search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basic Facility"

    • சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது
    • கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 23 -வது வார்டில் தேனருவி நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உசிலம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    • தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக் குட்பட்ட கருக்கட்டான்பட்டி ரோடு 13-வது வார்டு சின்னச்சாமி தெரு, ஜே.பி.ஆர். மகால் தெரு, வ.உ.சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் கடந்த 2005முதல் தற்போது வரை சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்த பகுதியில் சாலை மற்றும் குடிநீர், கழிவு நீர், சாக்கடை, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பலமுறை நகராட்சி நிர்வா கத்திடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பின்னர் சாலை, கழிவு நீர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கை விடப்பட்டது.

    • அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகளின்றி செயல்படுகின்றன.
    • முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்குட் பட்ட விளாங்குடி 20-வது வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கழிப்பறை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. சுவற்றில் விரிசல் ஏற்பட்டு கீழே விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பின்றி தரை பெயர்ந்து காணப்படு கிறது. போதுமான தண்ணீர் வசதி இல்லாததால் கழிப்பறை பராமரிக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கழிப்ப றையை பயன்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    மேலும் பள்ளி வளாகம் அருகே கால்நடைகள் கட்டுப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் அகற்றாமல் கேட் அருகிலேயே கிடக்கின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படா மல் உள்ளதாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டி, கழிப்பறைகள், பள்ளி வளாகத்தை சீரமைத்து தர வேண்டும் என்றும், முறையாக பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
    • மேயரிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத் தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    கூட்டத்தில் 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் தனது வார்டுக்கு உட்பட்ட கோட்டை அரசு ஆரம்ப பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ- மாணவிகள் அவதிப்படு கின்றனர். எனவே குடிநீர் வசதியை நிறைவேற்ற வேண்டும். ஓம் சக்தி நகரில் கட்டப்பட்டு உள்ள பொதுக் கழிவறையை பயன்பாட்டு க்கு கொண்டு வர வேண்டு மென வலியு றுத்தி கோ ரிக்கை மனு அளித்தனர்.

    94-வது வார்டு கவுன்சிலர் ஸ்வேதா சத்யன் திருநகர் பகுதியில் சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மேலும் வார்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு போதுமான கவச உடைகள், கையுறைகள் இல்லை. எனவே அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    93-வது வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கவுன்சிலர் ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்க ளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்களும் மனு அளித்தனர்.

    மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • அரியலூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.

    அரியலூர்,

    அரியலூர் நகராட்சியின் பஸ் நிலைய கட்டிடம் மிகவும் சிதிலமடைந்ததால் அதனை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரியலூர் புறவழிச்சாலையில் தற்போது தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.இங்கு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், பஸ்கள் உரிய நேரத்தில், போதிய எண்ணிக்கைகளில் இயக்கப்படுவது குறித்தும், டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவர்களிடம் கேட்டு அறிந்தார்.பின்னர் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்தி தருமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பார்வையிட்டு கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளுக்கு கட்டப்பட்டுள்ள தற்காலிக கட்டிடங்களை விரைவாக அகற்றிடவும், கல்லூரிகளில் உள்ள முட்புதர்களை சுத்தம் செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதற்கான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். பின்னர், அரியலூர் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கூட்டுறவு மருந்தகத்தினை பார்வையிட்டு விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி, வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    • வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திர கூட்டம் அலுவலக மன்ற கூடத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர்கள் ஆராஞ்சி ஏ.எஸ் ஆறுமுகம், சாந்தி கண்ணன், துணை தலைவர் வாசுகி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில், ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், ஒன்றிய வளர்ச்சிக்கான பணிகள் குறித்தும் விவாதங்கள் நடந்தது.

    ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சங்கர், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, குப்புசாமி, அனுராதாசுகுமார், பாரதி, மணிமேகலை சேகர், புஷ்பா சதாசிவம், மகேஸ்வரி சங்கர் உள்ளிட்டவர்கள் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் சுகாதாரத்தை சீர் கெடாமல் பாதுகாக்கும் நோக்கில், ஒன்றியத்திற்கு தேவை அடிப்படை வசதிகளை உடனடியாக விரைந்து செயல்படுத்திடவேண்டும் என விவாதித்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் (கி. ஊ) காந்திமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பரிமளா, கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

    • முடுவார்பட்டி ஊராட்சியில் மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2010-11-ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முடுவார்பட்டி ஊராட்சியில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதன் பிறகு பராமரிப்பின்றி மயானத்தில் செடிகள் அடர்ந்து வளர்நது காடு போல காட்சியளிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மயானத்திற்கு உடலை அடக்கம் செய்வதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மயானத்தில் நடப்பதற்கு கூட வழியில்லாமல் புதர் போல காட்சி அளிப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடுவார்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

    மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    • காளையார் கோவில் யூனியன் விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
    • மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட விட்டனேரி ஊராட்சியில் அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் கோரிக்கை விடுத்தார்.

