என் மலர்
நீங்கள் தேடியது "candidate"
- வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக செயலாளாற்றினார்.
- சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இவர் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போது இருந்த வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் தி.மு.க. மாவட்ட அவை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சோம.நடேசமணி, சோம.செந்தமிழ்செல்வன் என்ற இரண்டு மகன்களும் மற்றும் ராணி சேகர் என்ற மகளும் உள்ளனர்.
இதில் சோம.செந்தமிழ்செல்வன் நீடாமங்கலம் பெருந்தலை வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
- இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து நேற்று இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் பல குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக இருப்பது மதுப்பழக்கம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது. ஒரே நாடு என்றால் ஏன் காவிரியிலும், முல்லை பெரியாரிலும் தண்ணீர் தர மறுக்கிறார்கள்.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தி.மு.க. அரசியல் கட்சி கிடையாது. அது ஒரு குடும்ப சொத்து. கள்ளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் சாராய ஆலைகள் முடங்கிவிடும் என்பதால் கள்ளுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்கிறேன்.
2024-ம் தேர்தலில் வென்று மீண்டும் மோடி வந்தால் இந்தியாவே இருக்காது. காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் நாட்டை விற்பதில் போட்டி. இதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற சீமான், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்தார். இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் சுரேஷ் போட்டியிடுவார் என அவர் தெரிவித்தார்.
- வேட்பாளர் தேர்வு ரகசியமான முறையில் நடந்து வருகிறது.
- வரும் நாட்களில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டப்படும் என்று தெரிகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை இந்த தடவை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான நிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. 138 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த 2 பாராளுமன்ற தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
அதில் இருந்து கட்சியை மீட்டு புத்துணர்ச்சி கொடுக்க ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் இன்னமும் 100 சதவீத பலன் கிடைக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செயல்பாடு ராகுலுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மிகவும் அசட்டையாக இருந்ததாக ராகுல் கருதுகிறார். இதையடுத்து காங்கிரசில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரவும் பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தவும் ராகுல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.
அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் கடந்த 23-ந் தேதி நடந்தபோது ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதையடுத்து பாராளுமன்ற தோ்தலுக்கான பணிகளை எந்தவித தாமதமும் இல்லாமல் உடனடியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்ற தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா்களை விரைந்து இறுதி செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அதற்காக வேட்பாளா் பரிசீலனைக் குழு இம்மாதமே அமைக்கப்பட உள்ளது. தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ப.சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல மற்ற முக்கிய குழுக்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ராகுல் காந்தியை இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற் கொள்ளுமாறு செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனா். அதை ராகுல் பரிசீலிப்பதாக கூறி உள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதமே உள்ள நிலையில் பாத யாத்திரை சென்றால் பலன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ராகுல் மனதில் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் ராகுல் பாத யாத்திரை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேரதலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக 'இந்தியா' கூட்டணியை வலுவான அணியாக உருவாக்க தேவையான அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்து உள்ளனர். ஆனால் செல்வாக்கு உள்ள மாநில கட்சி தலைவர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துவது கஷ்டம் என்பதால் அந்த சிக்கலை தீர்ப்பது பற்றியும் ராகுல் ஆலோசித்து வருகிறார்.
பா.ஜனதா கட்சி தேர்தலை சந்திக்க முழுவீச்சில் தயாராகி விட்டதால் அதற்கு முன்னதாக அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும் என்பதில் ராகுல் உறுதியாக உள்ளார். அதன்படி முதல் கட்டமாக 250 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க அவர் முடிவு செய்துள்ளார்.
வேட்பாளர் தேர்வு ரகசியமான முறையில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட ராகுல் தீர்மானித்து இருக்கிறார்.
எனவே வரும் நாட்களில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டப்படும் என்று தெரிகிறது.
- தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தயாராகி வருகிறது. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. வெளியேறிவிட்ட நிலையில் பா.ஜனதா தனித்தே நிற்கிறது.
பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சிகள் நடந்தது. ஆனால் இந்த கட்சிகள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தேர்தலை சந்திப்பதற்கான அடுத்த கட்ட பணிகளை அண்ணாமலை தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தகுதியானவர்களை தேர்வு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சிக்காக உழைத்து மக்கள் மத்தியில் செல்வாக்குடனும், தொண்டர்கள் பின்புலத்துடனும் இருப்பவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேர் வீதம் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி மாவட்ட தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் பா.ஜனதா தலைவர் நட்டா தமிழகம் வருகிறார். அதற்குள் பட்டியலை தயார் செய்து அவரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதுரையில் பிரதமர் மோடியை தேனி எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். தேனி தொகுதியில் மீண்டும் போட்டியிடவும் அதற்கு பா.ஜனதா ஆதரவை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
- வெளி மாநிலத்தை சேர்ந்த யாரும் புதுவையில் போட்டியிடவில்லை.
- பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி உள்ளது.
தேர்தலில் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் குடியுரிமை பெற்று வாக்காளர் அட்டை வைத்துள்ளவர்கள் எந்த மாநிலத்திலும் போட்டியிடலாம். பிரதமர் மோடி குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டி யிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரளா மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதேபோல கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வேறு மாநிலத்தில் போட்டியிடுவார்கள்.
தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மோகன்குமாரமங்கலம் புதுவையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2004-ம் ஆண்டு பா.ஜனதா சார்பில் புதுவையில் லலிதா குமார மங்கலம் போட்டியிட்டார். அதன்பிறகு வெளி மாநிலத்தை சேர்ந்த யாரும் புதுவையில் போட்டி யிடவில்லை.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட அனுமதிப்பதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானமாக இருக்கின்றனர். புதுச்சேரியை சேர்ந்தவர்தான் எம்.பி.யாக வேண்டும் என உறுதியாக இருப்பர்.
இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவர்னர் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியானது.
அப்போதே உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பிருப்பதாக வெளியான தகவல் புதுவை பா.ஜனதா நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித்தலைமையிடம் புதுவையை சேர்ந்தவர்களே போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
- இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வடமேற்கு பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியான பஜார் பழங்குடியின மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளராக ரெஹான் ஜெப்கான் போட்டியிடுகிறார். இவருக்கு இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
ரெஹான் ஜெப்கான் சித்திக்காபாத் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ரெஹான் ஜெப்கான் மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் உடலில் குண்டுபாய்ந்து படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் வேட்பாளர் ரெஹான் ஜெப்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான்-இ-இன்சாப் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
- அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.
அவர் டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் உள்ளிட்டோரை தோற்கடித்தனர். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.
- பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
- தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆண்டுவிழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதல்- அமைச்சருமான ரங்கசாமி, இதனை அறிவித்தார். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பதில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது.
புதுச்சேரி பா.ஜனதா நிர்வாகிகள், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி பெறுவது எளிது என கட்சித்தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில் புதுச்சேரி அரசியலில் இருந்து தன்னை விலக்க கட்சியில் ஒரு சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நமச்சிவாயம் கருதுகிறார்.
அதோடு புதுச்சேரி அரசியலில் தொடரவும் அவர் விரும்புகிறார். இதனை கட்சித்தலைமையிடமும் தெரிவித்து, தான்போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் கட்சி யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவரை வெற்றி பெறச்செய்வது தனது பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ., மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஏற்கும் வேட்பாளரை அறிவிப்பது என பா.ஜனதா கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
இதற்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது பரிசீலனையில் உள்ள 4 பேரும் புதுச்சேரியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை. அதேநேரத்தில் வெளிமாநில வேட்பாளரை நிறுத்துவதற்கு முதல்-அமைச்சர் ரங்க சாமியும், புதுச்சேரி பா.ஜனதாவினரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் பா.ஜனதா வேட்பாளர் தேர்வில் தொடர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.
- புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் உள்ள பா.ஜனதா தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவரும், புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.
அதே நேரத்தில் உள்ளூர் அரசியலில் தொடர விரும்புவதால் அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். அதோடு கட்சி மேலிடத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற செய்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் கட்சி மேலிடம் அவரை வேட்பாளராக நிறுத்தத்தான் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பெயர்களும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆனால் புதுச்சேரியை சாராத இவர்கள் போட்டியிட்டால் எதிர்கட்சிகள் அதனை சாதகமாக வைத்து பிரசாரம் செய்வார்கள் என்பதால் பா.ஜனதா தலைமைக்கே தயக்கம் உள்ளது.
இதுதவிர பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமையின் முடிவுக்காக பா.ஜனதாவினர் காத்திருக்கின்றனர்.
இதே போல எதிர்கூட்டணியான இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.
ஆனால் ஏற்கனவே காங்கிரசின் சிட்டிங் சீட் என்பதால் தமிழகத்தில் தொகுதிகளை குறைத்தாலும், புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் போட்டியிடுவதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள வைத்தி லிங்கத்திற்கும், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் உள்ளது. ஏனெனில் 2026-ல் சட்ட மன்ற தேர்தல் வரும்போது, மீண்டும் தனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என விரும்புகிறார்.
இதனால் வெளிப்படையாக இதுவரை தான் எம்.பி. பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறவில்லை.
அதேநேரத்தில் காங்கிரசில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கூட்டணியில் தமிழகத்தில் பேச்சுவார்த்தை முடிந்து, புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் போதுதான் இதற்கு முடிவு கிடைக்கும்.
