என் மலர்
நீங்கள் தேடியது "book festival"
- தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர்.
- சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
சுரண்டை:
சுரண்டையில் பொதுநல மன்றம் மற்றும் சமூகநல இயக்கம் சார்பில் காம ராஜர் மார்க்கெட் வணிக வளாகத்தில் 4-வது புத்தகத் திருவிழா, கண்காட்சி தொடக்க விழா நடந்தது.
சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜர்,சமூக ஆர்வலர் தொழிலதிபர் ரத்தினசாமி, சுரண்டை கல்லூரி முதல்வர் சின்னத்தாய், தாசில்தார் தெய்வசுந்தரி, கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், துணைத் தலைவர் கணேசன், சேர்மச் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் ஆறுமுகம் அறிவியல் இயக்க சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சிறப்புரையாற்றினர். கண்காட்சி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 48 அரங்குகளும், 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட தலைப்புகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களும் இடம் பெற் றுள்ளன.
கண்காட்சியில் தினமும் பொது அறிவு போட்டி, வாசிப்பு திறன் ஊக்குவித்தல் போட்டி, பேச்சுப்போட்டி வினாடி-வினா,சதுரங்க போட்டி, ஓவிய போட்டி, பெண் ஆளுமைகளை கவுரவித்தல், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் தினமும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் ஏ.டி.என்.நடராஜன், ஆறுமுகசாமி, ஆசிரியர்கள் ஆரோக்கிய ராசு, ஜெயராம், சுரேஷ்குமார், சாதனா ரமேஷ், ஏ.டி.என் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், சாந்தி தேவேந்திரன்,சமுத்திரம்,வேல்முத்து,பேபிஜெசி,ரமேஷ்,பால்துரை மற்றும் பள்ளி,கல்லூரி பேராசிரியர்கள்,அரசு அதி காரிகள், எழுத்தாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+2
- வருகிற 25-ந் தேதி‘6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா’ தொடங்குகிறது.
- அரங்குகள் அமைக்கும் பணியினை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) பாளை வ.உ.சி. மைதானத்தில் '6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா' தொடங்குகிறது.
100-க்கும் மேற்பட்ட அரங்குகள்
அடுத்த மாதம் 7-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த புத்தக திருவிழா அனைவருக்குமான பண்முக தன்மையை போற்றும் வகையிலும், அனைவருக்குமான விழாவாக நடத்தப்படுகிறது.
விழாவில் முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள், பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கு பெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடுகள் நடைபெறுகின்றன.
இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
புகைப்பட கண்காட்சி
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் இல்லாத புத்தக திருவிழா வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவை காண வரும் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான பாரம்பரிய உணவுகள் வழங்கிட உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.
விழாவின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. மேலும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
கலெக்டர் ஆய்வு
புத்தக திருவிழாவை யொட்டி வ.உ.சி. மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியினை கலெக்டர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் குமார், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாசகங்கள் எழுதும் போட்டி
புத்தகத் திருவிழா விற்கான கருத்தை உள்ளடக்கிய வாசகங்கள் எழுதும் போட்டி நடை பெறுகிறது. இப்போ ட்டிக்கு வாசகங்கள் மேற்படி கருத்தை உள்ளடக்கி யதாகவும், சுமார் 4 அல்லது 5 வார்த்தை களுக்கு மிகாமலும், பிறமொழி கலப்பில்லா மலும், படைப்பாளியின் சொந்த கருத்தாகவும் இருத்தல் வேண்டும். இப்போ ட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணகள் உட்பட பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம்.
போட்டிக்கான வா சகங்களை படைப்பாளியின் முழு முகவரி, தொடர்பு எண் ஆகிய விபரங்களுடன் வருகிற 23ந் தேதி மாலை 5 மணிக்குள், porunainellaifest@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 வாசகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பிடிக்கும் வாசகமானது இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் கருப்பொருள் வாசசுமாக பயன்படுத்தப்படும் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
- முதல் நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- முதல் 3 நாட்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான 22 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
பெருநை நெல்லை 6-வது புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. இதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதில் 110 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
மாணவ- மாணவிகள்
முதல் நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பரத நாட்டி யம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுமார் பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனை யானது.
