என் மலர்
நீங்கள் தேடியது "Bali"
- நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார்.
- இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் கார் மோதி முதியவர் பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 60).
இவர் இன்று காலை நாமக்கல் புதன் சந்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி தலையில் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கசாமி உயிரிழந்தார்.
இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த ரங்கசாமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்துள்ளனர்.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
- அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 66). விவசாயியான இவர், இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக அய்யண்ணன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணியனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து ஆதிதிராவிடர் தெரு காங்கிரீட் ரோட்டில் செல்வதற்காக காரை எடுத்தபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 75). இவர் 100 நாள் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் மணியனூர் அங்காளம்மன் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் அஸ்தம்பட்டி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், சின்னம்மாள் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் மணியனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து ஆதிதிராவிடர் தெரு காங்கிரீட் ரோட்டில் செல்வதற்காக காரை எடுத்தபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே பிரேம்குமார் உடனே காரை நிறுத்தினார். கார் மோதியதில் சின்னம்மாள் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்து ஏற்படுத்திய பிரேம்குமாரை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி பஸ் மோதியதில்1 மாணவர் பலியானார்.
- 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலூர்
மதுரை சிக்கந்தர் சாவடி யை சேர்ந்தவர் பிரவீன், கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது பயஸ், ஆனைக்குளத்தை சேர்ந்தவர் சரவணன். நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மதுரை அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். 3 பேரும் இன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றதாக தெரிகிறது.
அழகர்கோவில் அருகே சென்ற போது அவர்கள் படிக்கும் கல்லூரி பஸ்சும் முன்னால் சென்று கொண்டிருந்தது. அதனை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே ஒரு ஆட்டோ வந்தது. அதில் மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினர்.
அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரவீன், முகமது பயஸ், சரவணன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு ஏட்டு மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல் பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது 27). இவர் விசைத்தறி மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் இன்று காலை சிவதாபுரம் அருகே உள்ள பனங்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த டிப்பர் லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.
- வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே முட்டாஞ்செட்டி அருந்த தியர் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 60). இவர் நாமக்கல்லில் பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் தனது மகள் சண்முக வள்ளியின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அவரது வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
வேலைக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி- நாமக்கல் மெயின் ரோட்டில் வளையபட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது மோகனூரில் இருந்து வளையபட்டி நோக்கி அதி வேகமாக வந்த லாரி நடேசன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
லாரியை ஒட்டி வந்த டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நடேசன் மகன் செந்தில்குமார் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
- எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ பெருமாள் ( வயது 32). ப்ளக்ஸ் டிசைனிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கரிய பெருமாள் கரடு நுழைவு ரோடு அருகே, எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே மானத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்த மூதாட்டி தீயில் கருகி பலியானார்.
- பலத்த காயம் ஏற்பட்ட நல்லம்மாளை அவரது உறவினர்கள் அங்கிருந்து எளையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே மானத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 85 ). கூலி தொழிலாளி. இவர் கூப்பிட்டாம் பாளையம் பகுதியில் உள்ள தனது அண்ணன் மகன் வீட்டில் வசித்து வந்தார் .
இந்நிலையில் கடந்த கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்ததில் அவரது இடுப்பு மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் ஏற்பட்ட நல்லம்மாளை அவரது உறவினர்கள் அங்கிருந்து எளையாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிரவாதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து நல்ல மாளின் மகள் பெருமாயி ( 51) வேல கவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
- நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி வேலைக்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி பெட்ரோல் பங்க் எதிரே, திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ராமசாமி மீது மோதியது.
இதில் ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய திருமலைப்பட்டியைச் சேர்ந்த சங்கித்ராம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மின்வாரிய ஊழியர் தவறி விழுந்து பலியானார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் வேங்கட சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜா. மின்வாரிய ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். தற்போது டி. கல்லுப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றினார்.
இரவு பணி என்பதால் டி.கல்லுப்பட்டி செல்வதற்காக திருமங்கலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லுப்பட்டிக்கு சென்றுள்ளார். பஸ்சில் இடமில்லாததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.
அந்த பஸ் திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் உள்ள டி.புதுப்பட்டியை அடுத்த தனியார் மருத்து வமனை அருகில் உள்ள வளைவில் திரும்பும் போது படிக்கட்டில் அமர்ந்திருந்த ராஜா எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
உடனடியாக பஸ்சை டிரைவர் நிறுத்தி பார்த்த போது ராஜா தலையில் அடிபட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
- மூதாட்டியை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த மூதாட்டி 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் எதிரில் உள்ள தனியார் வங்கி முன்பு சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.