என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "banana trees"
- சூறை காற்றுடன் கனமழை பெய்தது
- விவசாயிகள் வேதனை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் அடுத்த ஆலங்காயம் சுற்று வட்டார கிராம பகுதிகளான நிம்மியம்பட்டு, சுண்ணம்புபள்ளம், வெள்ளகுட்டை, துரிஞ்சிகுப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
இதனால் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.
விவசாயிகள் சாய்ந்து விழுந்த வாழை மரங்களில் இருந்து வாழை குலைகளை வெட்டி எடுத்து மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்தனர். கடன் பெற்று வாழை பயிரிட்டு தற்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதமானதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
- பேராசிரியர் கற்பகம் வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.
- வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளை மாநில அளவிலான கல்வி கண்டுநர் சுற்றுலா தோட்டக்கலை உதவி இயக்குநர் செல்வபிரபு தலைமையில் வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இக்கண்டுநர் சுற்றுலாவில் முதலாவதாக தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விரிவாக்க பேராசிரியர் கற்பகம் ஆராய்ச்சி மையத்தின் நோக்கம், செயல்பாடுகள், வாழை சாகுபடியிலுள்ள நவீன தொழில்நுட்பங்கள், வாழை மூலம் தயாரிக்கப்படும் மதிப்பூட்டிய பொருட்கள் சந்தைபடுத்துதல் பற்றி விரிவாக கூறினார்.
அடுத்தபடியாக வாழை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டுதல் பற்றி சிவா கூறுகையில், வாழை பழத்தின் நன்மைகள் வாழை இலையின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாழை சாகுபடிக்கான காணொலி காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதனைக் கண்டு விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
முடிவில் வாழை செயலாக்க மையத்தில் விவசாயிகளுக்கு வாழை பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட பொருளான பனானா சாக்லேட் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதற்கான செய்முறை விளக்கத்தை ரவிச்சாமி விவசாயிகளுக்கு எடுத்து ரைத்தார்.
சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகள் வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் பற்றி விரிவாக தெரிந்து கொண்டதாக கூறி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களுக்கு நன்றி கூறினர். இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அட்மா அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
- தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது
- வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குடிமங்கலம் :
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடி படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாமை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ள நிலையில் தற்போது சொட்டு நீர் பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வாழை சாகுபடியை பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரை ஓராண்டு காலத்தில் பருவ மழை, காற்று, கோடை என எல்லா பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பருவ மழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அது போன்ற சூழலிலும் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது வாழை மரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு காய்கறி உள்ளிட்ட மாற்றுப்பயிர்களுக்கு மாறிவிட்டனர்.
தற்போது நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் வாழை சாகுபடியில் ஈடுபடும் போது இழப்பை தவிர்க்க முடியும். அந்த வகையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அதுபோல காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க புதிய யுத்திகளை பயன்படுத்துகிறோம். அதன்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஊன்று கோல்கள் கொடுத்து பாதுகாப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊன்றுகோல்கள் அமைத்து மற்ற வாழைகள் எல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் மூலம் எதிரெதிரான திசைகளில் ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டி விடுகிறோம். இவ்வாறு கட்டுவதால் எந்தத்திசையிலிருந்து காற்று பலமாக வீசினாலும் வாழைகளுக்கு ஏதும் ஏற்படுவதில்லை. செலவும் குறைகிறது. இதன் காரணமாக வாழை சாகுபடி லாபகரமானதாக உள்ளது.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- இயற்கை பாதிப்புகளின் போது வாழைக்கு ஏற்படும் சேதத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளின் போது வாழைக்கு ஏற்படும் சேதத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரம் திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் மழைக்கு பல இடங்களில் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:- இயற்கை சீற்றத்தின் போது சேதம் ஏற்படும் வாழைக்கு காப்பீடு வழங்க ப்படும் என தோட்டக்கலை த்துறையினர் நம்பிக்கைய ளிக்கின்றனர். அதனை நம்பியே காப்பீடு திட்டத்தில் இணைகிறோம்.வருவாய் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் கள ஆய்வு செய்த பிறகே, சேத அறிக்கையை காப்பீடு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.திடீர் மழை, சூறைக்காற்றுக்கு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பல்வேறு காரணங்களை கூறி காப்பீடு மறுக்கப்ப டுகிறது. சமீபத்தில் மழை, சூறவாளிக்கு 75 ஆயிரம் வாழை மரங்கள் வரை சாய்ந்திருக்கும்.அவற்றுக்கு காப்பீடு, இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சென்னிமலை டவுன் மற்றும் கிராமங்களில் இரவில் திடீரென மழை பெய்தது
- ஆயிரக்க ணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது. வெட்டக்கூடிய நிலையில் இருந்த சிலரக வாழைத்தா ர்கள் இதில் அதிகளவில் சேதமானது
சென்னிமலை,
சென்னிமலை சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் பகலில் கடுமையான வெயில் அடித்தது. சென்னிமலை டவுன் மற்றும் கிராமங்களில் இரவில் திடீரென மழை பெய்தது.
