search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரூ.1000 உரிமைத்தொகை ெபற 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பம்
    X

    கோவையில் ரூ.1000 உரிமைத்தொகை ெபற 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பம்

    • கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன.
    • 3 நாள் சிறப்பு முகாமில் 48 ஆயிரம் பேர் பதிவு

    கோவை,

    தமிழகத்தில் பெண்க ளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்த திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என பெயரிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வசிக்கும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் விண்ணப்பம் வழங்க ப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.

    கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 11 லட்சத்து 43 ஆயிரத்து 891 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கோவையில் உள்ள 839 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல் கட்ட முகாம் நடத்தப்பட்டது. அப்போது 6 லட்சத்து 33 ஆயிரத்து 525 கார்டுதார்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 480 பேர் விண்ணப்பத்தை பெற்று கொண்டனர்.

    அவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 354 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் பதிவு செய்தனர். ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 126 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மீத முள்ள 562 கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-ம் கட்ட முகாம் நடத்தப் பட்டது. அங்கு 5 லட்சத்து 10 ஆயிரத்து 366 கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் 4 லட்சத்து 22 ஆயிரத்து 300 கார்டு தார்களே விண்ணப்பத்தை பெற்றனர். அவர்களில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 908 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர். மீதம் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 392 பெண்கள் விண்ணப்பத்தை ஒப்படைக்கவில்லை.

    கோவையில் நடத்தப்பட்ட 2 முகாம்களிலும் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 518 பெண்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திரும்ப வழங்கவில்லை. அதே நேரம் முதல்கட்ட முகாமில் 68 ஆயிரத்து 45 கார்டுதாரர்கள், 2-ம் கட்ட முகாமில் 88 ஆயிரத்து 66 கார்டுதாரர்கள் என மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 111 பேர் விண்ணப்பமே பெறவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் விடுபட்ட அனைத்து பெண்களும் விண்ணப்பம் பெற்று பதிவு செய்வதற்கு ஏதுவாக, தமிழக அரசு 3 நாள் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து இருந்தது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 18, 19,20-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப் பங்களை பெற்று பதிவு செய்து உள்ளனர்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் 3 நாளில் மட்டும் 48,687 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இங்கு கடந்த 18, 19, 20-ந்தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் மட்டும் தாலுகாவாரியாக பதிவான விண்ணப்பங்களின் விவரம் வருமாறு:

    ஆனைமலை-2808, அன்னூர்-1737, கோவை வடக்கு-13483, கோவை தெற்கு-7273, கிணத்துக்கடவு-1067, மதுக்கரை-5207, மேட்டுப்பாளையம்-4100, பேரூர்-5312, பொள்ளாச்சி-3499, சூலூர்-3732, வால்பாறை-469. கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் மாதாந்திர உரிமைத்தொகை பெறுவதற்காக 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.

    இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், கோவையில் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுவோரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து உள்ளனர். அத்தகைய விண்ணப்பங்கள் பரிசீலனையின் போது நிராகரிக்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×