என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy"

    • சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தான்.
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் அவன் பரிதாபமாக இறந்தான்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் அரசு பள்ளி ஒன்றில் 13 வயது சிறுவன் ஒருவன் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளான்.

    சம்பவத்தன்று அவன் தனது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தான். உடனே அவனை சாத்தான்குளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில் நேற்றிரவு அவன் பரிதாபமாக இறந்தான்.

    இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தின்னரை தண்ணீர் என நினைத்து தவறுத லாக எடுத்து குடித்தானா? அல்லது தற்கொலை செய்யும் நோக்கத்தில் குடித்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்லதுரை எனக்கும் ஷாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி மறுத்ததாக தெரிகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல். அவரது மகள் ஷாலினி (வயது 20) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஷாலினி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு செல்லதுரை எனக்கும் ஷாலினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கடந்த மாதம் ஷாலினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லது ரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நி லையில் ஷாலினிக்கு கடந்த 38 நாட்களுக்கு முன்பு யாஸ்வின் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக சளி இருந்து வந்ததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் குழந்தை இறந்து போனது. இது குறித்து விளம்பார் கிராம நிர்வாக அலுவலர் அலமு கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார்.

     பல்லடம் : 

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில் வசிப்பவர் அந்தோணி,(வயது 40), பெயிண்டர்.நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி புஷ்பா, மற்றும் மகளையும், மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது சிறுவனான இவரது மகன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து அந்தோணியை வெட்டியதாக கூறப்படுகிறது .இதில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்தோணி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில்,இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை.
    • 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவியை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட பள்ளி மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
    • உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

    தாமம்:

    மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

    தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். 

    • திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
    • தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா கருக்கையைச் சேர்ந்தவர் மணி இவரது மனைவி மீனா (வயது 30) நிறை மாத கர்ப்பிணி. இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு 7 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அப்போது செம்மேடு அருகே வந்தபோது திடீரென பிரசவ வலி அதிகமானதால் ஓட்டுநர் சரவணன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்ஸ் அவசர கால ஊழியர் ஆம்புலன்ஸில் மீனாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில் மீனாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து தாயும் சேயும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் செல்வேந்திரன் (வயது35). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமங்கலம் தெற்குதெருவை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிறுமி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் திருமங்கலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி செல்வேந்திரன் புகார் கொடுத்தார். இது குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்திய போது செல்வேந்திரனுக்கு திருமணம் நடந்தபோது மணமகள் 15 வயது சிறுமியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நலஅலுவலர் காமு இந்தக் குழந்தை திருமணம் தொடர்பாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செல்வேந்திரன் மீது போக்சோ சட்டத்திலும் மற்றும் அவரது தந்தை முத்துகழுவன், தாய் சத்யபாமா மற்றும் சிறுமியின் உறவினர்கள் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூன்றுமாத ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது.
    • நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லுார் காசிபாளையம் ரோட்டில், அணைப்பள்ளி அருகே உள்ள காட்டுப் பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சிலர் சென்று பார்த்தபோது அங்கு மூன்றுமாத ஆண் குழந்தை கேட்பாரற்று கிடந்தது. குழந்தையை மீண்டும் பொதுமக்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் ஆண் குழந்தையை வீசி சென்றது யார் எதற்காக வீசி சென்றார்கள் என நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு அலுவல ர்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக குழந்தைகள் நல அதிகா ரிகள் கூறியிருப்பதாவது:-

    குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், 30 நாட்களுக்குள் நேரில் அணுகி பெற்றக்கொ ள்ளலாம்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (0421 2971198), குழந்தைகள் நலக்குழு தலைவர் (0421 2424416), கோவை மாவட்டம் பொள்ளாச்சி சிங்காரம்பா ளையம் பிரிவில் உள்ள சரணாலயம், குழந்தைகள் தத்து மையத்தை, 90039 61966, 73738 48341 என்ற எண்களில் தொடர்புகொ ள்ளலாம்.பொதுமக்கள் யாரும் தொடர்பு கொள்ளாதபட்சத்தில், சட்டப்படி தத்து கொடுக்க ப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • 15 அடி உயரத்தில் இருந்து அவன் திடீரென தவறி தலைகுப்புற விழுந்தான்.
    • மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் மீனாம்பாள்புரத்தில் வசித்து வரும் 11 வயது சிறுவன் முகேஷ் சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    தந்தையை இழந்த நிலையில் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த முகேஷ் வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டு காற்றாடியை பறக்கவிட்டான். அப்போது 15 அடி உயரத்தில் இருந்து அவன் திடீரென தவறி தலைகுப்புற விழுந்தான்.

    இதில் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தாடை கிழிந்து தொங்கி ரத்தம் வழிந்தோடியது. இதையடுத்து சிறுவனின் சித்தப்பா சசிகுமார் உடனடியாக முகேசை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு 8 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மளிகை கடையின் முன்பு அவர்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர்.
    • அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில், கோவை -திருச்சி தேசிய நெடு ஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த மளிகை கடையின் முன்பு அவர்களது மோ ட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவ த்தன்று சுமார் 3 மணியளவில் கடைக்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடையில் குளிர்பானம் வாங்கி குடித்ததுடன், கடை யின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு திருடி சென்றார். இந்தநிலையில் கடையின் உரிமையாளர் வெளியில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் காணாததை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உடனடியாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த அந்த சிறுவன் மோட்டார் சைக்கி ளை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

    இது குறித்து அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கி ளைத் திருடி சென்ற சிறுவன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மானுப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் தம்புராஜ் (வயது 22) .கூலி தொழி லாளியான இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். மாணவி மாயமானதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தம்புராஜ் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தம்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×