என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bus service"
- முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
- வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில், குலு- மணாலி மற்றும் கீலாங் இடையே இமாச்சலப் பிரதேசம் சாலைவழி போக்குவரத்து கழகம் (HRTC) கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்துகள் சேவையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குலு மற்றும் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டங்களில் பனிப்பொழிவைத் தொடர்ந்து இமாச்சல் சாலைவழி போக்குவரத்துக் கழகம் சேவைளை நிறுத்தியது.
இந்நிலையில், இன்று முதல் சேவை மீண்டும் தொடங்கியது. முதல் பேருந்து காலை 7.15 மணிக்கு குலுவில் இருந்து புறப்பட்டு மதியம் கீலாங்கை சென்றடைகிறது.
முன்னதாக, பனிப்பொழிவுக்கு பிறகு மே மாதத்தில் தான் சேவை மீண்டும் தொடங்கும். கடந்த, 2019-ல் ரோஹ்தாங்கில் அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பனிப்பொழிவு பகுதிக்கான பேருந்து சேவைகள் மீட்டமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று எச்ஆர்டிசி நிர்வாக இயக்குனர் ரோஹன் சந்த் தாக்கூர் தெரிவித்தார்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிகரமான சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு சேவையை மீண்டும் தொடங்க முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10 பேருந்துகளுடன் தொடங்கி பின்பு எண்ணிக்கையை 60-ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது
- ஊபர் செயலி மூலமாக பேருந்து குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள முடியும்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனம் ஊபர் டெக்னாலஜிஸ். பொதுமக்களுக்கு எளிமையான முறையில், குறைந்த கட்டணத்தில் வாகன போக்குவரத்து, உணவு வினியோகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் சேவைகளை வழங்குவதில் உலகெங்கும் பல நாடுகளில் ஊபர், பிரபலமாக விளங்குகிறது.
இந்நிலையில் ஊபர், மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில், அலுவலகம் செல்லும் மக்களுக்காக பேருந்து சேவையை தொடங்க போவதாக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பயண தடங்களின் வழியாக, நகரில் அதிக மக்கள் வசிக்கும் இடங்களை, மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்க உள்ளது.
தொடக்க நிலையில் 10 பேருந்துகளுடன் இயங்க உள்ள இந்த சேவையில், அடுத்த வருட மார்ச் மாதம் 60 ஏர்கண்டிஷன் வசதி உடைய பேருந்துகள் வரை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்த பேருந்துகளில் 19லிருந்து 50 வரை பயணிகள் பயணம் செய்யலாம்.
மேற்கு வங்கத்தில் சுமார் ரூ.84 கோடி ($10 மில்லியன்) முதலீடு செய்ய போவதாகவும், இதன் மூலம் அங்கு அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் ஊபர் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன், மேற்கு வங்க அரசு, அம்மாநிலத்தில் தொழில்துறையில் முதலீடு செய்வதற்கு பல அயல்நாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அவர்கள் பங்கேற்ற மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு (Bengal Global Business Summit) எனும் கூட்டம், மேற்கு வங்க அரசால் நடத்தப்பட்டது. அந்த சந்திப்பில் மேற்கு வங்க போக்குவரத்து துறையுடன், ஊபர் நிறுவனம், பேருந்து சேவைக்காக ஒப்பந்தம் புரிந்தது.
ஊபர் நிறுவனத்தின் பேருந்து சேவையில் ஊபர் செயலி மூலம், பயணிகள் ஒரு வாரம் முன்னதாகவே இருக்கைகளை பதிவு செய்து கொள்ளவும், பேருந்து செல்லும் வழித்தடத்தை மொபைல் மூலம் அறிந்து கொள்ளவும், சென்று சேருமிடத்திற்கான பயண நேரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளவும் முடியும்.
பயணிகளுக்கு டிஜிட்டல் பண பரிமாற்றம், 24 மணி நேர பாதுகாப்பு, வசதியான இருக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய சேவைகள் இதில் வழங்கப்பட உள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் பெருகி வரும் மக்களின் பயண தேவைகளை எதிர்கொள்ள இது போன்ற சேவைகள் வருவதை வரவேற்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர்.
