என் மலர்
நீங்கள் தேடியது "bullying"
- ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார்.
- ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி தொட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 28). புவனகிரி சூர்யா மங்களம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (27). இவர்கள் 2 பேரும் கடலூர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயக்குமார் சுஜாதாவிடம் தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்தார். இதனால் சுஜாதா ஜெயக்குமாரிடம் போனில் பேச வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார் சுஜாதாவிடம் சென்று என்னிடம் பேச வேண்டும் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சுஜாதா கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே கொடுக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி நந்தினி (வயது 23). சம்பவத்தன்று நந்தினியை இவரது மாமியார் அஞ்சம்மாள் மற்றும் உறவினர்கள் திடீரென்று வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து நந்தினி நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சம்மாள் (55), வாசுகி, திருமகள் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
திருச்சி,
திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் சுந்தரம். இவரது மனைவி பாத்திமா ரோஸ்லி ராஜு (வயது 72). இவர் திருச்சி யூனியன் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.இவரிடம் திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மளிகை கடையை மேம்படுத்த ரூ. 12 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார். அதன் பிறகு பாத்திமா அந்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் இழுத்தடித்து வந்தார். பின்னர் சமீபத்தில் ஜெய்சங்கர் ரூ 3லட்சத்து 15 ஆயிரம் பணத்தை திரும்பி கொடுத்துவிட்டார். மீதிபணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கடன் தொகையை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் பாத்திமா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து பாத்திமா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த எம். புதூர் பகுதியில் செம்மண் குவாரிக்கு லை அமைப்பதற்காக தனியார் கம்பெனி ஊழியர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பணிகள் மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு பூங்கொடி என்பவர் இடத்தில் இருந்த முந்திரி மரங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூங்கொடி சம்பந்தப்பட்ட ஊழியரிடம் சென்று கேட்டார். அப்போது பூங்கொடிையஅந்த ஊழியர் மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் தனியார் கம்பெனி மேலாளர் டெல்லி பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி பா.ஜ.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் பெண் போலீஸ் மீது வழக்கு
- இரு குடும்பத்தினரிடையே ஏற்கனவே குடும்பதகராறு இருந்து வந்துள்ளது
ராம்ஜிநகர்,
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள மட்டப்பாறைப்பட்டி வைகை நகரை சேர்ந்தவர் கிருஷ்ணராவ் (வயது 40). இவர் 58-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார். இவரது மனைவி தேவிகா (39). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் குழந்தைவேல். இவரது மனைவி அன்பு மலர். இவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார்.இந்த இரண்டு குடும்பத்திற்குமிடையே ஏற்கனவே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைவேல், கிருஷ்ணராவ் வீட்டு படுக்கையறையை நோட்டமிடும்படி தனது வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்தினாராம். தொடர்ந்து கிருஷ்ணராவின் காம்பவுண்ட் சுவரை குழந்தைவேல் இடித்து இருக்கிறார். இதனை பார்த்த கிருஷ்ணராவும், தேவிகாவும் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த குழந்தைவேல் - அன்பு மலர் தம்பதி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தேவிகா மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் குழந்தைவேல் மற்றும் இவரது மனைவி அன்பு மலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
- சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
- இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த காவிரி கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை காணவில்லை என்று அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின்மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை சிவகுமார் திடீரென காவேரி கிராஸ் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறினார். ஆடுகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்.
மேலும் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் விரைந்து வந்து சிவகுமாரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அவர் மறுத்ததால் மேட்டூர் தீயணைப்பு படையினரை வரவழைத்து கீழே இறங்க செய்தனர்.
இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிவகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆபாச படங்களை வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு, மிரட்டல்
- ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த முன்னாள் காதலனுக்கு, போலீசார் வலைவீச்சு
திருச்சி,
திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 22). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் கடந்த சில ஆண்டுகளாக தியாகராஜன் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவருடன் பேசுவதை, பழகுவதை நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் பிருந்தாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட தியாகராஜன் நீ இப்போது வரவில்லை என்றால் உன்னுடைய ஆபாச போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன். ரூ. 5 லட்சம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிருந்தா பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து தியாகராஜனை தேடி வருகிறார்.
- இலையூர் கிராமத்தில் மது குடிப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் பணத்தை பறித்து சென்றார்
- குடிப்பதற்காக பணம் பறித்து சென்ற வாலிபர் கைது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் கும்பகோணம் சாலையில் உள்ள புறவழிச்சாலை மேம்பாலம் அருகே இலையூர் கிராமத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவர் அவரது நண்பர்களுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாகனத்தில் வந்த ஒரு வாலிபர், மது குடிப்பதற்கு பணம் கேட்டு கத்தியை காட்டி சூரியபிரகாஷை மிரட்டியுள்ளார். மேலும் பணம் தர மறுத்த சூரியபிரகாஷை தாக்கி, அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றார். இதனால் சூரியபிரகாஷ் சத்தம் போட்டார். அதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த பஜருல்லா மகன் முகமது யாசிக் (20) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி மணப்பாறையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
- புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை நல்லாம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலராக கணபதி ராஜ் உள்ளார். இவரின் அலுவலகத்திற்கு வந்த வீ.பூசாரி பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் வீரசங்கர் என்பவர், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து உள்ளார். முனியப்பன் இறந்து விட்டதாக கூறி, வாரிசு சான்றிதழ் கொடுத்து வீரசங்கரின் அண்ணன் விண்ணப்பித்து உள்ளது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கணபதி ராஜ் எடுத்து கூறி உள்ளார். இதனை ஏற்க மறுத்த வீரசங்கர், கிராம நிர்வாக அலுவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் கண்டிக்கவே வீரசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கணபதிராஜ் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மின் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது
- போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தேவாமங்கலம் கிராமம் காந்திநகர் கந்தசாமி மகன் சின்னராஜா(வயது 36). இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் அவர் வீட்டுக்கு அருகே உள்ள உயர் மின்னழுத்த டவர் மீது ஏறிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக அந்தப் பகுதியில் உள்ளவர்களை மிரட்டி சத்தம் போட்டு உள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் உள்ளிட்டோர் அங்கு வந்து, டவர் மீது ஏறி அவரிடம் சமாதானம் பேசி கீழே இறங்க செய்தனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- அரியலூரில் கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
- கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்கு, அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மகன் பிரேம்ராஜ் (32) என்பவர் வந்து தகராறு செய்துள்ளார். அதை தட்டிக்கேட்ட தம்பதியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
- கொலை மிரட்டர் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்
திருச்சி,
திருவானைக்காவல் மணல்மேடு ஐந்தாம் பிரகாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 27). கடந்த 26.10.2000ம் ஆண்டு சத்யாவின் தந்தை முருகனை திருவனைக்காவல் மேலகொண்டையம் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சச்சிதானந்தம் (வயது 25) என்பவர் கொலை செய்துவிட்டார்.இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சத்யா ஸ்ரீரங்கம் சன்னதி வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது சச்சிதானந்தம் சத்யாவை தடுத்து நிறுத்தி கத்தியைச் காட்டி மிரட்டி தந்தை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.இது குறித்து சத்யா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.