என் மலர்
நீங்கள் தேடியது "attempt"
- அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
- தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சபரி (வயது 25). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார்.
மேலும் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வேறு வழியின்றி மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை மீட்டு உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் சபரி மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். உறவினர் வீட்டில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த போலீசார் நேற்று அங்கு சென்று சபரியை கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.
- நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அவர் சொன்ன அடையா ளங்களை வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிய 2 பெண்களிடம் செயின் பறிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே வழிப்பறிக் கொள்ளையர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
- அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை மெயின்ரோட்டில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர் தலைகவசம் அணிந்தபடி ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கிருந்த கற்களை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் பகுதியை திறக்க முயன்றார்.
இதனால் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த நபர் ஏ.டி.எம்.எந்திரத்தில் கற்களால் உடைக்க முயன்றார். அப்போது திடீரென அதிக சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாலிபர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியேறி மோட்டார் சைக்களில் தப்பினார்.
அலாரம் அடித்தது குறித்து உடனே சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட முயன்ற நபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
- கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.
அதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வெளியூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது.
இந்த 2 வீடுகளிலும் பணமோ, மதிப்புமிக்க பொருட்களோ கொள்ளை போகாததால் சம்மந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. எனினும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி எழுந்து கூச்சலிட்டார். இதையடுத்து அவரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவங்கள் பரமத்தியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமத்தி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
- டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
- காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.
இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
- 4 பேரும் இளம்பெண் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர்.
கோவை,
கோவை அருகே உள்ள சிறுமுகையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், கொண்டையாம் பாளையத்தை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயம் செய்யப்பட்டது.
சம்பவத்தன்று தனது வருங்கால மனைவிக்கு பிறந்த நாள் என்பதால் ஜார்ஜ் அவரை சரவணம் பட்டியில் உள்ள துணிக்கடைக்கு அழைத்து சென்று ஆடை வாங்கி கொடுத்தார்.
பின்னர் அவர் சுவாதியை அவரது வீட்டில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மோட்டார் சைக்கிள் கீரநத்தம்- அத்திப்பாளையம் ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தென்னை மட்டையால் ஜார்ஜை தாக்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் சுவாதி கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறிக்க முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 4 பேரையும் பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து ஓடி விட்டனர்.
இது குறித்து ஜார்ஜ் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி அவரது வருங்கால மனைவியிடம் செயின் பறிக்க முயன்ற 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.
- அரியலூர் அருகே பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்று உள்ளது
- தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பிறந்து 41 நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி மேல தெருவை சேர்ந்தவர்கள் பெரியசாமி ரதியா (வயது 23) தம்பதி இவர்களது குழந்தை ரித்திகா. பிறந்து 41 நாட்களே ஆகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரதியா அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த பார்த்த போது ரித்திகா வாயிலிருந்து நுரை வந்த வண்ணம் இருந்தது. குழந்தை அருகே விஷ பாட்டில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட ரதியா மற்றும் அவரது உறவினர்கள் ரித்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ெஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் குழந்தை ரித்திகாவை மேல் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ரதியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புதுக்கோட்டை அருகே பணித்தள பொறுப்பாளர் தற்கொலை முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- தேசிய ஊரக பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் காரையூர் அருகே உள்ள முள்ளிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட (100 நாள் வேலை) பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வி என்பவர் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டையை வாங்க வந்தார்.
இதைப்பார்த்த பெண் ஒருவர் ஊராட்சி தலைவரை செல்போனில் தொடர்பு கொண்டு கலைச்செல்வி பணித்தள பொறுப்பாளராக இருக்கக்கூடாது. இது தொடர்பாக ஏற்கனவே பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதனை கேட்டு மனமுடைந்த கலைச்செல்வி மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர், செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), மேற்பார்வையாளர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்ட பணியாளர்கள் காரையூர் போலீசில் புகார் அளித்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
- சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார்.
- கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அங்கு விரைந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.
இந்த நிலையில் இன்று வேலைக்கு தாமதமாக வந்ததால் பேரூராட்சி ஊழி யர்கள் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரி டம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
- வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.
இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு
பெரம்பலூர்
திருமானூர் அருகே குருவாடி கிராமத்திற்கும், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்திற்கும் இடையே செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் நில அளவிடும் பணிைய அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். இதற்கு குருவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
கிராம மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளான சுயராஜன் (வயது 52), மகேந்திரன் (41) ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 63 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- முகமூடி அணிந்த மர்ம நபர் கண்காணிப்பு காமிராவை அடித்து உடைத்து துணிகரம்
- கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு முக மூடி அணிந்த மர்ம நபர் வந்தார்.அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை இரும்பு கம்பியால் அடித்து உடைத்தார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றார். அப்போது ஆள் நடமாட்டம் இருந்ததால் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழ்க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.