search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bill Theft"

    • இந்த கோவிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் விஷேச பூஜைளும் நடத்தப்படும்.
    • கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி கிராமத்தில் பழமையான முத்தாளம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் தை மாதத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். மேலும் அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை உள்ளிட்ட முக்கிய நாட்களில் விஷேச பூஜைளும் நடத்தப்படும்.

    கோவிலுக்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

    உண்டியல் திருட்டு

    இக்கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சின்னண்ணன் என்கின்ற வெள்ளையன் என்பவர் பூசாரியாக உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் இந்த கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாத்தியம்பட்டியை சேர்ந்த கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவில் நிர்வாகிகள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    சி.சி.டி.வி கேமிரா

    அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

    இதில் முத்தாளம்மன் கோவிலின் பூசாரி வெள்ளையன் கோவிலில் இருந்த வேலை பயன்படுத்தி பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் பின்னர் அங்கிருந்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    அதிர்ச்சி

    இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பூசாரி வெள்ளையனை பிடித்து ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி வெள்ளையனை கைது ெ சய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் பூசாரியே உண்டியல் உடைத்து பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • உண்டியல் உடைத்து துணிகரம்
    • கண்காணிப்பு கேமரான காட்சிகள் ஆய்வு

    ஆரணி:

    ஆரணி அடுத்த பையூர் எம்ஜிஆர் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம்போல் காலையில் பூஜை செய்துவிட்டு இரவு பூசாரி கோவில் நடையை சாத்தி விட்டு சென்றார்.

    பின்னர் காலையில் கோவில் திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணத்தை மர்ம கும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது .

    இதே போல ஆரணி வந்தவாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • ஆம்பூர் வாலிபர் கைது
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சிக்கினார்

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன், பி கஸ்பா, மண்டைகரை பகுதியில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கஸ்பா பகுதியை சேர்ந்த பாபு (வயது 33) என்பவர் கோவிலுக்குள் சென்று உண்டியலில் கைவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார்.

    இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது உண்டியலில் கைவிட்டு பணத்தை திருடி சென்றது பாபு என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

    இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி சென்றது சி.சி. டி.வி காட்சியில் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருவேட்டக்குடி கிராமத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு போனது. இதனை அடுத்து இது குறித்து கோவில் நிர்வாகம், கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரவு நேரத்தில்2 மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து தூக்கி செல்லும் சி.சி. டி.வி காட்சி தற்போது சமூக வலைத்தளங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து, மேலும் சி.சி. டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீசார் விசாரணை
    • இரவில் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் உப்பர ந்தாங்கல், ராஜபாளையம் அய்யம்பே ட்டைசேரி உள் ளிட்ட கிராமங்கள் உள்ளன. உப்பரந்தாங்கல் பஸ்நிறுத்தம் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    அதேபோன்று ராஜ பாளையம் பஸ் நிறுத்தம் அரு கில் கெங்கையம்மன் கோவி லும், அய்யம்பேட்டைசேரி பஸ் நிறுத்தம் அருகில் கன் னிக்கோவிலும் உள்ளன.

    பஸ் நிறுத்தம் அருகில் கோவில்கள் இருப்பதால் வெளியூர் செல்லும் மாண வர்கள், தொழிலாளர்கள், பயணி கள் அனைவரும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

    இந்தநிலையில் 3 கோவில்களிலும் மர்ம கும்பல் சம்பவத்தன்று இரவு உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதனை நேற்று காலையில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

    நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கோவில்களின் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது அப்பகுதி பொதுமக் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவு
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு ஆரணி விழுப்புரம் நெடுஞ்சா லையில் பழமையான ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் வழக்கம்போல் பூசாரி பூஜை செய்துவிட்டு நேற்று இரவு நடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறப்பதற்கு பூசாரி வந்தார். அப்போது கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த சி.சி.டி.வி. காட்சியில் 2 பேர் கோவில் கேட்டின் பூட்டை உடைப்பதும் மற்றொரு நபர் கோவிலின் வெளியே பைக்கில் காத்திருப்பதும், பின்னர் கோவிலில் உள்ளே புகுந்த 2 பேர் உண்டியலை கடப்பாரையால் உடைத்து பணத்தை திருடி செல்வதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி மர்ம கும்பல் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே கோவிலில் திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • ஜெயின் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மயிலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கோவில் உண்டியல்களை உடைத்து பணம் மற்றும் காணிக்கை பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இதேபோல் விளங்கம்பாடி அய்யனாரப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணம் மற்றும் காணிக்கை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில் மயிலம் அருகே கீழ் எடையாளம் கிராமத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன்(வயது19), என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அய்யனாரப்பன் கோயில் உண்டியலை உடைத்து திருடியதும், கீழ எடையாளம் பகுதியில் உள்ள ஜெயின் கோவிலில் உண்டியலை உடைத்து திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 1750 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×