சிறிது நேரத்தில் சூறாவளிக்காற்றும் சேர்ந்து அடித்தது. சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கிராமங்களில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கிராமப் புறத்தில் வீசிய சூறாவளிக் காற்றில் சிலரது தோட்டங்களில் பல ஏக்கரில் இருந்த ஆயிரக்க ணக்கான வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது. வெட்டக்கூடிய நிலையில் இருந்த சிலரக வாழைத்தா ர்கள் இதில் அதிகளவில் சேதமானது.
இதனால் பல லட்சக்க ணக்கான ரூபாய் மதிப்புள்ள வாழைத் தார்கள் சேதமானதால் அரசு நஷ்ட ஈடு தரவே ண்டும் என பாதி க்கப்பட்ட விவசா யிகள் கோரிக்கை வைத்து ள்ளனர். மேலும், சில கிராமங்களில் சூறாவளி க்காற்றில் மற்ற சில மரங்க ளும் வேரோடு சாய்ந்து சேதமானது.
- கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்தது.
- விவசாயிகள் கடன் பெற்றுத்தான் வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள்.
நெல்லை:
தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் உள்ள கருநீலங்குளம், மஞ்சுவிளை, பத்மநேரி, மேலபத்தை, கீழபத்தை, பெருமாள்குளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றுத் தான் இந்த வாழை விவசாயத்தை மேற் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வாழை மரங்கள் தற்போது சேதம் அடைந்திருப்பதால், அவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
அதனால், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயிகள் அதிகம் வாழை பயிரிடுகின்றனர்.
- அரசு பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு இருந்தும், எதிர்பார்க்கும் நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை.