உள்ளூர் அரசியலில் ஈடுபட புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து விருப்பம் காட்டி வருவதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க. போட்டியிட்டால் 4 பிராந்தியத்துக்கும் அறிமுகமான புதுவை மாநில செயலாளர் அன்பழகன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் புதுவை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் களமிறக்கப் படலாம். ஏனெனில் பா.ம.க.வும் புதுவை தொகுதிக்கு குறி வைக்கிறது.
- வேட்பாளர்களின் பின்னணி மற்றும் உளவு த்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
- காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தெலுங்கானாவில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.
கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணு கோபால், அம்பிகா சோனி தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபதாஸ் முன்சி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கூட்டத்தில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்க உள்ளனர்.
வேட்பாளர்களின் பின்னணி மற்றும் உளவு த்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத், செவெல்லா, மஹபூபாபாத் நகர், நாகர் கர்னூல், கரீம் நகர், நிஜாமாபாத் ஆகிய இடங்களுக்கு வேட்பாளர்கள் தேர்வில் ஏற்கனவே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மீதமுள்ள தொகுதிகளுக்கு பல்வேறு நிபந்தனைகனின் அடிப்படையில் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அல்லது நாளை வெளியிடப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாநிலத்தில் 14 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும் என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.
- கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
- வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.
புதுச்சேரி:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது.
கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அளவிலான தொகுதிகளை பெற காங்கிரஸ் கடும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும், புதுவை தொகுதியை பெற தனி கவனம் செலுத்தினர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் தி.மு.க. 6 தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.
இதன் மூலம் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக தி.மு.க. கருதுகிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தி வந்தது.
அதே நேரத்தில் காங்கிரசார் புதுச்சேரியை தங்களின் கோட்டை என நிரூபிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் புதுச்சேரி தொகுதியை பெறுவதில் தி.மு.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
சிட்டிங் தொகுதி என்ற முறையில் புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.
புதுச்சேரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். காங்கிரசில் வைத்திலிங்கம் எம்.பி. தவிர முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சீட் கேட்டு வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வேட்பாளர் யார்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆனால் சிட்டிங் எம்.பி. என்ற முறையில் கூடுதலான வாய்ப்புகளை வைத்திலிங்கமே பெற்றுள்ளார். இதனிடையே வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.
கிராமப்புறங்களில் கடந்த 10 ஆண்டுக்கு முன்புள்ள விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டு காங்கிரசுக்கு வாக்களிப்பீர் என கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கை சின்னத்தை வரைந்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.
- தொகுதிகளில் தி.மு.க. நடத்திய சர்வேயில் தற்போதைய எம்.பி.க்கள் செயல்பாட்டால் மக்களிடம் திருப்தி இல்லை.
- தற்போதைய எம்.பி.க்களின் நெருக்கடிகளால் எந்த தொகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவிக்கிறார்கள்.
சென்னை:
ஏதோ ஒரு வழியாக எண்ணிக்கை குறையாமல் தொகுதிகளை பெற்று விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட காங்கிரசுக்கு அடுத்த பிரச்சினை கழுத்தை நெரிக்கிறது.
தமிழகத்தில் 9 புதுவை-1 என 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இனி எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், சிவகங்கை, தேனி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதில் திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளையும் மீண்டும் ஒதுக்க தி.மு.க. தயங்குகிறது. அதற்கு காரணம் இந்த தொகுதிகளில் தி.மு.க. நடத்திய சர்வேயில் தற்போதைய எம்.பி.க்கள் செயல்பாட்ல் மக்களிடம் திருப்தி இல்லை. அவர்களுக்கே மீண்டும் வாய்ப்பளித்தால் வெற்றி பெறுவது கடினம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சர்வே அறிக்கையை காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்து மாற்று வழியை ஆராயும்படி தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போதைய எம்.பி.க்களின் நெருக்கடிகளால் எந்த தொகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவிக்கிறார்கள்.
கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ம.தி.மு.க.வுடன் பேசவேண்டும். ம.தி.மு.க. தரப்பில் விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை கேட்கிறார்கள். அந்த இரண்டு தொகுதியும் காங்கிரஸ் தொகுதி.
கரூர் தொகுதிக்கு பதிலாக ஈரோடு தொகுதியை கொடுக்க தி.மு.க. சம்மதித்துள்ளது. ஆனால் ஜோதிமணி எம்.பி. ஈரோட்டில் போட்டியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பழைய தொகுதியை தர நாங்கள் தயார். ஆனால் வேட்பாளர்கள் புதிதாக இருக்கவேண்டும். என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் காங்கிர சார் தவிக்கிறார்கள்.