என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "burned"
- திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
- சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அடுத்த அணைக்கரை மதுசா லையில் வசிப்பவர் பாஸ்கர் (வயது 40) விவசாயி. இவர் தனது வீட்டின் வளர்க்கும் மாடுகள், கன்றுகளுக்காக வயலில் அறுவடை செய்த வைக்கோலை சுமார் 100 கட்டுக்கும் மேலாக அடுக்கி வைத்து போராக அமைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவி டைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வின்சென்ட் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் குப்பை களை கொளுத்தி யதால் காற்றில் தீ பரவியதில் வைக்கோல் போர் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரூ.20 ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
- ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 14-வது வார்டு மேட்டு தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள 5 குடிசை வீடுகளில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து, ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்ளாகவே 5 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகின. வீடுகளில் இருந்த பீரோ, நகை, பணம், டிவி, மிக்சி உள்பட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், பல்வேறு ஆவணங்களும் தீயில் கருகின.
வீடுகளில் பிடித்த தீ, அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலிலும் பரவியது. இதில் பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது. விசாரணையில், உசேன் என்பவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டதால் இந்த தீ பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
விபத்து குறித்து தகவல் அறிந்து ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் நகர மன்ற தலைவி நிர்மலா பபிதா ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுளையும் செய்தனர்.
பின்னர், ஆத்தூர் நகர தி.மு.க செயலாளர் பாலசுப்பிரமணியம் வழி காட்டுதலின்படி, ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கான வசதியும், தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
- அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
- இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:
பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம் பாளையம் கற்பூர காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமாரி (32), சாந்தாமணி (40), பத்மாவதி (40) இவர்கள் 3 பேரும் கூலித் தொழிலாளர்கள். நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு விவசாய தோட்ட வேலைக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் முத்துக்குமாரியின் வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அருகில் இருந்த சாந்தாமணி மற்றும் பத்மாவதி வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் முத்துக்குமாரி வீட்டில் உள்ள வீட்டுச் சாமான்கள், சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் சாந்தாமணி வீட்டில் இருந்த மற்ற கட்டில், பீரோ மற்றும் ஒரு வெள்ளாடு, மொபட், பத்மாவதி வீட்டில் இருந்த வீட்டுச் சாமான்கள், அரை பவுன் தங்க கம்மல், பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த நகரை சேர்ந்த நஸ்ரத் ஜகான் ரபி (வயது 19) என்ற இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை அவரது அறைக்கு அழைத்து தவறான எண்ணத்தில் தொட்டு பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக நஸ்ரத் ஜகான் ரபி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமை ஆசிரியரை கைது செய்தனர். இதையடுத்து அந்த பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து, தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நஸ்ரத் ஜகான் ரபி பொய் புகார் அளித்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த 11 நாட்களுக்கு பிறகு தேர்வு எழுதுவதற்காக நஸ்ரத் ஜகான் ரபி பள்ளிக்கு சென்றார். அப்போது, அவரின் தோழி ஒருவர், அவரை பள்ளிக்கூடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றார்.
அங்கு பர்தா அணிந்திருந்த 5 பேர் நஸ்ரத் ஜகான் ரபியை சூழ்ந்துகொண்டு தலைமை ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். அதனை ஏற்க மறுத்ததால் அவர் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து, பரிதாபமாக இறந்தார்.
இந்த விவகாரம் வங்காளதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Bangladesh #StudentBurned
புதுச்சேரி:
புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள் (வயது55). குப்புராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூனிமேட்டை சேர்ந்த முருகம்மாளின் உறவினர் பெர்னேஷ் (34) என்பவர் முருகம்மாள் வீட்டில் தங்கி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு முருகம்மாள் சாப்பிட்டு விட்டு வீட்டின் வாரண்டாவில் தூங்கினார். பெர்னேஷ் வீட்டின் அறையில் தூங்கினார். இன்று காலை முருகம்மாள் டி.வி. நிகழ்ச்சியை பார்க்க சுவீட்சை போட்டார். அப்போது டி.வி. வெடித்து சிதறி வீட்டில் தீப்பிடித்தது.
இதில் முருகம்மாளும், பெர்னேசும் தீயில் உடல் கருகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைபெறும் இருவரையும் பார்த்துவிட்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பிரபல தனியார் நிறுவன ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியில் உள்ள ஏர்கண்டிஷன் எந்திரத்தில் புகை வந்தது. இதை பின்னால் வந்த ஒரு வாகன டிரைவர் கண்டுபிடித்து ஆம்னி பஸ்சின் டிரைவர் மாதேஸ்வரனிடம் கூறினார். உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரமாக நிறுத்திவிட்டார். ஆஞ்சநேயர் கோவில் குழாயில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து அதில் டிரைவர் ஊற்றினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 36 பேரையும் கீழே இறக்கி மாற்று பஸ்களில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்.
பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் எரிய காரணம் என்ன? என்று பஸ்சின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நடந்தபோது பயணிகள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை எழுப்பி விட்டதால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். மேலும் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்திவிட்டதால் மேலும் வாகனங்கள் எரிவதும் தடுக்கப்பட்டது.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே மலைப்பாதையில் தேங்காய் எண்ணெய் லாரிக்கு டிரைவர் தீவைத்தார். அந்த லாரி பின்னோக்கி வந்தபோது இன்னொரு கியாஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் எரிந்து சேதமாகின. நல்லவேளை தனியார் ஆம்னி பஸ் எரிந்தபோது அங்கிருந்த பொதுமக்களின் உதவியால் பெரிய அளவில் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தினால் அந்த பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. #Omnibus #Fireaccident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்