    அவர் கூறுகையில், இந்த ஊராட்சி நிதி பற்றாக்குறையில் இயங்குவதால் மக்கள் பணிகள் உடனே செய்து முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் அடிப்படை தேவைகளே நிறைவேற்றப்படாத எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும்.

    ஊராட்சிக்கு தேவை யான அடிப்படை வசதி களை செய்வதற்கு கடந்த 1 வருடமாக அரசு நிதி ஒதுக்காததால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் முடங்கி உள்ளது.ஊராட்சி களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 14-வது நிதிக்குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத்தை அரசு வழங்குகிறது. இதை கொண்டு பணியாளர் சம்பளம், குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் கழிவறை பராமரிப்பு உள்பட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது.

    மழைக்கு முன்பு கிராமத்தில் வாறுகால் வசதி ஏற்படுத்த, சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த, குடிநீர், சுகாதார பணிகள் உள்பட அடிப்படை வசதிகளை ஊராட்சியில் ெசய்ய அரசு ஒதுக்கீடு வேண்டி பல முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    அடிப்படை வசதி செய்வதற்கு நிதி ஒதுக்காததால் சிரமமாக உள்ளது. எனவே நிதி ஒதுக்க வேண்டும்.விட்டனேரி ஊராட்சியில் சாலை மற்றும் திட்டப்பணிகள் கேட்டு கொடுக்கப்படுகின்ற மனுக்கள் நிதி இல்லை என்று திரும்பி வந்துவிடுகிறது. எந்த கட்சியும் சாராத சமூக ஆர்வலரான செயல்படும் நான் மக்களை எப்படி எதிர் கொள்வது என்ற சூழலும் நிலவுகிறது.

    எனவே எங்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

    • குடிசை மாற்று வாரியம் சார்பாக 30 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு குடி அமர்த்தி வைத்தனர்.
    • அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் காசிபாளையம் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக முதலிபாளையம் பிரிவு வஞ்சியம்மன் நகர் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு குடி அமர்த்தி வைத்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அங்கு குடிநீர், மின்சாரம், சாக்கடை கால்வாய் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் நேற்று திருப்பூர் நல்லூர் 3 மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-

    திருப்பூர் காசிபாளையம் ஆற்றங்கரையோரம் இருந்த 30 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக முதலிபாளையம் பிரிவு வஞ்சியம்மன் நகர் பகுதியில் குடியிருப்பதற்காக இடம் கொடுத்தனர். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் தற்போது வரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் படிக்க முடிவதில்லை இரவு நேரங்களில் பாம்பு தொல்லை அதிகரித்துள்ளது. பள்ளி மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக 3 கிலோமீட்டர் சென்று வர வேண்டி உள்ளது. குடிநீர் வசதி இதுவரை செய்து தரவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பிரச்சினையை பலமுறை தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்டல அதிகாரியிடமும், மண்டல தலைவரிடமும் தெரிவித்தும் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஊர் மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலிலும், பெரும் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என்றனர்.

    • 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல குழு கூட்டம் நல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வாசுகுமார் முன்னிலை வகித்தார். 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 10 கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 44- வது வார்டு மாமன்ற உறுப்பினரும் , மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன் பேசியதாவது :- 44-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் அங்கு போதிய குடிநீர் வசதி இல்லை. எனவே 44-வது வார்டில் கூடுதல் கவனம் செலுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.அதேபோல் துப்புரவு பணிகள், சாலை பணிகள் , தெருவிளக்கு பழுது நீக்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும். மேலும் காய்ச்சல் பரவல் அதிக அளவில் உள்ளது.

    சுகாதார பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உரிய வகையில் மேற்கொள்ள வேண்டும். வார்டு பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு எதுவும் இதுவரை வரவில்லை என பேசினார். இதேபோல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி பேசினர்.

    • அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

    நெல்லை:

    மானூர் யூனியனுக்கு உட்பட்ட பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்களது பஞ்சாயத்துக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை தேவைகளான குப்பை அகற்றம், குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்குகள் சரிபார்த்தல், சுகாதார பொருட்கள் வாங்கியது, மோட்டார் பழுதுபார்த்தல் போன்ற செலவீன பட்டியல்களுக்கு ஊராட்சியில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த செலவு தொகைகளை கொடுப்பதற்கு ஊராட்சி ரொக்க புத்தகத்தில் எழுதப்பட்டும் பஞ்சயாத்தின் துணைத்தலைவர் அதில் கையொப்பமிட மறுக்கிறார்.

    இதனால் எங்களது ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. எனவேமாவட்ட கலெக்டர் விஷ்ணு இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    ×