இதனை ஏராளமான வர்கள் பார்வையிட்டு செல்கின்றனர். விடுமுறை தினமான இன்று ஏராள மான பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் புத்தக திருவிழாவிற்கு வந்தனர்.
விளையாட்டு போட்டிகள்
புத்தக திருவிழாவை யொட்டி தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாணவ- மாணவிகளுக்கு மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகளான கோலிக்காய், பம்பரம், வட்டு உருட்டுதல், பச்சை குதிரை, கயிறு இழுத்தல், கயிறு தாண்டுதல், பல்லாங்குழி, தாயம் கட்டம், பாம்பு கட்டம், சிறுமிகளுக்கு பாண்டி, கொலை கொலையா முந்திரிக்காய் உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டுகள் நடத்தப்படுகிறது.
மேலும் பார்வை திறன் அற்ற மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு பயிற்சி வகுப்பு மற்றும் போட்டிகள் நடத்தப்படு கிறது.
சிறப்பு அரங்குகள்
இந்த ஆண்டு 6-வது பொருநை நெல்லை புத்தக திருவிழா மாற்றுத்திறனாளி உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கியது என்பதை வலியுறுத்தி 'அனைவருக்கு மான பன்முக தன்மை' என்ற தலைப்பில் அமைக்கப் பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முதல் 3 நாட்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான 22 சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு பொருட்கள் இடம் பெற்றுள்ளது.
இவர்கள் இடம் பெறும் வகையில் வீல்சேர் கால்பந்து, தொடு முறையில் வண்ணம் தீட்டுதல், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி நடைமுறைகள், ஸ்மார்ட் வகுப்பறை, பார்வையற்றோருக்கு ஏற்ற வகையில் சாதாரண புத்தகங்களை 'இ' புத்தகங்களாக மாற்றும் வகையில் முறைகள் ஆகியவை அடங்கி உள்ளது.
மேலும் தொடர் வாசிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.
புத்தக திருவிழாவை யொட்டி மாணவ- மாணவி களுக்காக ஏற்கனவே போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் சேரன் மகாதேவி கல்வி மாவட்டம், வள்ளியூர் கல்வி மாவட் டத்தில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் இன்று நடைபெற்ற போட்டி யில் கலந்து கொண்டனர்.
- மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
- காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
நெல்லை :
பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின் 6-வது நாளான இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கில் மாவட்ட அருங்காட்சியகம் சார்பில் கண்ணாடி பாட்டில்களில் ஓவியம் வரைவதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாட்டில்களில் பல வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு மகளிர் சுய உதவி குழு சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் காருக்குறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சார்பில் சிறிய அளவிலான மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் பணியை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.
இது தவிர தேவர் குலத்தை சார்ந்த பொதுமக்கள் சார்பில் பனை பொருட்களான நார் பெட்டிகள், வண்ண மாலைகள் உள்ளிட்டவை தயார் செய்யும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
பத்தமடை பகுதியில் புகழ்பெற்ற கோரை பாய் தயாரிக்கும் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் கோரை புற்களைக் கொண்டு பாய் தயாரிக்கும் பணியில் பெண் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
இதுபோல ஐ.எஸ்.ஆர்.ஒ. சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ராக்கெட்டுகள், செயற்கை கோள்கள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு அதனை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் அதில் பயனாளிகள் அடைந்த நன்மைகள் குறித்த புகைப்பட கண்காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.
அதனையும் மாணவ மாணவிகள் பார்த்து தெரிந்து கொண்டனர். பழங்கால பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது.
- நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
- ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
நாளை காலை 10 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நீலகிரி முதலாவது புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கின்றனர்.
தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.
பப்பாசி குமரன் பதிப்பகத்தின் தலைவர் வயிரவன் அறிமுக உரையாற்றுகிறார். திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேச உள்ளார்.
மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் நாட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.
