14, சமூக அறிவியல்-8 என 47 காலி பணியிடங்களும், முதுகலை ஆசிரியர் தமிழ்-12, ஆங்கிலம்-7, கணிதம்-10, வேதியியல்-11, வணிகவியல்- 18, பொருளாதாரம்-25, வரலாறு-7, கணினி அறிவியல்-2 என 92 காலி பணியிடங்கள் உள்ளதாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்காலிக பணியிடங்க–ளுக்கு விண்ணப்பிப்ப–வர்கள் நேரடியாகவும் ,ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர்.

    இதேபோல் பெருந்துறை, பவானி கோபிசெட்டி–பாளையம், சத்தியமங்கலம், ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் பட்ட–தாரிகள் விண்ணப்பிக்க குவிந்தனர். குறிப்பாக பெண் பட்டதாரிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்து சென்றனர்.

    சிலர் தபால் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில் உள்ள 139 காலி பணியிடங்களுக்கு மொத்தம் சுமார் 3900 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்ட செய்தி-மக்கள்தொடர் துறையில் 2 வேன் கிளீனர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மொத்தம் 119 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள்தொடர் துறையில் 2 வாகன சீராளர் பணியிடம் காலியாக உள்ளது.

    ஆண், பெண் இருபாலர் என மொத்தம் 119 பேர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் வகுப்புதேர்ச்சி பெற்று எஸ்.சி., (முன்னுரிமையற்றவர்) 18 முதல் 37 வயதும், பி.சி., (முன்னுரிமை பெற்றவர்) 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேர்முகதேர்வு நடந்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், உதவி இயக்குனர் சத்தியசீலன் முன்னிலை வகித்தனர்.

    பி.ஆர்.ஓ., நவீன்பாண்டியன், ஏ.பி.ஆர்.ஓ., வினோத் விண்ணப்பதாரர்களின் கல்விதகுதி, ஆதார் அட்டை, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

    எம்.எஸ்.சி., பி.இ., மெக்கானிக் படித்த டிப்ளமோ, பட்டதாரிகள் பலர் பங்கேற்றனர்.

    ×