search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beedi"

    • பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே கோவலம் கடற்கரை பகுதியில் முட்புதருக்குள் பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ரென்னீஸ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது முட்புதருக்குள் ஏராளமான மூட்டைகள் பதுக்கி வைக்கபட்டிருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். இதில் மொத்தம் 2 டன் எடை உள்ள பீடி இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து இந்த பீடி இலை பண்டல்கள் கொண்டு வரப்பட்டு இலங்கைக்கு கடத்தி செல்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்களை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடலோர காவல்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த பீடி இலை பண்டல்களை கடத்தி வந்தவர்கள் யார்? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து தூத்துக்குடி 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து,முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்லாமொழி கடற்கரை வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 106பீடிஇலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அவற்றை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஆரக்கோட்டை காரைக்குடியை சேர்ந்த அருள் விஜயகாந்த் (வயது 35) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மா சாலையைச் சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் 'கியூ'பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், இருதயராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் உயிர் கொல்லி பூச்சி மருந்துகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை 17பண்டல்கள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8,750 பாக்கெட்டுகளில் அடைத்து 15 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் ஆகியவை இருந்தது அவற்றை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை சாலை ரோச் பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்ததது. அப்போது போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பிச் சென்றனர்.

    போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 42 மூட்டைகளில் 35 கிலோ பீடிஇலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பீடிஇலைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பீடிஇலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? பீடிஇலைகள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடிஇலைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.

    • மாரியப்பன் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
    • சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் மாரியப்பன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வம், சுரேஷ் இருவரும் அவரிடம் பீடி கேட்டுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). இவரும், இவரது நண்பர்களான கோமதியாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம், சுரேஷ் ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்துவதாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் மாரியப்பன் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்படு கிறது. சம்பவத்தன்று சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் மாரியப்பன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த செல்வம், சுரேஷ் இருவரும் அவரிடம் பீடி கேட்டுள்ளனர்.

    இதில் ஏற்பட்ட தகராறில் அவர்கள் 2 பேரும், செங்கலை எடுத்து மாரியப்பனை கடுமையாக தாக்கியதால் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் தீயில் எரிந்து நாசமானது.

    ஆற்காடு:

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சேக் இஸ்மாயில். பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அந்த பீடி கம்பெனிக்கு ஆற்காடு அண்ணம் பாளையம் தெருவில் கிளை ஒன்றும் உள்ளது.

    அந்த கிளையில் பீடி தயாரிப்பதற்கு தேவையான இலைகளை மேல்விஷாரம் பைபாஸ் சாலை பெரிய மசூதி எதிரே உள்ள குடோனில் வைத்திருந்தனர். அந்த குடோன் மேற்கூரை முழுவதும் தகர ஷீட்டுகளால் பொருத்தப்பட்டு முன்பக்கம் இரும்பு ‌ஷட்டர் போட்டு பூட்டப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை 6 மணியளவில் அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆற்காடு தீயணைப்பு நிலையத்திற்கும், டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி அடித்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் குடோனில் 200 பெரிய மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் எரிந்து நாசமானது.

    சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பீடி இலைகள் வைக்கப்பட்டிருந்த குடோன் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் அருகே குடோனில் பீடியை பற்ற வெல்டிங் தொழிலாளி தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே குடோனினுள் வீசியதால் தீப்பிடித்தது. இதில் சிக்கி அவர் பலியானர்.
    கரூர்:

    சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 50), வெல்டிங் தொழிலாளி. இவர் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் நடைபெற்ற வேலைக்காக வந்திருந்தார். அங்கு கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கி இருந்த பணிபுரிந்து வந்தார். இதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த குடோனில் தங்கியுள்ளார். அந்த குடோனில் பெயிண்டு டப்பாக்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் இருந்தது. 

    புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஜெகநாதன், வழக்கம் போல் பீடியை பற்ற வைத்துள்ளார். பின்னர் தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே குடோனினுள் வீசி எறிந்துள்ளார். இதனால் எளிதில் தீபற்றும் தன்மையுடைய பெயிண்டு உள்ளிட்ட பொருட்களில் தீ வேகமாக பரவியது. 

    இந்த நெருப்புகளில் ஜெகநாதன் சிக்கிக்கொண்டு கூக் கூரல் எழுப்பியுள்ளார். இதனை கேட்ட சக தொழிலாளர்கள் தண்ணீர், மணலை வீசி தீயை அணைக்க முயன்றதோடு, ஜெகநாதனை? காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ஜெகநாதன் தீயில் வைத்து கருகி பலியாகினார்.

    இது குறித்து வாங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்த ஜெகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    ×