என் மலர்
நீங்கள் தேடியது "bike"
- கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார்.
- ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவி எரித்துள்ளனர்.
ராஜஸ்தானின் கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று அவரது உடலை மனைவி பைக்கில் கொண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜெய்ப்பூரில் தனலால் என்பவர் தனது மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவு குறித்து கேள்வி எழுப்பித்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொன்றுள்ளார். பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு எடுத்து சென்று கணவரது உடலை மனைவியும் கள்ளகாதலனும் எரித்துள்ளனர்.
மார்ச் 16 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் ஒரு உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து தனலால் மனைவி கோபாலி தேவி மற்றும் அவரது காதலர் தீனதயாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- பைக் மோதி இளம்பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தவர்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
புதூர் ராமலட்சுமி நகரை சேர்ந்த பாண்டி மகள் காதம்பிரியா (24). சம்பவத்தன்று காலை இவர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் நடந்து சென்றார். வணிக வளாகம் அருகே, வேகமாக வந்த பைக் மோதியது.
இதில் காதம்பிரியா படுகாயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதுரை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த தேனி மாவட்டம், சிப்பலாக்கோட்டை, அம்பிகை கோவில் தெருவை சேர்ந்த மணிவண்ணன் (34) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊமச்சிகுளம், புது நத்தம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேர்ந்த ராஜாராம் மனைவி தனம் (80). இவர் வெளியூருக்கு செல்வதற்காக, குடிநீர் வடிகால் வாரிய காலனி பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.
வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி தனத்தை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்த மதுரை இளம்பூர் இளங்கோ முருகன் ராம்பாபு (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் காஜா முகமது.
- எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காஜா முகமது படுகாயம் அடைந்தார்
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவரது மகன் காஜா முகமது(வயது 27). இவர் நேற்று மேலப்பாளையம்-அம்பை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் உச்சிமாகாளி(24) தனது சகோதரர் அரிகரசுதன்(12) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக 2 பேரின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காஜா முகமது படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த காஜா முகமது மற்றும் 2 பேரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹோண்டா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புது தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது தொழில்நுட்பம் ஹோண்டா ஸ்கூட்டர் மற்றும் பைக் என இருசக்கர வாகனங்களில் வழங்கப்படுகிறது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் அம்சம் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. புது தொழில்நுட்பம் H ஸ்மார்ட் என அழைக்கப்படுகிறது. ஹோண்டாவின் புதிய H-ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஜனவரி 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புது தொழில்நுட்பம் எதுபோன்ற வசதியை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. எனினும், இதற்கான டீசரில் இந்த தொழில்நுட்பம் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.
ஹீரோ நிறுவனத்தின் iஸ்மார்ட் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், யமஹா நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் என பல்வேறு நிறுவனங்கள் அதிக மைலேஜ் வழங்கும் தொழில்நுட்பங்களை வழங்க துவங்கிவிட்டன. அந்த வகையில் ஹோண்டா ஏற்கனவே தனது வாகனங்களில் சைலண்ட் ஸ்டார்ட் அம்சத்தை வழங்கி இருக்கிறது. எனினும்,ஸ ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை.
அந்த வகையில் புது தொழில்நுட்பம் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம் ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் ஹோண்டா CB300F மற்றும் ஹைனெஸ் CB350 போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் ப்ளூடூத் மூலம் கனெக்டிவிட்டி வசதியை வழங்கும். இது ஹோண்டா வாகனங்களின் டிஜிட்டல் டேஷ்-இல் நோட்டிஃபிகேஷன் அலெர்ட் மற்றும் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வசதியை வழங்குகிறது.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய 750சிசி மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- டிரான்சால்ப் 750 மாடலில் உள்ள என்ஜின் புதிய 750சிசி மாடலிலும் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்ட மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் GB750 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. ஜப்பானில் GB350, சர்வதேச சந்தையில் ஹைனெஸ் CB350 வடிவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதை போன்றே புது மாடலிலும் பழைய மோட்டார்சைக்கிள்களை போன்ற டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
அந்த வகையில் புது மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், குறைவான பாடிவொர்க், ஹை-ரைஸ் ஹேண்டில்பார்கள், ஃபோர்க் கெய்ட்டர்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் GB750 மாடலில் ரெட்ரோ-ஸ்டைல் பெயிண்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை இந்த மாடலில் டிரான்சால்ப் 750 மற்றும் CB750 ஹார்னெட் மாடல்களில் உள்ள யூனிட் வழங்கப்படலாம்.
எனினும், இந்த மாடலில் பழைய பைக் போன்ற தோற்றத்தை கொடுக்கும் பாகங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள், பின்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க்குகள் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஎஃப்டி டேஷ், ரைடு மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
புதிய ஹோண்டா GB750 மாடல் பற்றி இதுவரை ஹோண்டா தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இந்த மோட்டார்சைக்கிள் டிரையம்ப் போன்வில் T100 மற்றும் கவாசகி Z650RS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- வீச்சரிவாளுடன் வந்து பைக் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரமேஷ்.