6-ந் தேதி எழுத்தாளர் இமயத்தின் வாழ்க்கைதான் இலக்கியம் சிறப்புரை, பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியும், பாபு நிஸாவின் கரோக்கி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
7-ந் தேதி திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதியின் சிறப்புரையும், பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமாரின் மழைத்துளிகள் சொல்லி சென்ற கதை குறித்து பேசுகிறார். இதுதவிர பெண்களுக்கு பெரிதும் மனநிறைவு தருவது குடும்ப பொறுப்பே, சமுதாய பொறுப்பே என்ற தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது.
9-ந் தேதி வரலாற்று நாவல் ஆசிரியர் ஸ்ரீமதி வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் குறித்து பேசுகிறார். மணிஹட்டி சிவாவின் படுகா நடனமும் நடக்கிறது. 10-ந் தேதி சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பூனையும், பாற்கடலும் குறித்து பேசுகிறார்.
தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித் தவர்கள் பங் கேற்று சிறப்புரை யாற்றுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
14-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
நாளை முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்குகிறது.
11 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, 1 மணிக்கு பட்டிமன்றங்கள் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
+2
- அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவி களுக்கு கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார்.
நெல்லை:
நெல்லை பொருநை 6-வது புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதா னத்தில் நடைபெற்று வருகிறது.
ஓவியம் வரையும் பயிற்சி
தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளும், பொது மக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கி றார்கள்.
10-வது நாளான இன்று அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்லூரி மாணவி களுக்கு கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
மரக்கன்றுகள்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இன்று புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் அவர் அங்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினார்.
புத்தக கண்காட்சியில் தொடர் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தினமும் ஒரு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
இன்று ராணி அண்ணா கல்லூரியை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு புத்த கங்களை வாசித்தனர்.
மேலும் தினமும் புத்தகங்கள் வெளியீடு, சிறப்பு கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மாலை சிந்துபூந்துறையை சேர்ந்த சண்முகம் என்பவர் எழுதிய நொங்கு வண்டி என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
நாளை நிறைவு பெறுகிறது
10 நாட்களாக நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி புத்தக கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள்.
- ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
- ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார்.
ஊட்டி
கடந்த 1819-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன் தற்போதுள்ள ஊட்டியை கட்டமைத்து, நவீனப்படுத்தி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினாா்.
இவா் ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சாா்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கலைத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
புத்தகத் திருவிழாவை நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடா்ந்து, 'ஊட்டி 200 என்ற லோகோவை' வெளியிட்டார். தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார். விழாவில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித்தவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். இதுதவிர கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.
இதில், ஜான் சல்லீவன் நவீன ஊட்டி உருவாக எடுத்த முயற்சி, நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், வனத் துறையின் மூலம் வன விலங்குகள் பாதுகாப்பது குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, நீலகிரி வரையாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கிய புத்தக திருவிழாவினை காண நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.
பொதுமக்கள், மாணவ, மாணவிகள், புத்தக பிரியர்கள் என அனைவரும் புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர்பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் தகவல்
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்து வருகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுநூலகத் துறையின் சார்பில் நேதாஜி மைதானத்தில் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கி ணைப்போடு 67 பதிப்பகங்களின் சார்பில் 104 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவில் அரங்குகள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.
மேலும், ஒவ்வொரு நாட்களிலும் பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பயன்படும் வகையில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சிறந்த பேச்சா ளர்களின் சொற்பொ ழிவுகள், பட்டிமன்றம் மற்றும் அறிவு சார்ந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இன்றுடன் நிறைவடைய இருந்த புத்தகத் திருவிழா பொதுமக்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று வருகிற 12-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், மாணவ-மாணவியர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயனடையுமாறு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
- சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா-2023 கண்காட்சியை ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
நாள்தோறும் பல் வேறு தலைப்புகளில் பேச்சாளர்களை கொண்டு சிறப்புரைகள், பட்டிமன்றங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு ஸ்ரீமதி வரலாற்று நாவல் ஆசிரியர் வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் என்ற தலைப்பில் சிறப்புரையும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிம்மதி நிறைந்தது கிராம வாழ்க்கையா? நகர வாழ்க்கையா? என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மணிஹட்டி சிவாவின் படுகா நடனம் ஆகிய நிகழ்சிகளும் நடைபெற்றது.
