என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Beans"
- கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
- 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு கன்னங்குறிச்சி, ஓமலூர், மல்லூர், மேட்டூர், பனமரத்துப்பட்டி, வீராணம், வாழப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகள் கொண்டு வந்து விற்கின்றனர்.
மேலும் ஆந்திரா, பெங்களூரு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ. 50- க்கும் சின்ன வெங்காயம் 50 ரூபாயக்கும் விற்பனையானது. தற்போது உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் உழவர் சந்தைகள் மற்றும் திருமணிமுத்தாறு ஆற்றோரம், வ.உ.சி, பால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்துள்ளது.
தக்காளி கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு விற்கிறது. கேரட் கிலோ ரூ.40, பீன்ஸ் ரூ.100, அவரை ரூ.50, உருளை ரூ.56, பாகற்காய் ரூ.35, கத்தரி ரூ. 24, வெண்டைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.50 முதல் ரூ.80 வரை, சுரக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.20, மாங்காய் கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழகம் முழுவதும் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து போய்விட்டது.
- தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் பொய்த்துப் போன தென்மேற்கு பருவமழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைந்து போய்விட்டது.
தக்காளி
குறிப்பாக தமிழகத்தில் தக்காளி விளைச்சல் இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை நெல்லையில் இதுவரை இல்லாத அளவில் ரூ.200 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் நேற்று வட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சற்று அதிகமாக காணப்பட்டதால் விலை குறைந்தது. நேற்று ரூ.150-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
ரூ.140-க்கு..
இந்நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.140-க்கு விற்பனையானது.
பாளை மார்க்கெட்டில் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியை வியாபாரிகள் வாங்கிச் சென்று தெருக்களில் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்தனர்.
அதே நேரத்தில் உழவர் சந்தைகளிலும் ரூ.138-க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி விலை கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
ஒரு கிலோ இஞ்சி ரூ.280 முதல் ரூ.300 வரை இன்று விற்பனையாகிறது. மிளகாய் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 முதல் தரத்துக்கு ஏற்ப ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பீன்ஸ் விலை அதிகமாகவே உள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.130-க்கு இன்று விற்பனையானது. கேரட் மற்றும் அவரைக்காய் தலா ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது.
- பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சாவூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி, மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது. இன்று தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை தான் உயர்ந்து காணப்பட்டது என்றால் தற்போது அந்த வரிசையில் பீன்ஸ், பச்சை மிளகாய் ,இஞ்சி ஆகியவையம் சேர்ந்துள்ளது. இதனால் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்குவதே பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதில் இஞ்சி முன் எப்போதும் இல்லாத அளவில் வரலாறு காணாத அளவுக்கு விலை ஏறி உள்ளது. இன்று கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சை மிளகாய் கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்பட்டன. இதே போல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.30, கத்தரிக்காய் ரூ.60 முதல், கேரட் ரூ.70, சவ்சவ் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் மளிகைப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் ,பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். காய்கறிகளின் விலை குறைந்து எப்போது நாம் நிம்மதியாக நிறைவாக சமையல் செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் இல்லத்தரசிகள் உள்ளனர்.
காய்கறிகளின் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது:-
பருவம் தவறி பெய்த மழை மற்றும் கடுமையான வெப்பத்தின் காரணமாக தக்காளி, சின்ன வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது . இதேபோல் இஞ்சி, பச்சைமிளகாய் விளைச்சலும் வழக்கத்தை விட மிகக் குறைவாக இருந்தன. இதனால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைவாகவே காணப்பட்டு வருகிறது.
இப்படி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இன்னும் இரண்டு வாரத்திற்கு இந்த நிலைதான் நீடிக்கும். அதன் பிறகு வரத்து அதிகமான உடன் காய்கறி விலை குறைய தொடங்கும் என்றனர்.
- தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.
- இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனக மூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள ரிக்காய், புடலங்காய், தடி யங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தக்காளியும், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்காக வருகிறது.
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் காய்கறிகளின் உற்பத்தி அடியோடு பாதிக் கப்பட்டது. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரக்கூ டிய காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. இதனால் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி, மிளகாய், பீன்ஸ், கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தக்காளி வரத்தை பொறுத்தமட்டில் வழக்கமாக வரக்கூடிய அளவைவிட மிகக்குறைவான அளவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு வருகிறது. இதனால் தினமும் தக்காளியின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.100-ஐ தொட்டது.
