என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Leader"

    • விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது
    • பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்

    சூரம்பட்டி,

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடன் வாங்கி மொபட்டை வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதற்கான தவணை கட்டப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில் செந்தில் குமார் வாங்கிய மொபட்டை ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு செருப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளதாக நிதி நிறுவன த்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையொட்டி நிதி நிறுவன ஊழியர்கள் விக்னேஷ் குமார் (26)என்பவர் உள்பட 3 பேர் அந்த கடைக்கு சென்று அங்கு நின்ற மொபட்டை எடுக்க முயற்சி செய்தனர்.

    அப்போது கடையில் இருந்த செருப்பு கடையின் உரிமையாளரும் பாரதீய ஜனதா கட்சி பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளருமான விநாயக மூர்த்தி அவர்களை தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் குமாரை கடைக்குள் உள்ள ஒரு அறைக்கு இழுத்து சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் குமார் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து விக்னேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கியதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி பொது செயலாளர் விநாயக மூர்த்தி மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.

    இதுபற்றி சூரம்பட்டி போலீசார் கூறும் போது

    இறந்த செந்தில் குமார் விநாயக மூர்த்தியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணம் கடன் வாங்கி யிருந்ததாகவும் இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் இறந்து விட்டதால் செந்தில் குமாரின் வீட்டுக்கு சென்று ஸ்கூட்டரை எடுத்து வந்ததாவும் அந்த மொபட்டை தனது செருப்பு கடை முன்பு நிறுத்தி இருந்ததாகவும் கூறினர்.

    • 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை.
    • தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி வில்லியனூரில் வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாஜக பிரமுகரான செந்தில் என்பவர் அங்குள்ள பேக்கரி கடையில் நின்றுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவர் மீது வெடிகுண்டு வீசியும், கத்தியால் தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் தப்பி சென்ற மர்ம நபர்கள் தொடர்பாக சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் இணைந்த சிந்தியா தற்பொது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
    • தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின் உச்சகட்டமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவில் இணைந்த சிந்தியா தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.

    இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்பற்றி பாஜகவில் இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார். சிவபுரியில் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பைஜ்நாத் சிங்குடன், மாவட்ட அளவிலான 15 பாஜக தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். அவர்களை மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் ஆகியோர் வரவேற்றனர்.

    தலைவர்கள் அதிருப்தி காரணமாக கட்சி தாவுவது சகஜம் என்றாலும், பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை கொண்டாடும் வகையிலும், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது. 400 வாகனங்கள் அணிவகுக்க, தனது தொகுதியான சிவபுரியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள போபாலுக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பைஜ்நாத் சிங், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சீட் கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் ஏற்படாததால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • இதுதான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி.
    • வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, கண்டனம் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர், பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என அவர் கூறியுள்ளார்.

    மேலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானையும் டேக் செய்துள்ள அவர், "இது தான் பழங்குடியினர் மீதான உங்கள் அன்பா? இதை காட்டு தர்பார் என்று அழைக்கவேண்டும். ஏன் பாஜக தலைவரை கைது செய்யவில்லை?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதேபோல் பிரவேஷ் சுக்லா பாஜக எம்எல்ஏக்களுடன் இருந்த புகைப்படங்களை மற்றொரு டுவிட்டர் பதிவில் ஷேர் செய்திருந்தார்.

    டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ நரேஷ் பால்யனும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை டேக் செய்து இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

    வீடியோவை பார்த்த பலரும் பாஜக பிரமுகரின் செயலை வன்மையாக கண்டித்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    வீடியோ வைரலாக பரவிய நிலையில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாநில முதலமைச்சர் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    • பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது.
    • மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

    காரைக்குடி

    காரைக்குடியில் பா.ஜனதா பிரமுகர் இல்ல திருமண விழா நடந்தது. மத்திய மந்திரி, ஜார்கண்ட் கவர்னர் வாழ்த்து தெரிவித்தனர்.

    காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் வேலங்குடி சுசிலா-துரை ராஜ் தம்பதியின் இளைய மகனும், பா.ஜனதா கட்சி இளைஞரணியின் மாநில துணைத்தலைவரும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான பாண்டித்துரை சகோதரருமான கார்த்திகேயன், பள்ளத்தூர் சபாரத்தினம்-சாந்தி தம்பதியின் மகள் தாரணி ஆகியோரது திருமண விழா நடைபெற்றது. திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முருகன், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பி இருந்தனர்.