இதில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வை யிட்டு, விருப்பமுள்ள புத்தகத்தினை தேர்வு செய்தனர்.
இதயைடுத்து இன்று நாஞ்சில்நாடன் சாகித்திய அகாடாமி விருது பெற்ற எழுத்தாளர் 'பூனையும் பாற்கடலும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார். பின்னர் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் 'காவல் பணியில் கடந்து வந்த தூரம்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்க உள்ளார். இதயைடுத்து ஊட்டி அரசு தொழில்நுட்பக்கல்லூரி மாணவ, மாணவிகள் வழங்கும் கலை நிகழ்சிகளும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
- மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடக்க உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் புத்தக திருவிழா ஆலோசனைக் கூட்டம் சேவை சங்கங்கள், தமிழ் சங்கங்கள், தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புக்கள், அரசுத்துறை அலுவலர்க–ளுடன் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு வாசிப்புத்திறனை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்டம் தோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 2 வரை புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது. இத்திருவிழா சிறப்பாக நடைபெற உங்களை சார்ந்த குடும்பங்கள், நண்பர்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதுகுறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்கள் ஒவ்வொருக்கும் பங்கு உள்ளது. பள்ளி மாணவர்களிடையே வசிப்பு திறன் மேன்படுத்தும் ஒன்றாக இந்த புத்தக திருவிழா அமையும். அரசு பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தக திருவிழாவில் உள்ளுர் கலைஞர்கள், புத்தக வெளியீட்டாளர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும். அனைத்து தரப்பினரும் புத்தக திருவிழா வெற்றி பெற பங்கெடுத்து கொள்ள வேண்டும்.
எதிர்கால சங்கதிகளிலிருந்து புதிய ஆளுமைகளை உருவாக்கும் நாற்றாங்களாக புத்தக திருவிழா அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒவ்வொருவரும் தன்முனைப்போடும், அர்பணிப்போடும் புத்தக கண்காட்சி நடத்த சீரோடும், சிறப்போடும் மாநில அளவில் பாராட்டக்கூடிய அளவில் அமைவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புத்தக திருவிழா லோகோவினை மாவட்ட கலெக்டர்.சாருஸ்ரீ வெளியிட்டார். இவ்ஆலோசனைக் கூட்டத்தில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தமிழ் சங்கம், விவசாயிகள் சங்கம், கல்லூரி முதல்வர்கள், அமைப்பு சாரா நிறுவனங்களின் பிரிதிநிதிகள், மற்றும் வர்த்தக சங்கம், அனைத்து தரப்பு பிரிதிநிதிகள், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
- புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தே தொடங்கியது.
- மாணவிகள், சுற்றுலா பயணிகள் புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும்.
ஊட்டி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் "முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி தொடங்கி வைத்தார்.
இன்று வரை நடைபெற்று வரும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சங்களாக மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்ப டுத்தப்பட்டதை உள்ளுர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இப்புத்தக திருவிழா இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கோரிக்கை களை ஏற்று நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழா கண்காட்சி அரங்குகள் மட்டும் வருகிற 19-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
- ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
- புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.
தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், சொற் பொழிவுகள், பட்டி மன்றம், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
10-ம் நாளான நேற்று சிந்தனை கவிஞர் கவிதாசன், வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான மல்லூரி தமிழ் எங்கள் ஞானச்செருக்கு என்ற தலைப்பிலும் பேசினார்கள்.
புத்தக கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பார்வை யிட்டு வருகிறார்கள். மேலும் தங்களுக்கு விருப்பமான புத்த கங்களையும் தேர்வு செய்து வாங்கிச் செல்கிறார்கள்.
கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுள்ளன. சுமார் 24 ஆயிரத்து 95 பார்வையாளர்கள் பார்வை யிட்டு உள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மாவட்ட கருவூல அலுவலர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.