- பஸ் சேவையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பொதுமக்கள், மாணவர்கள் பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் இருந்து குளத்தூர் வழியாக முத்துக்குமாரபுரம் வரை விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சில் குளத்தூர் பகுதியில் இருந்து அதிகளவிலான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
விளாத்திகுளம் - முத்துக்குமாரபுரம் வழித்தடத்தில் மட்டுமே சென்று வரும் இந்த பஸ்சை கூடுதலாக வீரபாண்டிய புரம், டி.சுப்பையாபுரம், முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்தால் இக்கிரா மங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீண்டநாட்களாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முத்துக்கு மாரபுரம் வரை மட்டுமே சென்று வந்த இப்பேருந்தை வீரபாண்டியபுரம், டி.சுப்பையாபுரம் வழியாக முத்துராமலிங்கபுரம் வரை நீட்டிப்பு செய்து பஸ்சை இயக்க உத்தரவிட்டு கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் கூடுதல் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் சேவையை முன்னிட்டு பஸ்சுக்கு மாலை, வாழை மரங்கள் கட்டி பட்டாசுகள் வெடித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார் ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெகநாதன், குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பு ராஜன், மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, நடராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன் செந்தூர்பாண்டி, குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் மாலதி செல்ல பாண்டி, வீரபாண்டியபுரம் ஊராட்சிமன்ற தலைவர் லெக்கமாள் தேவி, வேம்பார் தெற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆரோக்கியராஜ், நெடுங்குளம் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயலட்சுமி, டி. சுப்பையாபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ராமசுப்பு, வைப்பார் ஊராட்சிமன்ற தலைவர் ராமர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய சிறுபான்மையினர் அணி செல்வின் ஒன்றிய இலக்கிய அணி மாரியப்பன், மாணவரணி அமைப்பாளர் முனியசாமி, கிளைச் செய லாளர்கள் மந்திரமூர்த்தி, முனிய சாமி, பொன்னு ச்சாமி, ரவிச்சந்திரன், பொன் மாரியம்மன், பரம சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புளியங்குடியில் இருந்து இதுநாள் வரையில் நேரடி பஸ் திருவனந்தபுரதிற்கு இருந்து இல்லை.
- திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் சேவையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புளியங்குடி:
புளியங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ,வியாபாரிகள் தினமும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சென்று வருகிறார்கள். இதுநாள் வரையில் நேரடி பஸ் திருவனந்தபுரதிற்கு இப்பகுதியில் இருந்து இல்லை. நேரடி பஸ்சை இயக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், வடக்கு மாவட்ட செயலாளாட ராஜாவிடம் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று வாசுதேவநல்லூரில் இருந்து புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு புதிய வழித்தடத்தில் நேரடி பஸ் சேவையை வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ராஜா, சதன் திருமலைகுமார் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன், நகர செயலாளர் அந்தோணிசாமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாசாணி அம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில், புதுப்பாளையம் கருப்பராயன் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு இரவு நேரம் பஸ் இயக்கப்படுவதில்லை. எனவே இரவு நேரம் பொள்ளாச்சி, உடுமலைக்கு பஸ் இயக்கினால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். எனவே தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் உடுமலைக்கு இரவு நேரம் பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இஸ்லாமி–யர்களின் புனித தலமாகவும் விளங்குவது ஆத்தங்கரை பள்ளிவாசல்.
இப்பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாரந்தோறும் சுற்றுலா பயணமாகவும், நேர்த்திக்கடன்கள் செலுத்து–வதற்காகவும் வருவது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள் தனி கார் மூலமாகவோ அல்லது நாகர்கோவில், நெல்லை போன்ற பகுதிகளுக்கு வரும் பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்தாக மாறி வாழும் சூழ்நிலை இருந்து வந்தது.
நேரடியாக கேரளாவில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்தது.
சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கவனத்தை கருத்தில் கொண்டு கேரள அரசு கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியிலிருந்து கொல்லம், திருவனந்த–புரம், களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில், சுசீந்திரம், கூடங்குளம் வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வரும் வகையில் புதிய பேருந்து வசதியை தொடங்கியுள்ளது.
இப்பேருந்து கேரளாவில் இருந்து காலை 5. 20 மணிக்கு புறப்பட்டு 12.10மணிக்கு ஆத்தங்கரை பள்ளிவாசலை வந்தடைகிறது.
மீண்டும் இப்பேருந்து மதியம் 3.10 மணிக்கு ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு இரவு 9. 55 மணிக்கு கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியை சென்றடைகிறது.
தமிழகத்தின் சுற்றுலா தளத்திற்கு நேரடியாக வரும் வகையில் கேரளா அரசின் பேருந்து சேவைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
- திருச்செந்தூரில் இருந்து தென்திருப்பேரை வரை ஏரல், குரங்கணி வழியாக தினமும் 4 தடவை தென்திருப்பேரை வரை வந்து செல்லும் அரசு பஸ் இரவு 9 மணிக்கு இரவில் தென்திருப்பேரையில் தங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.
- கடையனோடைக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் வந்த பஸ்சை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி மாவட்ட பிரதிநிதி சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தென்திருப்பேரை:
திருச்செந்தூரில் இருந்து தென்திருப்பேரை வரை ஏரல், குரங்கணி வழியாக தினமும் 4 தடவை தென்திருப்பேரை வரை வந்து செல்லும் அரசு பஸ் இரவு 9 மணிக்கு இரவில் தென்திருப்பேரையில் தங்கி அடுத்த நாள் காலை 6 மணிக்கு திருச்செந்தூர் புறப்பட்டு செல்லும்.
இந்த பஸ் நேற்று முதல் கடையனோடை ஊராட்சி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கடையனோடை உலகம்மன் கோவிலின் முன்புறம் இரவு 9.30 மணியளவில் வந்து தங்கி அடுத்த நாள் அதிகாலையில் 5.30 மணியளவில் கடையனோடையில் இருந்து புறப்பட்டு தென்திருப்பேரை, குரங்கனி, ஏரல், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் வழி மார்க்கமாக திருச்செந்தூர் சென்றடையந்தது.
