search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharat Jodo Yatra"

    • சுமார் 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    • நான் இந்த பயணத்தைத் தொடங்கியபோது வெறுப்பை அன்பு வெல்லும் என்று கூறினேன்

    காங்கிரசைச் சேர்ந்த மக்களவை எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை 2023 ஜனவரி 23 அன்று ஜம்மு காஷ்மீர்  ஸ்ரீநகரில் முடிவடைந்தது. சுமார் 145 நாட்கள் நீடித்த இந்த பயணத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி ராகுல் காந்தி வீடியோ ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    இந்த பயணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அந்த 145 நாட்களில் நான் இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன் அவர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் நான் நிறைய தெரிந்துகொண்டேன். அவர்களின் குரல்கள் பாரதத் தாயை பிரதிபலித்தன.

    நான் இந்த பயணத்தைத் தொடங்கியபோது நாட்டில் பரவியுள்ள வெறுப்பை அன்பு வெல்லும் என்றும், பயத்தை நம்பிக்கை வெல்லும் என்றும் கூறியிருந்தேன். இன்றும் நமது அந்த இலக்கு அப்படியே உள்ளது. பாரதத் தாயின் குரல் எங்கும் ஒலிப்பதிற்கும் அன்பின் குரல் நாட்டின் உள்ள மூலை முடுக்குகளில் கேட்பதற்குமான இலக்கு அப்படியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்று திரண்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் "மோடி-மோடி" என கோஷமிட்டனர். இதை கேட்டு நடைபயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி, கோஷம் எழுப்பியவர்களுக்கு காற்றில் முத்தங்களை பறக்க விட்டார்.

    பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பா.ஜ.க.-வை சேர்ந்த முகேஷ் தூபே தலைமையிலான ஆதரவாளர்கள் ராகுல் காந்தியை நோக்கி "மோடி-மோடி" என்ற கோஷங்களை எழுப்பினர்.

    எனினும், அவர்களிடம் கைகுலுக்கி, பேச முற்பட்டார் ராகுல் காந்தி. அப்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். சிறிது நேரம் அங்கிருந்த ராகுல் காந்தி அதன்பிறகு தனது வாகனத்தில் ஏறி அவர்களை நோக்கி வணக்கம் தெரிவித்து, கிளம்பும் முன் மீண்டும் ஒருமுறை முத்தங்களை காற்றில் பறக்க விட்டார்.

    • பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மூலம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.
    • குமரி முதல் காஷ்மீர் வரை சென்ற 'பாரத் ஜோடோ யாத்திரை' முதல் கட்ட வெற்றியை அடைந்தது.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ஒடிசாவில் நடத்தி வருகிறார். முன்னதாக யாத்திரையை தொடங்கும் முன் ஒடிசா ரூர்கேலா சுந்தர்கர் நகரில் உள்ள வேத்வியாஸ் கோவிலுக்கு அவர் சென்றார். அங்கு தரையில் அமர்ந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அதன்பின் ரூர்கேலாவில் ராகுல் காந்தி யாத்திரை பயணத்தை தொடர்ந்தார்.

    பிரசார பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது:-

    பாரத் ஜோடோ நியாய யாத்திரை' மூலம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.

    குமரி முதல் காஷ்மீர் வரை சென்ற 'பாரத் ஜோடோ யாத்திரை' முதல் கட்ட வெற்றியை அடைந்தது.

    2- வது கட்டமாக மக்களின் வேண்டுகோள்படி ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு போன்ற மாநிலங்களில் நடத்தப்படுகிறது. இந்த யாத்திரைக்கு மக்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.


    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டார்.
    • மொத்தம் 145 நாட்கள், 4500 கி.மீ. கொண்டதாக நடை பயணம் அமைந்தது.

    இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி வருடாந்திர தணிக்கை அறிக்கையை சமர்பித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 2023 ஜனவரி 30-ந்தேதி வரை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டார்.

    இதற்காக 71.8 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 50 லட்சம் ரூபாய் விதம் மொத்த நாளைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு 1.59 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

    கட்சிக்கு 452 கோடி ரூபாய் நிதி கிடைத்த நிலையில் 2022-2023-ம் ஆண்டில் 467 கோடி ரூபாய் செலவு ஆனதாக தெரிவித்துள்ளது. இதில் 192 கோடி ரூபாய் தேர்தல் செலவாகும்.

