search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis plant"

    • சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது.
    • இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் - மோகனூர் சாலையில் வகுரம்பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சன்னியாசி கரடு என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி தீவன அரவை ஆலை இயங்கி வருகிறது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த அரவை ஆலை வளாகத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டு உள்ளதாக நாமக்கல் நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 கிலோ எடையுள்ள ஒரு கஞ்சா செடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த செடியை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்த போலீசார் இது தொடர்பாக ஆலை உரிமையாளர் குணசேகரன் மற்றும் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,250 கிராம் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை-திண்டிவனம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 23), போளூர் சிவராஜ் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார் (29) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல கண்ணமங்கலம் அருகே குப்பம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த ஜெயசூர்யா (21) என்பவர் கஞ்சா விற்ற போது, கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.

    கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) நந்த குமார் மற்றும் போலீ சார் கஞ்சா மற்றும் போதை பொருள் தடுப்பு சம்பந்த மாக கொக்கு பாளையம் சந்திப்பில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேர் போலீ சாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது, அவர்கள் பண்ருட்டி போலீஸ் லைன் 4-வது தெருவை சேர்ந்த புருஷோத்த மன் (வயது 20), பண்ருட்டி நவீன் குமார் (22) எனதெரியவந்தது.

    இவர்கள் 2 பேரும் சேர்ந்து பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரில் உள்ள முருகன் என்ப வரின் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கைதான வாலிபர் புருஷோத்தமன் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்ப தாவது:-

    நானும் நவீன்குமாரும் சிறு வயது முதல் நண்பர்கள். எங்கள் இருவருக்கும் மது, கஞ்சா பழக்கம் உண்டு. வாரத்தில் 2 நாட்கள் மட்டும் கொத்தனார் வேலைக்கு செல்வேன் மற்ற நாட்களில் அடையாளம் தெரியாத ஆட்கள் கொண்டுவந்து தரும் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வந்தோம் அதில் அதிக லாபம் கிடைத்தது.

    ஒரு முறை சென்னை சென்றபோது அங்கிருந்த ஒருவர் கஞ்சாப் பொட்ட லங்கள் விற்பதால் லாபம் கிடைக்காது கஞ்சா செடி வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கஞ்சா செடி விதை கொடுத்தனர். அதை வளர்க்க எங்கள் வீட்டில் இடம் இல்லாததால் எனது பெரியம்மா வீட்டில் வளர்த்து, அந்த செடியை விற்பனை செய்து வந்தோம். என்று கூறினர்.அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறை யில் அடைத்தனர்.

    செந்துறை அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் வசந்தகுமார் வயது 19. இவர் உடையார் பாளையம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வருகிறார். 

    இவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் அதிகாலையில் வசந்தகுமார் வீட்டை ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் பின்புறம் இரண்டு கஞ்சா செடிகள் இருப்பதை கண்டு பிடித்தார். 

    அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மோகன் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர் வசந்தகுமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
    ×