கடையனோடைக்கு நேற்று இரவு 9.15 மணியளவில் வந்த பஸ்சை பஞ்சாயத்து தலைவர் பூல்பாண்டி மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன் வார்டு உறுப்பினர் பசுங்கிளிராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து டிரைவர், கண்டக்டர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
- நவ்வலடியில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
- மாணவர்களை ஏற்றிவந்த பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
திசையன்விளை:
நவ்வலடி தட்சணமாற நாடார் சங்க சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வசதிக்காக திசையன்விளை - கூடங்குளம் மகளிர் இலவச பயண பஸ்சை சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி வரை சிறப்பு அனுமதியுடன் நீடித்து தரவேண்டும் என நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ். போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று நவ்வலடியில் இருந்து ஒரு கி.மீ.தூரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிவந்த பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் நல்வலடி சரவணகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
- மேற்கு வங்க அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேஷுக்கு பேருந்து சேவையையும் திட்டமிடப்பட்டுள்ளது.
வட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு இடையே பேருந்து சேவை கொடியசைத்து தொடங்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பயனளிக்கும் என்றும் இது இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், சந்திப்பு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
வடக்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இந்த பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 மற்றும் நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பஸ் டெர்மினஸில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
40 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து சிலிகுரியில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் மாலை 3 மணிக்கு புறப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும், மேற்கு வங்க அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேஷுக்கு பேருந்து சேவையையும் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பலத்த கனமழை விட்டு விட்டு பெய்து வருவதால் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது.
மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக 3000 மாநகர பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று 2500-க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் இல்லாததால் காலியாக ஓடின. ஒரு சில வழித்தடங்களில் மட்டுமே பயணிகள் அதிகளவு பயணித்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் வெளியே வரவில்லை. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே வெளியில் காணப்பட்டனர்.
குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிறுத்தங்களிலும், பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர். வழக்கமான கால நேரப்படி பஸ்கள் இயக்கப்படவில்லை.
ஒரு பஸ்சில் பயணிகள் ஓரளவு அமர்ந்த பிறகுதான் அடுத்த பஸ் இயக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு பஸ்சிற்கும் இடைப்பட்ட நேரம் அதிகமானது.
பஸ் நிறுத்தங்களில் 30 நிமிடத்திற்கு மேலாக பயணிகள் காத்து நின்றனர். மாநகர பஸ் சேவை குறைக்கப்பட்டபோதும் மின்சார ரெயில் சேவை குறைக்கப்படவில்லை. முழு அளவில் இயக்கப்பட்டன.
4 மார்க்கங்களிலும் 670 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில்களிலும் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.
இந்தியாவின் பகைநாடான பாகிஸ்தான் மீது சீனா அளவுகடந்த பாசத்தை பொழிந்து, அக்கறை காட்டி வருகிறது.
சீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை ஒட்டி பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை சீனாவில் தன்னாட்சி உரிமைபெற்ற உய்குர் பகுதியுடன் இணைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் ஆகியவற்றின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம். இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணம் 13 ஆயிரம் ரூபாயாகவும், இருவழி (சென்று, திரும்ப) கட்டணம் 23 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதி தற்போது வரை இல்லை. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக இந்த பஸ் சென்றுவரும். வாரத்தில் 4 நாட்கள் இந்த பஸ் போக்குவரத்து நடைபெறும் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistantoChina #PakistantoChinaBusservice
மாவட்டத்தில் ‘சிட்டி எக்ஸ்பிரஸ்‘ ‘எல்.எஸ்.எஸ்.‘ என்ற பெயர்களில் இயக்கப்படும் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால் பலர் இந்த பஸ்களை புறக்கணித்து கூட்டம் அதிகமாக இருந்தாலும் தனியார் பஸ்களை நாடும் நிலை உள்ளது. கட்டண கொள்ளை குறித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விளக்கம் கேட்டிருந்தார்.
அதற்கு வட்டார போக்கு வரத்து அதிகாரி அளித்திருந்த பதிலில், ‘சிட்டி எக்ஸ்பிரஸ்‘, ‘எல்.எஸ்.எஸ்.‘ என்ற பெயரில் பஸ்கள் இயக்க அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. ஆனாலும் இந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் வழித்தடத்தில் ‘சிட்டி எக்ஸ் பிரஸ்‘ என்கிற பெயரில் ரூ. 17- க்கு பதிலாக ரூ. 24 கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்திட கோரி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
இணை அமைப்பாளர் பிச்சைக்கனி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் அழகு ஜோதி முன்னிலையில் மாவட்ட அமைப்பாளர் சாராள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மகாலட்சுமி முடித்து வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி, மாதர் சங்க முன்னாள் தலைவர் ரேணுகாதேவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலர் ஜெயகுமார், ஒன்றிய செயலர் சசிகுமார், வீர சதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கையெழுத்து வாங்கிய மனு கொடுக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்