    ராகுல் காந்தியின் நடை பயணம் மொத்த 145 நாட்கள் (இடைவெளி நாட்களும் சேர்த்து) கொண்டதாக இருந்தது. மொத்தம் 4500 கி.மீட்டர் தூரம் உள்ளடக்கியதாகும்.

    2021-22-ல் செலவு 400 கோடியாக இருந்த நிலையில் 2022-2023-ல் 467 கோடியாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் கட்சி நிதி 2021-22-ல் 541 கோடியாக இருந்த நிலையில், 2022-23-ல் 452 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.
    • இரண்டு நாட்கள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டார்.

    காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையை இரண்டு நாட்களுக்கு பிறகு, ராகுல் காந்தி நாளை (ஜனவரி 28) மேற்கு வங்காளம் மாநிலத்தில் துவங்குகிறார். நாளைய யாத்திரை மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் துவங்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.

    ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி 14-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து துவங்கியது. அங்கிருந்து அசாம் வழியாக மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பெஹர் மாவட்டத்தை அடைந்தது. கடந்த வியாழன் கிழமை (ஜனவரி 25) கூச்பெஹரில் ரோட் ஷோ நடத்திய ராகுல் காந்தி அதன் பிறகு இரண்டு நாட்கள் ஓய்வுக்காக டெல்லி புறப்பட்டு சென்றார்.

    "சிறு இடைவெளியை தொடர்ந்து ராகுல் காந்தி நாளை காலை 11.30 மணிக்கு பாக்தோரா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஜல்பாய்குரிக்கு சென்று யாத்திரையில் மீண்டும் கலந்து கொள்கிறார். இந்த முறை யாத்திரை நடைபயணம் மற்றும் பேருந்து என இருவிதங்களிலும் நடைபெறும். நாளை இரவு சிலிகுரி பகுதியில் உறக்கத்திற்காக யாத்திரை நிறுத்தப்படும்," என மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் சுவங்கர் சங்கர் தெரிவித்து இருக்கிறார். 

    • கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார்.
    • யாத்திரையின் போது ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.

    இந்தியா முழுக்க மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நாடு முழுக்க துவங்கி இருந்தார்.

    இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையின் முதலாம் ஆண்டு நினைவை குறிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க மாவட்டம் தோறும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்த முடிவு எடுத்து இருக்கிறது. இந்த யாத்திரையின் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

     

    கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். 145 நாட்கள் நீடித்த பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி ஸ்ரீநகரில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள், பொது மக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    யாத்திரையின் போது ராகுல் காந்தி 12 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். இதுதவிர நூற்றுக்கும் அதிக கூட்டங்கள், 13 செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவைகளில் கலந்து கொண்டார். சுமார் 275-க்கும் அதிக உரையாடல்களை நடந்து கொண்டே மேற்கொள்ளவும், 100-க்கும் அதிக உரையாடல்களை உட்கார்ந்த படி மேற்கொள்ளவும் திட்டமிட்டுருந்தார்.

    அரசியல்வாதிகள், பொதுகமக்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள், முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூர், முன்னாள் வான்படை தலைவர் ராமதாஸ், முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன், எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பலர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபயணம் மேற்கொண்டார்.
    • 2-வது கட்டமாக குஜராத், மேகாலயா இடையே ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

    இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களை கடந்து சென்றது. மொத்தம் 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது.

    இந்நிலையில், ராகுல் காந்தி மீண்டும் குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணம் மேற்கொள்ள உள்ளார் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டார். கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக மீண்டும் ஒற்றுமை யாத்திரையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இம்முறை குஜராத் மாநிலத்திலிருந்து மேகலாயா வரை நடைபயணம் மேற்கொள்ளலாம். இதில் பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    ராகுல் காந்தி குஜராத் முதல் மேகாலயா இடையே நடைபயணத்தை தொடங்கும்போது, நாங்களும் மகாராஷ்டிராவில் நடைபயணம் தொடங்க உள்ளோம்.

    அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி நடைபயணத்தை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளது. ராகுல் காந்தி நடைபயணம் தொடர்பான தேதி விரைவில் அறிவிக்கப்டும்.

    மாநில காங்கிரஸ் சார்பில் விதர்பாவில் எனது தலைமையில் நடைபயணம் நடைபெறும். மேற்கு விதர்பாவில் எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தலைமையிலும், மேற்கு மகாராஷ்டிராவில் முன்னாள் முதல் மந்திரி பிருத்விராஜ் சவான் தலைமையிலும், நிதி தலைநகரான மும்பையில் வர்ஷா கெய்க்வாட் தலைமையிலும் நடைபயணம் நடைபெறும்.

    மராத்வாடாவில் முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான் தலைமையிலும், வடக்கு மகாராஷ்டிராவில் பாலாசாகிப் தோரட் பொறுப்பிலும் நடைபயணம் நடைபெறும். மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

    • இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது.
    • காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சென்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் வெற்றி விழா தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செண்பகம், மாவட்ட பிரதிநிதி ஆதிமூலம், நகர துணைத்தலைவர்கள் காதர் அலி, கோதரிவாவா, மாரியப்பன், நகர செயலாளர் இசக்கியப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

    நகர இலக்கிய அணி தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் மாநிலபொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் தேசியக் கொடியை கையில் ஏந்தியும், பட்டாசு வெடித்தும் இந்திய ஒற்றுமை பயணத்தின் வெற்றி விழா கோஷங்கள் எழுப்பபட்டது. முன்னதாக காந்தி உருவச்சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

    • மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.
    • காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை மாறாக மிகுந்த அன்புடன் இதயத்தை கொடுத்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 3 ஆயிரத்து 3500 கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 'நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை... நாட்டு மக்களுக்காக மேற்கொண்டேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.

    தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி, அந்த வலி வன்முறை தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது என்றார். வன்முறையை தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. ராணுவ வீரனின் குடும்பத்தினருக்கு அந்த வலி புரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும்.

    ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள். இந்த யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் ஒருவரின் அன்பானவனரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிப்பதற்கு முடிவு கட்டுவதேயாகும். அது ராணுவ வீரராக இருந்தாலும், சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும் அல்லது எந்த ஒரு காஷ்மீரியாக இருந்தாலும் சரி. ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்து வர முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள், இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல மாறாக அவர்கள் பயப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை சென்றால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எனக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. நான் இது குறித்து யோசித்தேன். பின்னர், எனது வீடான ஜம்மு காஷ்மீரில் எனது மக்களுடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது வெள்ளை சட்டையை சிவப்பு நிறமாக மாற்ற அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நினைத்தேன். காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை, மாறாக மிகுந்த அன்புடன் அவர் இதயத்தை கொடுத்துள்ளனர்' என்றார்.

    • பல்வேறு மாநிலங்களை கடந்து வந்த பாத யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
    • காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டரை கடந்த ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை நிறைவடைகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்துடன் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவடைகிறது.

    இந்நிலையில், பாத யாத்திரையின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல் காந்தி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும், அன்பு எப்போதும் வெற்றி பெறும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.

    • பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.
    • பாதுகாப்பு விலக்கப்பட்டதால், மக்கள் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார்.

    பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர். இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி இன்றைய யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டிருந்த ராகுல் காந்தி, பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.

    ராகுல் காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்றபோது, திடீரென பாதுகாப்பு விலக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த ஏராளமானோர் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது கடுமையான பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியது என்றும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார்.
    • ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீரில் நடந்து வருகிறது.  குடியரசு தினத்தையொட்டி ஒரு நாள் இடைவேளைக்கு பிறகு இன்று யாத்திரை மீண்டும் தொடங்கியது.

    பனிஹால் பகுதியில் ராகுல் காந்தி தனது யாத்திரையை தொடங்கினார். இதில் அவருடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான உமர் அப்துல்லா இணைந்தார். ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் யாத்திரையில் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய உமர் அப்துல்லா, ராகுல் காந்தி தலைமையிலான இந்த யாத்திரையானது, அவரது இமேஜை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் யாத்திரை அல்ல, மாறாக நாட்டின் சூழலை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றார்.

    ×