குடிமங்கலம் :
வாழை மரங்கள் சூறா வளிக்கு சேதமாவதை தடுக்க இலவசமாக காற்று த்தடுப்பான் சவுக்கு வளர்க்கலாம் என வனத்து க்குள் திருப்பூர் திட்டக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட ங்களில் விவசாயி கள் அதிகம் வாழை பயிரிடு கின்றனர். வாழைக்கு அரசு பயிர்க்காப்பீடு திட்டத்தில் காப்பீடு இருந்தும், எதிர்பா ர்க்கும் நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில்லை. வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை நிவார ணமும், விவசாயிகளுக்கு விரைவாக கிடைப்பதில்லை. வாழை த்தார் அறுவடை செய்யும் நேரத்தில் அடி யோடு வாழை மரம் முறிந்து விழுவதால் ஓராண்டு உழைப்பு வீணாகி விடுகிறது. வாழை விவசாயிகளின் கவலையை போக்கும் வகையில் மத்திய அரசின் வன மரபியல் ஆராய்ச்சி மற்றும் மரப்பெருக்கு நிறு வனம், காற்றுத்தடு ப்பான் சவுக்கு மரக்கன்றை உரு வாக்கியது. மரம் வளர்ப்பில் ஈடுபடும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு இலவ சமாக காற்றுத்தடுப்பான் மரக்கன்றுகளை நட்டு கொடுக்கிறது.இது குறித்து வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் கூறுகையில்,
வாழை மரங்கள் சூறா வளிக்கு முறிந்து சேதமாவது வருத்தம் அளிக்கிறது. விவ சாயிகள் பாதிக்கப்படு வதை தவிர்க்க உயிர்வேலி யாக காற்றுத்தடுப்பான் சவுக்கு மரம் வளர்க்கலாம். விவசாயிகளுக்கு இலவச மாக நாற்றுகளை வேலியாக நட்டு கொடுக்கி றோம். வேளாண் பயிர்களை பாது காக்க சவுக்குவேலி அமைக்க லாம். மேலும் விவரங்களுக்கு 9047086666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
- அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- கருங்காடு பகுதியில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 18 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அதேபோல் கன்னடியன் கால்வாய் பகுதி, வீரவநல்லூர், பத்தமடை, கூனியூர், சுத்தமல்லி, கொண்டா நகரம் உள்ளிட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.
பேட்டை அருகே உள்ள கருங்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக அங்கி ருந்த ஆயிரக் கணக்கான வாழைகள் சேதமடைந்தது.
இதே போல் தென்காசி மாவட்டத்தில் ஆய்க்குடி, அடவிநயினார் அணைப்பகுதி கள் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.
எனினும் அணைகளுக்கு தண்ணீர்வரத்து இல்லை. அந்த வகையில் 143 அடி உயரம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம் 20 அடியாகவும், 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 42.09 அடியாகவும், 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 78.55 அடியாகவும் உள்ளது.
- களக்காடு தலையணை மலையடிவாரத்தில்காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
- 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி கவலையுடன் தெரிவித்தார்.
களக்காடு:
களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் சாகுபடி செய்து வருகின்றனர். சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
கடந்த 1 வாரமாக வனப்பகுதியில் இருந்து வெளி வந்த காட்டு பன்றிகள் கூட்டம் களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் (58) என்பவருக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
மேலும் வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்றன. இதனால் 1 வாரத்திற்குள் 300-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானதாக விவசாயி ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.
இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி களக்காடு வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், அதிகரித்து வரும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை அடுத்துள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னு (வயது55). இவருக்கு சொந்தமாக விவசாயி நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.
இன்று காலை சின்னு தனது விவசாய நிலத்திற்கு சென்று பார்த்தார். அப்போது பயிரிட்டுள்ள வாழைமரங்களை 2 காட்டு யானைகள் சேதப்படுத்தி கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே யானையை விரட்ட சின்னு முயன்றார். ஆனால் யானை காட்டுக்குள் செல்ல மறுத்துவிட்டது.
இது குறித்து சின்னு வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சுமார் 1 அரை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழைமரங்கள் காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்தார்.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது.
இந்த நிலையில் கோடை காலமும் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவின்போதும் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் காலையிலேயே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப் போட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரியின் மேற்கு மாவட்டத்தில் தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பெய்ததால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்தனர்.
தற்போது கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத் தில் அதிக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட் களாக நீடிக்கும் இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நேற்று குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் அங்கு சென்று நீராடி மகிழ்கிறார்கள்.
அதே போல பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதேசமயம் நாகர்கோவில் நகரில் மழை பெய்யவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு இடி இடித்தது. ஆனால் குளிர்ந்த காற்று மட்டுமே வீசி சற்று ஆறுதல் அளித்தது.
திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை குலை தள்ளிய நிலையில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.2, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-6, அடையா மடை-4, கோழிப் போர்விளை-10, புத்தன் அணை-10.4, திற்பரப்பு-10.8.
மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 2.10 அடியாக இருந்தது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 62 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணையில் 20.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்