என் மலர்
நீங்கள் தேடியது "Baby Dead"
- பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
- போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தது.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதைதொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார்.
மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் பெண்ணின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த குழந்தையின் சடலத்துடன் 12 மணி நேரத்திற்கும் மேலாக பொது வெளியில் போராடி வருவதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஃப்ரீஸர் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
- ஒரு வயது பெண் குழந்தை வயிற்று வலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காந்தி சாலை பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி மகன் விக்னேஷ் (வயது 22). இவருக்கு ஒரு வயதில் ஹதீஜா என்ற ஒரு மகள் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கதிஜா வயிற்று வலியால் அழுது கொண்டிருந்தார். பின்னர் அவரை விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹதீஜா மூச்சு விட சிரமப்பட்டதால் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹதீஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து விக்னேஷ் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வயது பெண் குழந்தை வயிற்று வலியால் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 2 மாதத்துக்கு முன்பு எட்டு மாதத்திலேயே குறை பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
- மூச்சு திணறல் காரணமாக குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கொளத்தூர்:
பெரம்பூர், தில்லை நாயகம் தெருவை சேர்ந்தவர் அக்பர் ஷெரிப். மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அக்பர் ஷெரிப்பின் மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவருக்கு எட்டு மாதத்திலேயே குறை பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே நேற்று இரவு குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
சிவகிரி:
சிவகிரியை அருகே உள்ள தாண்டாம்பாளையம் மெயின்ரோட்டை சேர்ந்தவர்கள் சுகுமார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தையும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண் குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. மர்ம காய்ச்சலால் அந்த குழந்தை இறந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து தாண்டாம்பாளையத்தின் உள்ள அந்த குழந்தையின் வீடு அமைந்துள்ள 13-வது வார்டு முழுவதும் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை நடத்தி தடுப்பு மருந்துகளை சுகாதாரத்துறையினர் வழங்கினர்.
தாண்டாம்பாளையத்தில் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும், மூச்சின்றியும் இருந்தது.
- சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை கொளத்துப்பாளையம் சாலை சென்னியாண்டவர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி ஸ்ரீதரின் மனைவிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 900 கிராம் எடையுடன் பிறந்ததால், தொடர்ந்து 22 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 24-ம் தேதி குழந்தையை மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஸ்ரீதர் வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி ஸ்ரீதரின் மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்தார்.
மறுநாளான நேற்று காலை குழந்தையை பார்த்தபோது எவ்வித அசைவும், மூச்சின்றியும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் அவரது மனைவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக இஷாந்த் தவறி விழுந்தான்.
- படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவை சேர்ந்தவர் சிவன்மாரி. இவர் ஏழை மாணவர்களும் ராணுவத்தில் சேருவதற்காக கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் இலவச ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
கடந்த 3-ந்தேதி சிவன்மாரி மனைவி கலா, மகன்கள் முகேஷ் (8) மற்றும் இஷாந்த் (5) ஆகியோர் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றிருந்தனர்.
அப்போது அங்கு தனியாக விளையாடிக் கொண்டிருந்த இஷாந்த் அங்குள்ள மாணவர்களுக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதில் படுகாயமடைந்த இஷாந்தை மீட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த இஷாந்த் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தை சனா ஜாஸ்மின் தனியாக பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
- சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது சனா ஜாஸ்மின் மாயமாகி இருந்தாள்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் 6-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி. இவரது மனைவி ஜெஸ்லிமா. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை சனா ஜாஸ்மின் உள்ளது.
நேற்று மாலை ஜெஸ்லிமா சமையல் அறையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். குழந்தை சனா ஜாஸ்மின் தனியாக பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது சனா ஜாஸ்மின் மாயமாகி இருந்தாள்.
வீட்டின் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் நிரம்பி இருந்த வாளியில் குழந்தை தலை கீழாக விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை சனா ஜாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.
- முத்தமிழியின் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே வீழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி முத்தமிழ் (26). இவர்களுக்கு ஜோசன் என்ற மகனும், லூவி டெரினா என்ற 7 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி குணா தனது மனைவி முத்தமிழ் மகன் ஜோசன், 7 மாத கைக்குழந்தை லூவி டெரினாவுடன் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வை எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கே.ஜி. கண்டிகை மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார்.
பின்னர் தேர்வு எழுதி முடித்துவிட்டு மீண்டும் அவர்கள் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பேரம்பாக்கம் புத்துக்கோவில் சாலை வளைவில் மோட்டார் சைக்கிளில் திரும்பும் போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.
இதில் முத்தமிழியின் மடியில் இருந்த 7 மாத குழந்தை லூவி டெரினா தவறி கீழே வீழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக பேரம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை லூவி டெரினா பரிதாபமாக இறந்து போனது.
இதுகுறித்து முத்தமிழ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.