    திருமண விழாவில் மணமக்கள் கார்த்திகேயன்-தாரணியை மதுரை ஆதீனம், பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், தென் பெருங்கோட்ட பொறுப்பா ளர் நரசிங்கப்பெருமாள், மாநில விவசாய பிரிவு துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர், பா.ஜனதா மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, மாவட்ட பொதுச் செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.வி.நாராயணன், சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், தொழிலதிபர்கள் பி.எல்.படிக்காசு, பொன் பாஸ்கர் மாங்குடி எம்.எல்.ஏ. மற்றும் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், வர்த்தக பிரமு கர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவிற்கு வந்தவர்களை சுசிலா துரை ராஜ், பாண்டித்துரை-திவ்ய குமாரி தம்பதியினர் வரவேற்றனர்.

    • பாஜகவில் இணைந்ததில் இருந்து அவருக்கு டெல்லி பிரிவில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
    • பாஜகவின் மத்தியப் பொறுப்பாளர்கள் பட்டியலை, தலைவர் ஜேபி நட்டா மறுசீரமைத்தார்.

    பாரதிய ஜனதா கட்சி தலைவர் கபில் மிஸ்ராவை டெல்லி பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மிஸ்ராவை நியமித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, "இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாகவும், ஆனால் சில காரணங்களால் அதை அறிவிக்க முடியவில்லை" என்றும் கூறினார்.

    இந்துத்துவா சித்தாந்தம் குறித்த அவரது "தீவிரமான" பேச்சுகளுக்கு பெயர் பெற்ற மிஸ்ரா, பாஜகவில் இணைந்ததில் இருந்து அவருக்கு டெல்லி பிரிவில் எந்த நிர்வாகப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

    கடந்த ஜூலை 29 அன்று, பாஜக அமைப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்பை அறிவித்தது. பாஜகவின் மத்தியப் பொறுப்பாளர்கள் பட்டியலை, தலைவர் ஜேபி நட்டா மறுசீரமைத்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் இருந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) மகளிர் அணித் தலைவர் ரிச்சா பாண்டேவுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
    • ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.

    நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.

    அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.

    அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

    அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.

    தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    • நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
    • சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் மனைவி தனது காரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள கோவிந்த புரியில் இருக்கும் பழுது பார்க்கும் மையத்தில் சோதனைக்காக கொடுத்திருந்தார்.

    அந்த காரை அவரது டிரைவர் ஜோகிந்தர் திரும்ப பெற்று வந்தார். அந்த சமயத்தில் அந்த கார் திருட்டு போய்விட்டதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த கார் குருகிராம் நகரை நோக்கி சென்றதாக சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

    அந்த காரை மீட்டு தருமாறு நட்டாவின் மனைவி மீண்டும் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    • அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    • அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சேலம் சமூர் ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் வழக்கு தொடரப்படுகிறது.

    சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

    அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    தொடர்ந்து, அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    • அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும்.

    சேலம் சமூர் ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சமூக ஆர்வலர் வழக்கு தொடரப்படுகிறது.

    சேலம் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார்.

    அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    தொடர்ந்து, அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், எத்தனை வழக்குகள் போட்டாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;

    கடந்த 3 ஆண்டுகளில், தி.மு.க அரசு என் மீதும், எங்கள் பா.ஜக., நிர்வாகிகள் மீதும் உண்மையை பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.

    என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய தி.மு.க.வின் உண்மை நிலை மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக பாஜக பிரமுகர் விஜயகுமார் புகார் அளித்தார்.
    • இந்த கொள்ளை வழக்கில் அன்பரசன் என்பவரை காவல்துறை கைது செய்தது.

    நேற்று முன்தினம் பாஜக பிரமுகர் விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கோவை அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த கொள்ளை வழக்கில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமார் வீட்டில் இருந்த ரூ.18.5 லட்சம் ரொக்க பணம், 9 சவரன் தங்கம், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடித்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    ஆனால் விஜயகுமார் தனது வீட்டில் ரூ.1.5 கோடி ரொக்க பணம் திருடு போனதாக தெரிவித்தால் அவரிடம் மீண்டும் காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், கொள்ளை தொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் தொகையை குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து அன்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அன்பரசன் மீது ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் பொய்யான புகாரை கூறி போலீசாரை அலைக்கழித்தாக பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது நீதிமன்ற உத்தரவுப்படி 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக கோவை எஸ்.பி. பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். 

    • யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.
    • சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல்.

    சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் கடையை மையமாக வைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில், கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர் கடையில் பணியாற்றிய 7 பேருக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டிருந்தது.

    வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வருவோரிடம் இருந்து தங்கத்தை பெற்று, சுக்க சோதனை இல்லாமல் கடத்தியது தெரியவந்தது.

    இந்நிலையில், சபீர் அலி உள்பட 9 பேர் கைதான நிலையில், பாஜக நிர்வாகி பிருத்வி என்பவருக்கு சம்மன் அனுப்பி சுங்க இலாகா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சபீர் அலி கடை நடத்துவதற்கு விமான நிலைய ஆணையத்திற்கு பிருத்வி பிரந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×