என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "beware"
- பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
- வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.
சென்னை:
செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.
உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.
இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.
தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.
இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.
இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-
இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.
பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
- சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு பல்லவ மன்னர்கள் உருவாக்கிய சிற்பங்களை பார்க்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
மாமல்லபுரத்தில் பாறைகளை குடைந்து அழகாக உருவாக்கப்பட்ட கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகள் கேமரா, டிரோன் ஆகியவை மூலம் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுக்கிறார்கள்.புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கடற்கரை கோவில் வளாகத்தில் போட்டோ ஷூட் நடத்துகிறார்கள். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள் வாகனங்களில் கூட்டமாக வந்து புல்தரைகளில் அமர்ந்து அத்துமீறும் சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிறது.
சில காதல் ஜோடிகள் கடற்கரை கோவிலில் அத்துமீறி ஏறி, தங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களை எழுதி அலங்கோலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.
இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி மாமல்லபுரத்தில் வணிக நோக்கங்களுக்காக புகைப்படம் எடுத்தல், திருமணத்துக்கு முன் போட்டோ ஷூட் எடுத்தல், விஐபி, விவிஐபி வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் வியாபாரிகள் வியாபாரம் செய்வது, காதலர்கள் சிற்பங்களின் மீது ஏறுவது, பிடித்தவர்களின் பெயர்களை எழுதுவது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்வது, பொதுக்கூட்டம் நடத்துவது, பொது விளம்பரம் செய்வது ஆகிய செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரோன் கேமரா பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான நோட்டீஸ் கடற்கரை கோவில் நுழைவு தூணில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
- உயிர் கொல்லி ஜெல்லி மீன்களை தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
- மீனவர்களுக்கு உடல்வேதனை, மூச்சு திணறல் ஏற்படும்.
ராமேசுவரம்
பாக்நீரினை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடும் விஷத் தன்மை கொண்டுள்ள நாலு மூலைச் சொறி, குத்துச் சொறி ஜெல்லி மீன்கள் அதிகளவில் கானப்படு கிறது. மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கிக்கொள்ளும் போது மீன்களுடன் கலந்திருக்கும் இதணை வெறும் கையில் தொடும்போது அது கடும் விஷத்தன்மையை பாய்ச்சி விடும்.
இதனால் மீனவர்களுக்கு உடல்வேதனை, மூச்சு திணறல் ஏற்படும். உடனே மருத்து வர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இல்லை யென்றால் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். இத னால் மீன வர்கள் வலை யில் சிக்கிக் கொள்ளும் ஜெல்லி மீனவர்களை கையால் தொடமால் விலகி இருக்க வேண்டும் என மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜெல்லி மீன் தாக்கி சில மீனவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.
- மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் “பைக்” ரேசில் இளைஞர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
- சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
மதுரை
மதுரையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்ல வசதியாகவும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மதுரை-நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சுமார் ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி களுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.
ஆனால் இரவு நேரங்களில் சொற்ப அளவி லேயே கார், இருசக்கர வாகனங்கள் பறக்கும் பாலத்தில் சென்று வருகின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடை பெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணிகளிலும் ஈடுபடு கிறார்கள். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப் போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்களில் பதிவிட்டு அதிக 'லைக்'களை பெறுவதும் இளசுகளின் தெளியாத கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் சமீபகாலமாக டிரெண்டாகி வருகிறது.
இதனை போலீசார் கடுமையாக எச்சரித்து வருகின்ற நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் நான்கு இரு சக்கர வாகனங்களில் வாலிபர்கள் அதிவேகத்தின் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயரே தூக்கிய படி அதிவேகத்தில் சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.
இது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களை கடும் பீதிக்கு உள்ளாக்கியது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள் இந்த பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாய் மறைந்து விட்டனர்.
இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர். இந்த நிலையில் பறக்கும் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ் செல்வது சமூக விரோத செயலாகும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று பலமுறை எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனை மீறி தொடர்ந்து மதுரை நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் தேவை யின்றி வாகனங்களை நிறுத்துவது பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சென்று சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்திருந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
- கடந்த 7-ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழு த்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் புயல் சின்னம் வழுவிழந்ததை தொடர்ந்து15 நாட்களுக்குப் பிறகு நேற்று மீன்வளத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடி க்க செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள 700 விசைப்ப டகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பி டிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்று ள்ளனர்.இதை போன்று வேதார ண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்