இந்த நிலையில் இன்றைய தக்காளி கிலோ ரூ.110-க்கு விற்பனை ஆகி வருகிறது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி ரூ.3500-க்கு விற்பனையானது. தக்காளி வரத்து குறைவாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
பீன்ஸ் விலையும் கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. மிளகாய் விலை வரலாற்றில் இதுவரை விற்பனை இல்லாத அளவிற்கு கிலோ ரூ.180 ஆக உயர்ந்து காணப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட நிலையில் மிளகாய் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. நாட்டுக்கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்கப்பட்டது. இஞ்சி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் 3 மடங்கு விலை உயர்ந்து கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. நாகர்கோவில் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-
தக்காளி ரூ.110, கேரட் ரூ.90, வழுதலங்காய் ரூ.80, நாட்டு கத்தரிக்காய் ரூ. 120, வரி கத்தரிக்காய் ரூ.60, வெள்ளரிக்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.35, பல்லாரி ரூ.29, பீன்ஸ் ரூ.130, புடலங்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, மிளகாய் ரூ.150, பூண்டு ரூ.150, இளவன்காய் ரூ.30,
காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு கடந்த சில நாட்களாக வரக்கூடிய காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. தக்காளி, மிளகாயை பொறுத்தமட்டில் இதுவரை இல்லாத அள விற்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் உற்பத்தி குறைந்ததே ஆகும். இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
- வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
கோயம்பேடு சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடியை நிறுத்திவிட்டனர். இதனால்தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும்" என்றார். இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.
- சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
- சேலம் மார்க்கெட்டுகளுக்கு கேரட், பீன்ஸ்வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கேரட் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனைாயாகிறது. இதே போல பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சேலம்:
சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தை களுக்கும் சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் அண்டை மாவட்டஙகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் உள்பட ஏராளமானமானோர் வாங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கேரட், பீன்ஸ்வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கேரட் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனைாயாகிறது. இதே போல பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற காய்கறிகளின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு-
தக்காளி பழம் ஒரு கிலோ ரூ.25, உருளை கிழங்கு ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.26, பெரிய வெங்காயம் ரூ. 24, பச்சை மிளகாய் ரூ.36, கத்திரி ரூ.30, வெண்டைக்காய் ரூ.24, முருங்கைக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, சுரக்காய் 15, புடலங்காய் 26, பாகற்காய் 46, தேங்காய் 25, முள்ளங்கி ரூ.36, அவரை ரூ.55 ரூபாய்க்கும் கீரைகள் ஒரு கட்டு ரூ.16, பப்பாளி ரூ.25, கொய்யா ரூ.30, சப்போட்டா 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
- பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளது.
- ய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காய்கறி மார்கெட்கள் உள்ளன இந்த மார்க்கெட்டு களுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோபா லபுரம், ஆனை மலை, வேட்டைக்காரன்புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டடு விற்பனையாகி வருகிறது.
தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் போன்றவை பொள்ளாச்சி சுற்றுப்பகுதி களிலேயே உற்பத்தி நடைபெற்று வருகிறது. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலையில் உள்ள பகுதிகளில் நன்கு வளரும் என்பதால் ஊட்டி, மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதனால், அந்த பகுதிகளில் இருந்து பொள்ளாச்சிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், கேரட் பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு வரத்து இருந்தது. ஏப்ரல், மே மாதங்களில் கேரட் ரூ.24 முதல் 30 வரையிலும் விற்கப்பட்டது. ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்ததால் பீன்ஸ், கேரட் விவசாயம் பாதிக்கப்பட்டது.
இதனால், ஜூலை மாதத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டிற்கு பீன்ஸ், கேரட் வரத்து குறைந்தது. இதனால், விலை அதிகரித்து ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
- கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது.
- வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவில் வருகிறது.
இதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.
வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். தற்போது பல மாவட்டங்களில் மழைப்பொழிவு இருப்பதால் பீன்ஸ் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேற்று மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்