என் மலர்
நீங்கள் தேடியது "CCTV"
- அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
- கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானாவில் சாலையில் வைத்து, கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான முகமது பஸ்ரத், தனது 22 வயது மனைவி ஷபானா பர்வீனை குடும்பத்தகராறு காரணமாக கோண்டாபூரில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவில், பஸ்ரத் தனது மனைவியை நோக்கி ஓடி வந்து தரையில் தள்ளுவதைக் காண முடிந்தது. இதனால் மனைவி நிலைகுலைந்து கீழே விழுகிறார்.
அதன் பின் அவர் தனது மனைவியை செங்கற்களால் கொலைவெறியுடன் கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது. அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தாக்குதலுக்கு பின் கணவர் தனது பைக்கில் அவ்விடத்தை விட்டுச் சென்றார் .
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுவரை, பஸ்ரத் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான்.
- பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர்.
பெங்களூருவில் ஒரு பெண் இரவில் வெறிச்சோடிய தெருவில் நடந்து சென்றபோது மர்ம நபரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சிசிடிவி காட்சியில், அந்தப் பெண் தனது பெண் தோழியுடன் மங்கலான வெளிச்சம் உள்ள குடியிருப்புப் பகுதியில் நடந்து செல்லும் போது, மர்ம நபர் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான்.
திடீரென்று அப்பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை பிடித்து அத்துமீறலில் ஈடுபட்ட அவன் அங்கிருந்து தப்பி ஓடுகிறான். இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய தோழியும் என்ன நடந்தது என்பதை ஜீரணிக்க முடியால் சில நொடிகள் அசையாமல் நின்றுவிட்டனர். பின் பயத்தில் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.
இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால் நேற்று இதுதொடர்பாக பெங்களூரு காவல்துறை வழக்குப் பதவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
- மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- சாஹூர் (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துக்கொண்டு நின்றார்.
- கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வசாலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடாவில் வசிப்பவர் ஹரிஸ் என்ற கட்டா (25 வயது). வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு வந்த கட்டா அதிகாலை 3.15 மணியளவில் தனது வீட்டின் அருகே சேஹ்ரி (சஹுர்) (ரம்ஜான் நோன்புக்கு முன் முஸ்லிம்கள் சாப்பிடும் அதிகாலை உணவு) சாப்பிட காத்துகொண்டு நின்றார். மற்றொரு நபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கட்டாவை நோக்கி இரண்டு பைக்குகளில் வந்த நால்வர் வந்தனர்.
அவர்களில் ஒருவன் கட்டா மீது துப்பாக்கிசூடு நடத்தினான். இதில் கட்டா சரிந்து கீழே விழுந்தார். கட்டாவுடன் இருந்த மற்றொரு நபர் ஓடிவிட்டார். தொடர்ந்து, பைக்கில் இருந்து இறங்கிய மற்றொருவன் கட்டா இறந்துவிட்டதை உறுதி செய்ய மேலும் பல முறை அவரை நோக்கி சுட்டான். பின் நால்வரும் பைக்கில் ஏறி தப்பினர். அவர்களை மற்றொரு நபர் துரத்திக்கொண்டு ஓடினார்.
இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
- நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக். தொழிலதிபர்.
- சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி 6-வது தெருவை சேர்ந்தவர் சேக்(வயது 60). தொழிலதிபர். சம்பவத் தன்று இவரது வீட்டில் பட்டப்பகலில் 15 வயது சிறுவன் ஒருவன் திருடும் நோக்கத்தில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைக்க முயற்சி செய்துள்ளான்.
திருட முயற்சி
இந்த சத்தம் கேட்டு சேக் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை பார்த்துள்ளார். அப்போது சிறுவன் ஒருவன் வீட்டின் பின்புறம் ஜன்னலை உடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அந்த சிறுவனை பிடிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றார்.
அப்போது ஆட்கள் வரும் சத்தம் கேட்ட சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 7-ந் தேதி ஏர்வாடி பகுதியில் ஒரு ஸ்டூடியோவில் புகுந்த சிறுவன், அங்கு உரிமையாளர் இல்லாததை அறிந்து பணத்தை திருடி சென்றுள்ளான்.
விசாரணை
இந்த 2 சம்பவங்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது. ஏர்வாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவர் களுக்கு கஞ்சா விற்பனை செய்த தாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சிறுவர்களை வைத்து திருட்டு சம்பவத்தில் கும்பல் ஈடுபடுவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவர்களை போலீசார் பிடித்து, அவர்கள் மூலம் திருட்டு கும்பலை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
- மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, மூலப்பாளையம் ரைஸ் மில் சாலையை சேர்ந்தவர் முரளிகண்ணன் (35). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார்.
அப்போது மர்மநபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரொக்கப்பணம் 1.95 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்தனர்.
இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வராஜ் (45). கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.
இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 4.5 பவுன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்தனர். இதற்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் சித்திக் அலி. இவரது வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சித்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க தாலுகா இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
- புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை வழி அனுப்ப வந்தார். இதற்காக மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சி.சி.டி.வி. காமிரா காட்சி
இதற்கிடையே புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் பஸ்நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அதே சிறுவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களை திருடினர். உடனடியாக அவர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
5 மாணவர்கள் சிக்கினர்
அதில் அவர்கள் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலியாக சாவிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது
- தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சின்ன சேலம் பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையம், அம்சாகுளம், நயினார் பாளையம் செல்லும்ரெயி ல்வே கேட் சாலை, கூகையூர் ரோடு, மூங்கில் பாடி சாலை போன்ற முக்கிய இடங்களில் 23 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த குற்றத்தடுப்பு கண்காணிப்பு கேமரா தொடக்க விழாவில் டி.எஸ்.பி. மோகன் ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வளர்ந்து வரும் முக்கிய நகரமாகும். தனிநபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு இது போன்ற பல குற்றங்களை தடுக்க கேமராவின் பங்கு முக்கியமாக கருதப்படுகிறது. தொழில் செய்பவர்கள் அவர்களுடைய சின்னசேலம் பகுதியில் தொடர் திருட்டு செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்ற வருகிறது. பொருத்த வேண்டும் வே என்றார்.. நிகழ்ச்சியில் கூடுதல் டி.எஸ்.பி. ரமேஷ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப் இன்ஸ்பெக்டர் பாரதி, மணிகண்டன், தனிப்பிரிவு காவலர் கணேசன், ராகவேந்திரா நிதி நிறுவன இயக்குனர் ஏ.டி.ஆறுமுகம் மற்றும் போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
- வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.
இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சாகுல் ஹமீது வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார்.
- பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மெயின் பஜார் காமராஜர் பூங்கா எதிரே காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது (49) என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது.
பூட்டு உடைப்பு
அவர் நேற்று காலையில் வழக்கம்போல் கடை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதனுள் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசில் புகார்
இது பற்றி சாகுல் ஹமீது ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பேக்கரி கடையின் சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணத்தை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. அந்த 2 நபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.