இவர் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலை எழுத்து பார்த்தபோது பைக் காணவில்லை.
பக்கத்து வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராவை ரமேஷ் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வீச்சரிவாளு டன் நள்ளிரவில் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த வாலிபர்கள் திருட்டை தடுக்கச் சென்றால் வீச்சரி வாளால் கொலை செய்ய வும் தயங்க மாட்டார்கள் என்ற நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த திருடர்கள் யார்? வேறு திருட்டு அல்லது கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களா? என தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறை வான அவர்களை தேடி வருகிறார்கள்.
- மதுரை அருகே உள்ள கடைக்குள் பைக் புகுந்தது.
- பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் படுகாயமடைந்தார்.
மதுரை
மதுரை தபால்தந்தி நகர், பேங்க் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சாமுவேல் தாய் மஞ்சுளா (49) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது திருமங்கலம், முல்லைநகர் பகுதியில், அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள், அங்குள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்குள் புகுந்தது. இதில் சாமுவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மஞ்சுளாவுக்கு தலை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாமுவேல், மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். கூலிதொழிலாளி. இவரது மகன் அபிஷேக். இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை அபிஷேக், கல்லூரியை முடித்துவிட்டு நண்பர் செந்திலேஸ் பாபுவுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கழுகூரணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அபிசேக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். படுகாயமடைந்த மாணவர் செந்திலேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்திய சந்தையில் இந்த பிரிவின் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.
சுசுகி நிறுவன இந்திய விற்பனையாளர்கள் V-Strom 650XT மாடலுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுசுகி நிறுவனம் V-Strom 800DE மாடல் அறிமுகம் பற்றி விற்பனையாளர்களுக்கு தகவல் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய சுசுகி V-Strom 800DE மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கவில்லை.
சுசுகி V-Strom 800DE மாடலில் 776சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 83 ஹெச்பி பவர், 78 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி V-Strom 800DE மாடலில் பல்வேறு ரைடிங் மோட்கள் உள்ளன.

சுசுகி V-Strom 800DE
இத்துடன் டு-வே குயிக்ஷிப்டர், டிராக்ஷன் கண்ட்ரோல், 5 இன்ச் டிஎப்டி ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார்சைக்கிளில் 21/17-இன்ச் ஸ்போக் வீல், டன்லப் டிரெயில்மேக்ஸ் மிக்ஸ்டூர் ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு ஷோவா முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் கிரவுண்ட் கிளியரன்ஸ் 855 மில்லிமீட்டர்கள் ஆகும். இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இது இந்த பிரிவில் குறைந்த விலை மோட்டார்சைக்கிளாக இருக்கும் என்று தெரிகிறது. இந்திய சந்தையில் சுசுகி V-Strom 800DE மாடல் பிஎம்டபிள்யூ F850GS, டிரையம்ப் டைகர் 900 ரேலி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள்
- புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள புட்டா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 66).
இவர் கடந்த 14-ந் தேதி மாலை பொதியம்பட்டி - புட்டா ரெட்டியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த ஒருவர், எதிர்பாராத விதமாக ராஜம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ராஜம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர்கள் ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தேடி வருகிறார்.
- புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
- தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் அதிகாலையில் வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் பைக்கில் நெருங்கியவாறு உட்கார்ந்து சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள் மற்ற வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றனர்.
பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முத்தம் கொடுத்தபடியும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறும் வாலிபர் பைக் ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது மணவெளி ரோடு சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். பைக்கில் வாலிபரும், இளம்பெண்ணும் சில்மிஷத்தில் ஈடுபட்டவாறு ஜாலியாக வருவதை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலிபர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவர் அவரது தோழி என்பதும் தெரியவந்தது.
அவர்கள் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து திரும்பியபோது பைக்கில் ஜாலியாக சென்றது தெரியவந்தது.
அந்த வாலிபர் குடிபோதையில் இருந்தார். போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர் அவ்வழியே வந்த வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் வாலிபரையும், அவரது தோழியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக கூறி அந்த வாலிபர் அங்கிருந்த இரும்பு கேட்டில் முகத்தை வேகமாக இடித்துகொண்டார்.
இதில் காயமடைந்த வாலிபரை போலீசார் அழைத்து சென்று அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குளித்தலை அருகே பைக் மாயமானதாக போலீசில் புகார் கொடுக்கபட்டது
- இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
குளித்தலை அடுத்த,கொசூர் பஞ்., குப்பமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 33). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பின்னர் இதுகுறித்து புகாரின்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.